தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் ( 20, 21, 22 & 23 )

அத்தியாயம் 20 :  நீதிமன்றம்
                
வே.ம.அருச்சுணன் – மலேசியாகணவரின் முகம் கவலையால் மேலும் வாடிப்போகிறது. வாய்ப்பேசமுடியாத  ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார். மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு.  அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.  பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது. அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார்.  நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று! அதிகாலையிலேயே அம்பிகை கொயிலுக்குச் சென்று மகன் விடுதலையாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு முழு நம்பிக்கையுடன் தீர்ப்பைக் கேட்க கணவருடன் வந்திருந்தார்.  பார்த்திபன் நீதிபதி முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதி சில வினாடிகளில் சொல்லப் போகும் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்த்திபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், இறுதியில் பார்த்திபன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.
 

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை – அத்தியாயம் 16 && 17

அத்தியாயம் 16

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்மெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள்,  சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே  தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.

Continue Reading →

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் : வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சி

மேக்ஸ்மிலியன் ரொபேஷ்பியர் :வாசுதேவனின் பிரெஞ்சுப் புரட்சிஇலண்டனில் யமுனா ராஜேந்திரனின் மூன்று நூல்கள் விமர்சன, விவாத அரங்கு!வரலாறு எழுதுதல் எனும் செயல்பாடு கடந்த காலம் பற்றியதாயினும் அது எப்போதுமே எழுதுபவன் வாழும் நிகழ்காலம் குறித்ததாகவே இருக்கிறது. வாசுதேவன் தனது சமகால மனநெருக்கடியிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பிரெஞ்சுப் புரட்சி குறித்த அவரது வரலாற்று நூலை முன்வைத்து ரொபேஷ்பியர் முதல் பிரபாகரன் வரையிலான ஆயுதப் பேராட்டத்திற்குத் தலைமையேற்ற ஆளுமைகளின் நம்பிக்கைகள், நடைமுறைகள், அதீதங்கள் என ஒருவர் உரசிப் பார்த்துக் கொள்ளமுடியும்.  வாசுதேவனின் நூலுக்கு அறிமுகம் எழுதுகிற இந்த இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சிக்கு 225 ஆண்டுகள் நிறைகிறது. 1989 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் இருநூறு ஆண்டு நிறைவு விழா பிரான்சில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்வாறானதொரு நூல் எழுதும் ஆதர்ஷம் தனக்கு ஏற்பட்டது என்கிறார் வாசுதேவன்.  வாசுதேவனுக்கு நிச்சயமாக இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. பிரெஞ்சுப் புரட்சி எதிர்கொண்ட கருத்தியல் மற்றும் நடைமுறைக் கேள்விகள் அனைத்தையும் எதிர்கொண்ட ஒரு விடுதலைப் போராட்டமாக அவரது பூர்வீக நிலம் சார்ந்த ஈழவிடுதலைப் போராட்டம் இருந்தது என்பதுதான் அந்தக் காரணம். பிரெஞ்சுப் புரட்சி குறித்துப் பேசும், நிறைந்த தமிழ்ப் புதுச்சொல்லாக்கங்களும் கவித்துவ மொழியும் கொண்ட இந்த நூலில் ‘போராளிகளின் தற்கொடை, மாவீரர்’ போன்ற சொற்கள் வாசுதேவனிடமிருந்து இயல்பாக வந்து விழுகின்றன.

Continue Reading →

மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஆசிரியர்:டெஸ்மோண்ட் எல். கார்மாவ்பலாங் [ தமிழில்: சுப்ரபாரதிமணியன் ]

– டெஸ்மோண்ட் எல். கார்மான்பலாங் கவிஞர், நாட்டுப்புற கதைகளை எழுதுபவர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் காசி மற்றும் ஆங்கிலத்திலும் இரண்டு மொழியிலும் எழுதுகிறார். ஷில்லாங்கிங்,கின் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகத்தின் வாழ்வியல் மற்றும் கலாச்சார படிப்பினையின் படிப்பவராக உள்ளார். –
 
சுப்ரபாரதிமணியன்திரு.கே.வின் மனதில் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. காரின் ஜன்னலில் தன் பார்வையை பதித்துக் கொண்டு, தெருவில் வரிசையாக இருந்த வீடுகளை பார்த்துக் கொண்டே வந்தார். மக்கள், தனியாக செல்பவர்கள், தோழமை முக பாவத்துடன் இருப்பவர்கள், சிலர் சாலையில் நடந்து கொண்டு, சிலர் கார்களில், தன் கண்களின் முன்னால் நடந்து செல்பவர்களைப் போல் தன் வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் திரைபோல் ஓடின. நிம்மதியில்லாமல். தன்னுடைய சொகுசான காரில், மெதுமெதுப்பான இருக்கையில் சௌகரியமில்லாமல் முணு முணுத்தபடியே அமர்ந்திருந்தார். வாகன ஓட்டுனர், அவரை நன்கு புரிந்து கொண்டவர் போல் வண்டியின் வேகத்தை குறைத்து, ‘என்ன, சார்?’ எனக் கேட்டார். ‘ஒன்றுமில்லை’ என பதிலளித்த திரு.கே- மநதிரிசபையில் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக உள்ளார். ‘பெண் நாய்’ என திட்டினார். இஸபெல்லால் எப்படி இதை செய்யமுடிந்தது. என்னுடைய நிலைமை அவன் உணரவில்லையா? ஒருவேளை அதனால் நடந்தால் என்ன ஆகும்… கடவுளே நினைத்துக் கூட பார்க்க முடியாது! மணல் வெளியில் மென்மையாக அந்தக் கார் சென்று கொண்டிருக்கையில் திரு.கே பின்னோக்கி கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். மதிக்கப்பட்ட தலைமையாசிரியராக அவர் பணியாற்றிய பள்ளி இருந்த கிராமத்தின் அந்தப் பகுதி எம்.எல்.ஏ 5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் சமயத்தில் மட்டுமே நினைவு கூர்வார். திரு.கே- பக்கத்து கிராத்தைச் சேர்த்ததுடிப்பான மற்றும் கடின உழைப்பாளி, வலிமையான கைகளையும் எப்போதும் புன்னகையையும், கொண்ட இளைஞன்.
 

Continue Reading →

தமிழ் ஆழி விமர்சனக்கூட்டத்தி்ல் கலந்துகொள்ள முன்-அழைப்பு

தமிழ் ஆழி விமர்சனக்கூட்டத்தி்ல் கலந்துகொள்ள முன்-அழைப்புநண்பர்களே, தமிழ் ஆழியின் முதல் ஆறு இதழ்களுக்கான விமர்சனக் கூட்டமும் அதன் இணைய தள அறிமுகக்கூட்டமும் விரைவில் சென்னையில் நடக்கவுள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளை மதுரை, கோவையிலும் நடத்த விருப்பம். நிகழ்ச்சியில் இதழ்களை விமர்சித்து பேச விரும்புவர்கள் தெரிவிக்கவும். உங்களிடம் எல்லா இதழ்களும் கையில் இல்லாத பட்சத்தில் பழைய இதழ்களின் பிடிஎஃப் கோப்புகளையும் அனுப்பிவைக்கிறோம். மதுரை, கோவையில் நிகழ்வு ஏற்பாடுகளைச் செய்ய எங்களது தோழமை சக்திகளின் உதவியும் தேவைப்படுகிறது. தமிழ் ஆழி ஜூலை இதழ் சர்வதேச சிறப்பிதழாக உருவாகி, இன்று அச்சுக்கு செல்கிறது. விரைவில் கடைகளில் கிடைக்கும். என்ன செய்யவேண்டும் என நாங்கள் நினைக்கிறோமோ அதில் ஒரு சிறு பகுதியையே செய்துவருகிறோம். என்றாலும் அனைவரின் கருத்துகளைக் கேட்டு, இதழை co-create செய்வது மிகவும் சிறந்தது. அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு உள்பட அனைத்தையும் நீங்கள் விமர்சித்து வழிகாட்டவேண்டும் என விரும்புகிறேன்.

Continue Reading →

குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.  கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

*நிலாந்தன்  *சோலைக்கிளி  *யோ. கர்ணன்  *அ.முத்துலிங்கம் *தமிழ்க்கவி *மு. நித்தியானந்தன்  *சண்முகம் சிவலிங்கம் *ந.இரவீந்திரன்  *ஸர்மிளா ஸெய்யித்  *தேவகாந்தன் *பொ.கருணாகரமூர்த்தி *ஏ.பி.எம். இத்ரீஸ்   *இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  *கற்சுறா  *செல்வம் அருளானந்தம்  *லெனின் மதிவானம் *லிவிங் ஸ்மைல் வித்யா *றியாஸ் குரானா  *எம் .ரிஷான் ஷெரீப்  *ம.நவீன்  *ஓட்டமாவடி அறபாத்  *ஹரி ராஜலட்சுமி  *கருணாகரன்   *மா. சண்முகசிவா  *கறுப்பி  *மோனிகா  *தமயந்தி  *பூங்குழலி வீரன்  *எம்.ஆர்.ஸ்ராலின்   * திருக்கோவில் கவியுவன்  *இராகவன்  *லீனா மணிமேகலை *ராகவன்  *தேவ அபிரா  *கே.பாலமுருகன்  *குமரன்தாஸ்  *விஜி  *யாழன் ஆதி  *லெ. முருகபூபதி *தர்மினி  *ஆதவன் தீட்சண்யா   *அகமது ஃபைசல்  *கலையரசன்  *அ. பாண்டியன்  *அஜித் சி. ஹேரத்    *ச.தில்லை நடேசன்  *எஸ்.எம்.எம்.பஷீர்  *மகேந்திரன் திருவரங்கன்  *மஹாத்மன்  *லதா  *ஷாஜஹான்  *பானுபாரதி *யாழினி *விமல் குழந்தைவேல்  *மேகவண்ணன்  *அஷ்ரஃப் சிஹாப்தீன்  *மெலிஞ்சிமுத்தன்  *யோகி  *அஸ்வகோஷ் *ந.பெரியசாமி *தேவதாசன்  *ராஜன் குறை  *ஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.

Continue Reading →

ரொறன்ரோவில் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு நினைவு விழா! தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை!

தனிநாயகம் அடிகளார்பாரதியார் தித்திக்கும் தமிழில் தெவிட்டாத சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொற் புதிது சோதிமிக்க நவகவிதை என்னாளும் அழியாத மகா கவிதைகள் எழுதித் தமிழ்மொழிக்கு ஒரு புதிய பொலிவும் அழகும் சேர்த்தவர். இலக்கணப் பண்டிதர்களிடம் அகப்பட்டுக் கிடந்த தமிழை பாமரர்களும் சுவைக்கும் படி பாடல்கள் எழுதியவர். ஆனால்,  பாரதியார் கவிஞன் மட்டுமல்ல  அவர் ஒரு சிறந்த கதாசிரியர், கட்டுரையாசியர், மேடைப் பேச்சாளரும் ஆவர்.  பாரதியார் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ போன்ற புலவர்களைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை என்று முரசு  கொட்டியவர். அவர் கம்பர், திருவள்ளுவர், இளங்கோ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு எழுதினார்: “தமிழ் நாட்டில் இது போன்ற விஷயங்களைக் கவனிப்பார் இல்லை. தமிழ் நாட்டு வீரருக்கும் கவிகளுக்கும் லோகோபகாரிகளுக்கும் இதுவரை எவ்விதமான திருவிழாவையும் காணவில்லை. பூர்வீக மகான்களின் ஞாபகத்தைத் தீவிரமான பக்தியுடன் வளர்க்காத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை. தப்பித் தவறி ஓரிருவர் தோன்றினாலும் அவர்களுக்குத் தக்க மதிப்பு இராது. பண்டைக்காலத்து சக்திமான்களை வியப்பதும் அவர்களுடைய தொழிற் பெருமையை உலகறிய முழக்குவதும் கூடியவரை பின்பற்ற முயல்வதுமாகிய பழக்கமே இல்லாத ஜனங்கள் புதிய சாமான்களை என்ன வகையிலே கவனிப்பார்கள்? எதனை விரும்புகிறாமோ அது தோன்றுகிறது. எதை ஆதரிக்கிறோமோ அது வளர்ச்சி பெறுகிறது; பேணாத பண்டம் அழிந்து போகும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்துவிடப்படும். அறிவுடையோரையும் லோகோபகாரிகளையும் வீரரையும் கொண்டாடாத தேசத்தில் அறிவும், லோகோபகாரமும், வீரமும் மங்கிப்போகும்.”

Continue Reading →

சில நினைவுகளும் சிந்தனைகளும்: இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நடந்த கௌரவிப்பு – பாராட்டு விழா

இக்பால்செ.கணேசலிங்கன்டொமினிக் ஜீவாகொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி, முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பதுபேரை கௌரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்தியதாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி. வாழும் காலத்திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரியான செயல். இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது. பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக்கொண்டிருக்கும் சமகாலத்தில் இலங்கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்திவந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்றவுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் – லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின்பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது. அதேசமயம் வலதுகம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள். இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை.

Continue Reading →

சிறுகதை: இட்டிலி

- கமலாதேவி அரவிந்தன் (சிங்கப்பூர்) -மின்சார விசைப்படகிலிருந்து ஒரு துள்ளு துள்ளிக்குதித்து கீழே இறங்கியபோது பீய்ச்சித்தெறித்த தண்ணீர்த்திவலையில் ,கால்முட்டிவரை நனைந்துவிட்டது. நேரம் இன்னும் புலரவில்லை.என்றாலும் ஈர பேண்டுடன் பிரயாணப்பையைத் துக்கிக்கொண்டு நடப்பது கொஞ்சம் சிரமாகத்தான் இருந்தது. இருள் பிரியாத இந்த நேரத்திலும், சில்வண்டுகளா இல்லை,ட்வீட்டிப் பறவைகளா ,என்று அனுமானிக்க முடியாத அந்த கிறீச்சிடல் ரீங்காரம் சிவநேசனை மிகவும் கவர்ந்தது. சுற்றிலும் கடல்சூழ் இந்த தீவில் தான் ஸ்வாமிஜியும், அவரது தொண்டரடிப் பரிவாரங்களும் வாழ்கிறார்கள் என்பது பற்றிய ஆச்சரியங்களையெல்லாம் கடந்துதான் சிவா இங்கு வந்திருக்கிறான். ஒவ்வொரு முறை ஸ்வாமிஜி மலேசியாவுக்கு வரும்போதும் தனி தரிசனத்துக்கு நிறையவே சிரமப்பட்டிருக்கிறான். பகீரதப்ரயத்னத்துக்குப் பிறகு அவரது பிரத்யேக தொண்டரடியிடம் ,ஸ்பெஷல் பாஸ் எனும் கரிசனத்தில் திருமுகம் காணச்சென்றபோதும் சிவநேசனால் ஒன்றுமே மனம் விட்டுப்பேச முடியவில்லை. அப்பொழுதும் சுற்றி அவரது நிழல்போல் அணுக்கத்தொண்டர்கள் நிரம்பியிருக்க சிவ நேசனுக்கு பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தது. ஸ்வாமிஜி, என்று மட்டுமே நாத்தழுதழுக்க ஆசி பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவான். ஸ்வாமிஜி ஏழைகளுக்கு நிரம்ப உதவுபவர். பள்ளிக்கூடங்கள் கட்டியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார்.இந்த உலகில் பிறந்த யாருமே அனாதையில்லை, என்பதாலேயே அனாதை இல்லம் என்ற பெயரைத்தவிர்த்து,”ஸ்வாமிஜி இல்லம்” என்ற பேரில் நிறைய குழந்தைகள் தங்கிப்படிக்க இலவச விடுதி, கல்விசாலை என, அவர் சேவை செய்யாத துறையே இல்லை. உலகின் பல நாடுகளில் அவரது கீர்த்தி பரவியிருந்தது.இதனாலேயே உலகம் முழுக்க பரிசுத்த தொண்டர்கள் இவருக்கு நிரம்பியிருந்தார்கள். அவர்களில் ஒருவராகத் தன்னை நினைப்பதே சிவநேசனுக்கு பெருமையாக இருந்தது.என்ன பேறு பெற்றிருந்தால் இவர் வாழுங்காலத்தில் தானும் ஜனித்திருக்கிறோம் என்பதே அவ்வப்போதைய அவனது பரவசமாக இருந்தது. ஆனால் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மலர்விழியின் கேள்வி வேறாயிருந்தது.

Continue Reading →