நாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன் ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘லாக்கா’ப்பில் இந்திய இளைஞர்களின் தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா? தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின் மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு நேசக்கரம் நீட்டக் கூடாதா?
இன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.
“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.