வாசிப்பு மனிதனைச் சீர்மியம் செய்யும். ஒரு நூலை நான் அண்மையில் வாசித்தபோது இக்கருத்து எனக்குத் தெளிவாகிற்று. தமிழ் இலக்கியங்களின் ஆக்கத்தில் சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றி நீண்ட காலமாகிவிட்டது. உரைநடை இலக்கியம் என்பதால் சிறுகதையைத் தமிழ் அறிந்தவர் எல்லோருமே படிக்க முடியும். சிறுகதையை நாம் படித்து முடித்த பின்னர் அது எம் உள்ளத்திலே ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்குமானால் அது ஒரு சிறந்த சிறுகதை என்பதை உணரமுடிகிறது. அத்தகைய எண்ணத்தை அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுப்பின் மூலம் பெற்றேன். அகில் என்னும் புலம்பெயர்ந்த இளம் எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பு “கூடுகள் சிதைந்தபோது” என்ற பெயரில் 2011ல் வெளியிடப்பட்டது. ஆறு மாதங்களில் இரண்டாவது பதிப்பும் வெளியிடப்பட்டது. இது வாசகரிடையே இச்சிறுகதைத் தொகுப்பின் தேவையை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர் எழுத்து என்ற நிலையில் மட்டுமன்றி இளம் எழுத்தாளரின் ஆக்கம் என்ற நிலையில் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் நான் என் பார்வையைச் சற்று ஆழமாகவே பதித்தேன். 14 சிறுகதைகள். அவற்றில் இரண்டு 2008ல் எழுதப்பட்டவை. ஒன்று 2009ல் எழுதப்பட்டது. ஒன்பது 2010ல் எழுதப்பட்டவை. இரண்டு 2011ல் எழுதப்பட்டவை. இச்செய்தியைத் தொகுப்பே பதிவு செய்துள்ளது.
சிட்னியிலிருந்து 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில் எழுத்தும் எழுத்தாளரும் என்ற நிகழ்ச்சிக்காக ( நேரடி ஒலிப்பதிவு – நேரடி ஒலிபரப்பு ) என்னை பேட்டிகண்ட குறிப்பிட்ட வானொலி ஒலிபரப்பு ஊடகவியலாளர் நண்பர் செ.பாஸ்கரன் பேட்டியின் இறுதியில் ஒரு கேள்வி – ஆனால் ஒரே பதில் தரவேண்டும் என்றார். கேளுங்கள் என்றேன். உங்களுக்குப் பெரிதும் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் யார்? – இதுதான் கேள்வி. என்னை மிகவும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கிய கேள்வி. உடனடியாக பதில் சொல்ல சற்று தயங்கினேன். கருத்துமுரண்பாடுகளுக்கு அப்பாலும் எனக்குப்பிடித்தமான பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.எனது திரும்பிப்பார்க்கின்றேன் தொடரில் இடம்பெறும் பல எழுத்தாளர்கள் எனக்கு பிடித்தமானவர்கள்தான். ஆனால் – எனக்குப்பிடித்த ஒரு எழுத்தாளரின் பெயரையும் ஏன் அவரை எனக்குப்பிடித்தது என்றும் சொல்ல வேண்டும். சில கணங்கள் யோசிக்கவைத்த கேள்வி அது. எனது மௌனத்தைப்பார்த்துவிட்டு மீண்டும் – உங்களுக்குப்பிடித்தமான தமிழ் எழுத்தாளர் யார்? சொல்லுங்கள் என்றார் பாஸ்கரன். எனக்குப் பெரிதும் பிடித்தமான எழுத்தாளர் குரும்பசிட்டி இரசிகமணி கனகசெந்திநாதன் எனச்சொன்னேன். உடனே அவர் தனக்குப்பிடித்தமான எழுத்தாளர் மு. தளையசிங்கம் என்றார். எனக்கும் அவரை நன்கு பிடிக்கும் என்றேன்.
இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!
1. பூலோக வாசிகள்
வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க…
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
தொழிலாளர் போராட்டம்
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்
1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன.