கவிஞர் சோ. பத்மநாதன் மொழிபெயர்த்த Sri Lankan Tamil Poetry

கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட)…

Continue Reading →

பேசாமொழி 31வது இதழ் வெளியாகிவிட்டது…

நண்பர்களே, பேசாமொழி இணைய இதழின் 31வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் மிக சரியாக 1ஆம் தேதி இதழ் இணையத்தில் வெளியாகும். பேசாமொழி இனி…

Continue Reading →

அபலைப் பெண்ணுக்கு விடுதலை !

இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து,…

Continue Reading →

கதை கண்டே காப்பியங்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)‘கதை’ என்ற  சொல்லுக்கு  சிறுகதை,  குறுங்கதை,  தொடர்கதை,  பெரியசரித்திரம்,   காப்பியம், சிறு காப்பியம், சென்றகால  வரலாறு, கட்டுக்கதை,  உரையாடல், மனத்தை   நெகிழ வைக்கும் கதை, நிகழ்வொன்றினைக் கற்பனை கலந்து சுவைபடக் கூறுவது, நிகழ்ச்சி, செய்தி, கட்டுரை, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், நொடிக்கதை,  உபகதை, சாட்டுரை, புனைவுரை, பழங்கதை, புனைகதை,  அருங்கதை ஆகியவற்றைப்  பொருளாகக் கூறுவர்.  மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு நூல்களும் பாரதநாட்டின் இரு கண்கள். இவ்விரு நூல்களும் உலகம் போற்றும் ஒப்பற்ற இதிகாசங்கள். இதிகாசம் என்பது பழங்காலச் சரித்திரம். இதிகாசம் என்பதின் பொருளே ‘இவ்வாறு நடந்தது’ என்பதாகும். மகாபாரதம், இராமாயணத்தை விடப் பெரியது. இதில் ஓர் இலட்சம் சுலோகங்கள் உள்ளன. ஆனால் இராமாயணம் காலத்தால் முந்தியது. மனிதகுல தர்மங்களை, வாழ்வியல் நீதிகளை, அறநெறிகளை வியாச பகவான் மகாபாரதம் வாயிலாகவும், வால்மீகி இராமாயணம் வாயிலாகவும் வழங்கியுள்ளனர்.

இன்னும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதுபோலவே சங்கமருவிய காலத்திலெழுந்த திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னிலை (இதைச் சிலர் சேர்ப்பதில்லை) ஆகிய பதினெட்டு நூல்கள் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. இவைகளும் சங்க இலக்கியங்களே. இவ்வாறான முப்பத்தாறு (36) நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறிப் பெருமைப்படுபவன் தமிழனே. இவற்றையடுத்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,  குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் நூல்களையும் ஐம்பெரும் காப்பியங்கள் என்றழைத்தனர். மேலும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய ஐந்து சிறு நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைத்தனர்.

Continue Reading →

தொடர் கட்டுரை: பயணியின் பார்வையில் (1)

” சிங்கப்பூர்    இளையர்கள்  அரசியலில்  பிரதிநிதித்துவம்  ஏற்று  தமிழ் மொழியின்  முக்கியத்துவத்தை     தமிழ் பேசும்  மக்களிடம்  கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் ” –  சிங்கை  இளம்  தலைமுறையின் குரல்

ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த  தும்பிகளின்
கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ   மோதிச்சிதைந்தது –   அனார்
         
இலங்கைப்பயணத்தின் வழியில் சில காட்சிகள்
          
முருகபூபதிதாயகத்தில்  –  இல்லை…  இல்லை ….இரவல்    தாய்   நாட்டில் மீண்டும் ஒரு  தொடர்ச்சியான   பயணத்துக்கு  தயாரானேன்.    நான்   நீண்ட காலமாக   அங்கம்  வகிக்கும்  அவுஸ்திரேலியாவில்  இயங்கும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  சில முக்கிய பணிகளுக்காக   என்னை இந்த  அமைப்பு  அனுப்பிவைத்தது. 2015    முற்பகுதியில்,  அதாவது  கடந்த  ஜனவரி  மாதம் செல்லவேண்டும்  என்றுதான்  முதலில்  தீர்மானம்  இருந்தது. ஆனால்,  ஜனவரி  8  ஆம்   திகதி  இலங்கையில்  ஜனாதிபதித்தேர்தல்.    இலங்கையில் ,  குறிப்பாக  தென்கிழக்கு ஆசியாவில்    தேர்தல்  வருகிறது  என்றால்  அக்காலப்பகுதியில் அங்கு   பயணிப்பவர்கள்  முன்னெச்சரிக்கையுடன்  இருத்தல் வேண்டும்    என்பது  எழுதப்படாத  விதியல்லவா…? அரசும்   அதிகார  பீடமும்  மாறுவது  வீடு   மாறுவதற்கு  ஒப்பானதாக என்றைக்கு   நடைபெறும்   என்பது  வெறும்  கனவுதான் அவுஸ்திரேலியாவில்   அரசு  தேர்தலில்  மாறும்பொழுது  வீடு மாறிச்செல்லும்    உணர்வுதான்    வருகிறது.   இலங்கையில்   இம்முறை    ஜனநாயகம்  பாதுகாக்கப்பட்டதுதான்    பெரிய  நிம்மதி. இல்லையேல்….   வழக்கம்போன்று    சிறுபான்மை    இனத்தவரின் தலையில்தான்    விடிந்திருக்கும்.  முன்பெல்லாம்   எனது   சொந்தச்செலவில்  விமான  டிக்கட் பெற்றுச்சென்றேன்.   ஆனால்,  தற்பொழுது  தொழிலும்  இல்லாமல் மருந்து  மாத்திரைகளுடனும்  இன்சுலினுடனும் அல்லாடிக்கொண்டிருக்கையில்   வழங்கப்பட்ட  பொறுப்பை நிறைவேற்றவேண்டும்    என்ற  கடமை  உணர்வே   முன்னின்றது.

Continue Reading →