ஈழத்தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின்
அழகு கண்டு
அதிலே மொய்க்கும் வண்டின்,
மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும்
ஆம்பலின் நிலை கண்டு
கவிதை வரைவதற்கு
நான்
நீ நினைக்கும்
கவிஞன் அல்ல.
வரிகள் போல, மற்ற பலரின் கவிதைகள் அனுபவ சத்தியமும் கொண்டதல்ல. கவிதையாவதும் இல்லை. மாதிரிக்கு இதோ ஒன்று.
தென்கடல் ஓரம்,
திகழும் நிலாக்கொழுந்தே
துரத்தே எம் தீவு இன்று
துயராடும் தனித் திடல்.