‘அன்புள்ள முருகபூபதிக்கு..… கடந்தவாரம் லண்டனிலிருக்கும் மகனிடம் வந்திருக்கிறோம். பேரக்குழந்தையின் பிரசவம் முடிந்தது. ஆவன செய்தபின் பிரான்ஸ் திரும்புவோம். பெண் குழந்தை கிடைத்திருக்கிறது. வந்த இடத்தில் உடல்நலம் பாதிக்காதவகையில் இலக்கியக் கூட்டங்களுக்கும் பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள். பின் விபரம் அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன். நன்றி.’ – இது நண்பர் அகஸ்தியர் 22-08-1995 இல் எனக்கு எழுதிய கடிதம். அகஸ்தியர் எனக்கு எழுதிய இறுதிக்கடிதம் இதுதான் என்பதை 09-12-1995 ஆம் திகதி இரவு நண்பர் பாரிஸ் ஈழநாடு குகநாதன் தொலைபேசியில் அகஸ்தியரின் மறைவுச்செய்தி சொல்லும் வரையில் நான் தீர்மானிக்கவில்லை. அகஸ்தியர் முதல்நாள் பாரிஸ் நகரத்தையே ஸ்தம்பிக்கவைத்த வேலைநிறுத்த காலப்பகுதியில் டிசம்பர் 8 ஆம் திகதி மறைந்தார். அகஸ்தியரின் புதல்வி ஜெகனியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல்கூறி நானும் ஆறுதல்பெற்றேன். நீண்ட காலமாக நாம் புலம்பெயர்ந்திருந்தாலும் பேசிக்கொண்டது கடிதங்கள் வாயிலாகத்தான். அதற்கும் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு விடைபெற்றார். ஈழத்து இலக்கிய உலகில் மூத்த தலைமுறையைச்சேர்ந்தவராயினும் இளம்தலைமுறையினருடன் ஒரு குழந்தையைப்போன்று வெள்ளைச்சிரிப்புடன் (சிரிப்பிலும் பலவகையுண்டு) மனந்திறந்து பேசும் இயல்புள்ளவர்.
அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம். வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன. அம் மக்களின் முகங்களில் நிச்சயமற்ற தன்மையின் சாயல் படிந்திருந்தது. இடைக்கிடையே, உடைந்துபோன மதில்களில் சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் நெருங்கி வரும் தேர்தலை எமக்கு ஞாபகமூட்டுகின்றன. அவை அநேகமாக ஆளும்கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளே. கிளிநொச்சியானது நீண்டகாலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பிரதேசமாகும். இப்பொழுது நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலானது, இங்குள்ள சிலர் 30 வருட காலத்துக்குப் பின்னர் முகம் கொடுக்கப் போகும் முதல் தேர்தலாகும். எனினும் அவர்கள் அதனை மிகப் பெறுமதியான ஒன்றாகக் கருதுவதில்லை. தேர்தல் எனப்படுவது, ஜனநாயக ஆட்சி முறையின் முதல் இலட்சணமாகும். எனினும் எமது பயண இலக்குகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் இன்னும் சிவில் ஆட்சி முறையிலிருந்து தூரப்படுத்தப்பட்ட, இராணுவ ஆட்சியின் கீழ், துயருறும் வாழ்க்கையை நடத்திச் செல்லும், கடந்த கால குரூர யுத்தத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்தும்படியாக இருண்டுபோன பிரதேசங்களாகும்.
உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான(தரம் 8 முதல் 12 வரை) பயிற்சிப்பட்டறையை (WORKSHOP – 2013) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா இலவசமாக நடத்த…