அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது
வாஸந்தியின் நாவல், “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும் மேல், நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம் சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி என்றும் தேவரடியாள் என்றும் அழகான பெயர் சூட்டி நடனத்தின், சங்கீதத்தின் பக்தியின் உறைவிடமாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்தாபனம் தேவடியாளாகச் சீரழிந்தற்கு, அல்ல, சீரழிக்கப் பட்டதற்கு நம் குணமும் பார்வையுமே தான் காரணமாகியுள்ளன என்பதை நாம் ஒரு போதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சீரழிவைப் பார்த்து பொறுக்காத சீர்திருத்த மனம் கொண்டவர்கள் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டம் கொண்டு வந்த காலத்திலும் கூட ஸ்தாபனம் நிறைய உன்னத கலைஞர்களை பிறப்பித்து பாதுகாத்து வந்திருந்தது. நம் சங்கீதமே அவர்களிடமும் வாழ்ந்திருந்து வந்திருக்கிறது. தீக்ஷிதரும் சியாமா சாஸ்திரிகளும் சங்கீதம் பெற்றதும், பகிர்ந்து கொண்டதும், கொடுத்ததும் தேவதாசிகள் பாதுகாத்து வந்த அந்த சூழலில் தான். அவர்களுடன் சங்கீதம் கற்றதும், தீக்ஷிதரிடமிருந்து சிக்ஷை பெற்றதும் தேவதாசிகளும் தான். படித்திருக்கிறேன். உலகம் முழுதும் தன் நாட்டியத்தை எடுத்துச் சென்ற உதய் சங்கர் ஏதும் முறையாக நாட்டியம் பயின்றவர் அல்லர். அவருக்குக் கிடைத்தது ஆனந்த குமாரஸ்வாமி எழுதிய Mirror of Gestures புத்தகம். ஆனந்த குமாரஸ்வாமிக்கு அந்த புத்தகம் எழுத அபிநயங்கள் பற்றிச் சொன்னது மைலாப்பூர் கௌரி அம்மாள் என்ற தேவதாசி.
‘தனது அயராத முயற்சியினாலும், சேவை மனப்பாண்மையோடும் எல்லோருக்கும் உதவி செய்யும் மனம் படைத்த சர்வலோகேஸ்வரிக்கு கிங்ஸ்ரன் மேயரின் விருது கிடைத்திருப்பதென்பது, தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளவேண்டிய விடயம், அவரது பல்வேறு சேவைகளையும் எடுத்துரைத்த’ திருமதி மங்கயற்கரசி அமிர்தலிங்கத்தின் ஆரம்ப உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
‘தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமன்றி பிற சமுதாயத்தினரையும் மனிதப்பண்போடு நேசித்து, எல்லோருக்கும்; தன்னால் முடிந்த வகையில் உதவிகள் புரிந்து வரும் சர்வலோகேஸ்வரியின் பண்பு பாராட்டுக்குரியது. ஆரம்பகாலங்களில் லண்டனில் ஆசிரியையாகப் பணிபுரிந்த சர்வலோகேஸ்வரி பின்னைய நாட்களில் வைத்தியசாலை, பொலிஸ் நிலையங்கள் என ஆங்கில மொழி பேசுவதற்கு அவதியுறும் தமிழ் மக்களுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணிகள் புரிந்தவர். தனது குடும்பம், சொந்த விடயங்கள் என நின்றுவிடாது மற்றவர்களுக்கு பணிபுரியும் மனங்கொண்ட சர்வலோகேஸ்வரி அவர்கள் கிங்ஸ்ரன் மேயரால் விருது வழங்கி பாராட்டப்பட்டமை எமக்கு மிக மகிழ்சி தருகின்ற விடயம்’ என சமூகசேவையாளர் திரு. தணிகாசலம் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.
அண்மையில் த.தர்மகுலசிங்கத்தின் மித்ர வெளியீடாக வெளிவந்த ‘தேடல்: சில உண்மைகள்’ என்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய , குறிப்பாக மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.பொ.வின் பங்களிப்பு பற்றிய நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நூலுக்கு முக்கியமானதொரு சிறப்பு உண்டு. எஸ்.பொ. பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருடனான நூலாசிரியரின் நேர்காணலினோடு வெளிப்படுவது…தான் தானந்தச் சிறப்பு. எஸ்.பொ. அவர்களின் உரையினை அவர் பல வருடங்களுக்கு முன்னர் கனடா வந்திருந்த சமயம் வந்திருந்தபோது கேட்டிருக்கின்றேன். நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுவதுபோல் எஸ்.பொ. அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர். ஆசிரியராக இருந்தபடியால் அவரது உரையும் மாணாக்கர்களுக்கு பாடங்கள் எடுப்பதுபோல் தர்க்கச்சிறப்பு மிக்கதாக இருந்ததாக அச்சமயம் உணர்ந்தேன். அதன்பின்னர் அவரை அவரது சகோதரரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை பற்றி, திருமணம் பற்றி, ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடினார். மறக்க முடியாத சந்திப்பு.
சாரல்நாடலின் ‘மலைய இலக்கியம் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் சிறு நூலினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ‘சாரல் வெளியீட்டகம்’ (கொட்டகலை, இலங்கை) வெளியீடாக வெளிவந்த இந்த நூலில் சாரல்நாடன் மலையக இலக்கியத்தின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றார். இந்நூலில் மலையக இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பிறபகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் ஓரளவு குறிப்பிட்டுள்ளார் சாரல்நாடன். மலையக இலக்கியத்துக்குப் பிற பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பங்களிப்பு பற்றிய விடயத்தில் அவருக்குப் போதிய பரிச்சயமில்லையென்பதை நூல் வெளிப்படுத்துகின்றது. மலையக மக்கள் பற்றிய நாவல்கள் படைத்த எழுத்தாளர் நந்தி, புலோலியூர் சதாசிவம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அட்டனின் நடைபெற்ற ‘ஏனிந்தப் பெருமூச்சு’ கவியரங்கில் பங்குபற்றிய கவிஞர் கந்தவனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மலையகம் பற்றிப் பாடிய வி.கந்தவனம் என்று குறிப்பிடுகின்றார். அட்டன் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கடமையாற்றிய எழுத்தாளர் சொக்கன், நவாலியூர் நா.செல்லத்துரை பற்றிக் குறிப்பிடுகின்றார். ஆனால் மலையகத் தொழிலாளர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றிய முக்கியமான ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர் ஒருவரைப் பற்றி, மலையக மக்கள் பற்றிக் கவிதைகள், சிறுகதைகள் படைத்த எழுத்தாளரைப் பற்றி , இறப்பதற்கு முன்னர் தோட்டத்தொழிலாளர்கள் பற்றிய நாவலொன்றினை எழுதிய முக்கியமான எழுத்தாளரைப் பற்றி நூலாசிரியர் சாரல்நாடனுக்குத் தெரியவில்லையென்பது ஆச்சரியத்தைத் தருகின்றது. இவ்விதமான விடுபடுதல்களால் நட்டப்படுவது இவ்விதமான நூல்கள்தாம். இவ்விதமான நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள்தாம். இவ்விதம் சாரல்நாடனின் கண்களில் தென்படாமல் விடுபட்டுப் போன எழுத்தாளர் வேறு யாருமல்லர் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளிலொருவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.கந்தசாமிதான்.
Prime Minister Stephen Harper today issued the following statement after learning that celebrated Canadian author Farley Mowat had passed away:…
தமிழிசையின் சிறப்புகளைத் தமிழகம் முழுவதும் பாடிப் பரப்பிய இசையறிஞர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவார். இவர் ஆராய்ச்சியறிஞராகவும், பாடுதுறையில் வல்லுநராகவும் விளங்கியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள், திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்களில் இருந்த தமிழிசைக் கூறுகளை மக்களுக்குச் சிறப்பாக அறிமுகப்படுத்தியவர்.
குடந்தை ப. சுந்தரேசனார் கும்பகோணத்தில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி, சமற்கிருத மொழிகளை அறிந்தவர். யாழ்நூல் ஆசிரியர் விபுலானந்தரின் மாணவராக இருந்து அடிகளாரின் தமிழிசை குறித்த கண்டுபிடிப்புகளை மக்களுக்கு எடுத்துரைத்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையிலும் விரிவுரையாளராக இருந்து மாணவர்களுக்குத் தேவார இசை பயிற்றுவித்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி அறிஞராகச் சிலகாலம் பணிபுரிந்தவர். அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் விருப்பப்படி இவர் பஞ்சமரபு என்ற அரிய நூலுக்கு உரை எழுதிய பெருமைக்குரியவர். சைவ, வைணவ இலக்கியங்களில் மிகுந்த புலமையுடைய இவரின் நூற்றாண்டு 28. 04. 2014 முதல் தொடங்க உள்ளது. இவரின் தமிழிசைப் பணியை மக்களுக்கு நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் இவரின் நூற்றாண்டு விழாவை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்க – இந்திய ஒன்றியமும், புதுச்சேரி இலக்கிய வட்டமும் இணைந்து வரும் 17. 05. 2014 சனிக்கிழமை மாலை ஆறு மணிமுதல் செயராம் ஓட்டலில் நடத்துகின்றன.
கனடிய இலக்கிய ஆளுமைகளிலொருவரும், தீவிர சூழலியலாளருமான ஃபார்லி மோவாட் தனது 92வது வயதில், போர்ட் ஹோப், ஒண்டாரியோவிலுள்ள தனது இல்லத்தில் மே 7, 2014, செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். இவர் தனது வாழ்நாளில் 45 நூல்களை எழுதியுள்ளார். அவரது நாவல்கள் சூழலியல் போராட்டங்கள், சாகசப் பயணங்கள் மற்றும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றியதாகவிருக்கும். அவரது நாவல்கள் உலகின் பலபகுதிகளிலும் 17 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. மேலும் 20ற்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. Never Cry Wolf, The Snow Walker மற்றும் Lost in the Barrens ஆகியன குறிப்பிடத்தக்கன. இவரது நூல்கள் பெரும்பாலும் இவரது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவானவையே. இவரது புகழ்பெற்ற நூலான Never Cry Wolf ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது நூல்களை வெளியிட்டு வந்த McClelland & Stewart inc. பதிப்பகத்தினர் ஃபார்லி மோவாட் பற்றி குறிப்பிடும்போது தங்கள் பதிப்பகத்திற்கு நன்கு பயனுள்ளவராகவும், நீண்ட காலத்தொடர்பு மிக்கவராகவும் விளங்கியவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவர் இரண்டாம் உலக யுத்தத்தில் தன் இராணுவ சேவையினை வழங்கியவர். அதன் பின்னரே எழுத்துத் துறைக்கு வந்தவர். பயணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் ஃபார்லி மோவாட்.
கனடாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள், தங்களது சொந்த நாடுகளுக்கு, சொந்த நாடுகள் வழங்கிய கடவுச்சீட்டுகளுடன் அடிக்கடி பயணித்திருந்தால் அவர்களது அகதி அந்தஸ்து, நிரந்தரக் குடியுரிமை ஆகியன ரத்துச் செய்யப்படும் அபாயமுள்ளது. அதே சமயம் அகதி அந்தஸ்து கிடைத்தபின்னர் , அவர்களது சொந்த நாடுகளில் சமாதானம் ஏற்பட்டிருந்தால், அகதி அந்தஸ்து நீக்கப்படும். ஆனால், நிரந்தரக் குடியுரிமை நீக்கப்பட மாட்டாது. அகதி அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கடந்தபின்னர் கூட அவர்கள் சொந்த நாடுகளுக்குப் பயணித்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களது அகதி அந்தஸ்து நீக்கப்படும் அபாயமுள்ளது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 875 அகதிகளுக்கெதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கக் கனடிய எல்லைச் சேவை நிறுவனம் திட சங்கற்பம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்களுக்குக் கீழுள்ள கட்டுரையினை வாசித்துப் பார்க்கவும். Canadianimmigrant என்னும் இலவச மாத சஞ்சிகையில் வெளியான கட்டுரையிது.
மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் பட்டறை பெற்றோர்கள், மற்றும் பங்குபற்றும் மணவர்களுடனான சந்திப்பாகவும், ஐயம் தெளிதல் நிகழ்வாகவும் அமைந்தது. இரண்டாவது பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த பாடகர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விஜே தொலைக்காட்சியில் சுப்பசிங்கர் இசைப் போட்டிக்கு நடுவராகக் கடமையாற்றிய அனுபவசாலியான அவர், போட்டியில் பங்கு பற்றும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் தேவை கருதிச் சிறப்பானதொரு உரையாற்றினார். அவர் தனது உரையில் போட்டிக்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த எப்படி மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும், ஒவ்வொரு மாணவரும் எப்படித் தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும், இதை ஒரு போட்டி என்று எடுத்துக் கொள்ளாமல் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு தனது உரையில் விளக்கம் தந்தார்.