தமிழ் ஸ்டுடியோ அருண் – இணையப்பக்கம்

தமிழ் ஸ்டுடியோ இணையத்தளம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அதில் எனக்கான புதிய பக்கம் ஒன்றையும் தயார் செய்துக்கொன்டுள்ளேன். இனி முக்கியமான கட்டுரைகளை என்னுடைய பக்கத்திலேயே எழுதுவதாக உத்தேசம். இனி…

Continue Reading →

எமிலி ஸோலாவின் ‘நானா’! | தமிழில் அ.ந.கந்தசாமி

அத்தியாயம் நான்கு : குட்டிக் காதலன்

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவரான அறிஞர் அ.ந.கந்தசாமி புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலி ஸோலாவின் 'நானா' நாவலை மொழிபெயர்த்துச் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளியிட்டார். அ.ந.க. பல மொழிபெயர்ப்புகளைப் பணிநிமித்தமும், எழுத்துக்காகவும் செய்துள்ளாரென்று அறிய முடிகிறது. அவற்றில் பெட்ராண்ட் ரஸலின் 'யூத அராபிய உறவுகள்', சீனத்து நாவலான 'பொம்மை வீடு', மேலும் பல கவிதைகள், மற்றும் 'சோலாவின் 'நானா' போன்றவற்றைப் பற்றிய தகவல்களே கிடைக்கப்பெறுகின்றன. அ.ந.க.வின் 'நானா'வின் , எமக்குக் கிடைத்த பகுதிகளை' ஒரு பதிவுக்காக பதிவுகளில் பதிவு செய்கின்றோம்.நாவல்: 'நானா'!நானா சீறியதற்குப் பதிலாக எதுவுமே சொல்லவில்லை ஸோ. அவளுக்கு இருந்த ஒரே ஒரு கவலை எஜமானியின் நாசுக்கற்ற கூச்சல் வீட்டிற்கு வந்திருந்த நானாவின் அபிமானிகளின் காதில் விழுந்து , அவர்களது அபிமானம் கெட்டுவிடக் கூடாதே என்பதேயாகும்.

“ஷ்… இரைந்து பேசாதீர்கள்!” என்று சைகை செய்தாள் ஸோ. “ஆட்கள் வெளியில் இருக்கிறார்கள்” என்று மேலும் தொடர்ந்து கூறினாள்.

நானா குரலைத் தாழ்த்திக் கொண்டு ஸோவின் புகார்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். ” நான் என்ன தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? அவன் விடமாட்டேன் என்று மல்லுக்கட்டினான். எனது நிலையில் நீங்கள் இருந்திருந்தால் அல்லவா தெரியும்? எனக்கு வந்த கோபத்தில் அவன் கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளிவிடலாமா என்றிருந்தது. அதுதான் சனியன் முடிந்ததென்றாலும் இங்கே வருவதற்கு வண்டி கிடைக்கவில்லை. ஓட்டமும், நடையுமாக வந்திருக்கிறேன்.” என்று தன் கஷ்ட்டங்களை விபரித்துக் கூறினாள் நானா.

பேசி முடிந்ததும் “பணம் கிடைத்தா?” என்று கேட்டாள் லெராட் மாமி.

“நல்ல கேள்வி” என்றாள் நானா எரிச்சலுடன்.

அவள் கால்கள் ஓய்ந்து அலுத்துப் போய் இருந்தன. உயிரும் உணர்வுமற்று அசதியுடன் ஒரு நாற்காழியில் தொப்பென்று விழுந்து உட்கார்ந்தாள் அவள். சட்டையுள்ளே மெல்லக் கையை விட்டு ஒரு கவரை வெளியே இழுத்தெடுத்தாள். மொத்தம் நானூறு பிராங்குகள் அதில் இருந்தன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 85: ஆனந்த் பிரசாத்தின் ‘ஒரு சுயதரிசனம்’

எழுத்தாளர் ஆனந்த் பிரசாத் கவிதைகள் புனைவதிலும் வல்லவர். இவர் எழுதிய 21 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று ‘ஒரு சுயதரிசனம்’ என்னும் பெயரில் 1992இல் கனடாவில் ‘காலம்’ சஞ்சிகையின் வெளியீடாக வெளிவந்துள்ளது. அக்காலகட்டத்தில் ‘காலம்’ சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், ‘காலம்’ சஞ்சிகை வெளிவருவதற்கு முக்கிய காரணகர்த்தாக்களிலொருவராகவும் இவர் விளங்கியிருப்பதை நூலின் ஆரம்பத்தில் ‘காலம்’ சஞ்சிகை ஆசிரியர் செல்வம் எழுதிய குறிப்பிலிருந்து அறிய முடிகின்றது.

மேற்படி நூலினை அவர் சமர்ப்பித்துள்ள பாங்கு நினைவிலெப்போதும் நிற்க வைத்துவிடும் தன்மை மிக்கது. நூலுக்கான சமர்ப்பணத்தில் அவர் “அதிருஷ்ட்டங்கள் வந்து நான் அறியாமைக்குள் அமிழ்ந்து போகாது என்னைத்தடுத்தாட்கொண்ட துரதிருஷ்ட்டங்களுக்கு’ என்று நூலினைத்தனக்கேற்பட்ட துரதிருஷ்ட்டங்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். நான் அறிந்த வரையில் இவ்விதம் துரதிருஷ்ட்டங்களு நூலொன்றைச் சமர்ப்பணம் செய்த எழுத்தாளரென்றால் அவர் இவராக மட்டுமேயிருப்பாரென்று எண்ணுகின்றேன்.

இக்கவிதைத்தொகுதியிலுள்ள் இவரது கவிதைகள் பல புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வு பற்றிப்பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக ‘பொறியியலாளன்’,  ‘அகதி’, ‘ஒரு சுயதரிசனம்’, மற்றும் ‘ஒரு Academic இன் ஆதங்கம்'(நூலில் acadamic என்று அச்சுப்பிழையேற்பட்டுள்ளது) ஆகிய கவிதைகளைச்சுட்டிக்காட்டலாம். கவிஞர் கனடாவுக்கு வந்த புதிதில் எழுதப்பட்ட கவிதைகள் என்பதால் அக்காலகட்டத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாகவுமிவற்றைக்கொள்ளலாம்.

Continue Reading →

நினைவேற்றம் 4

 -தேவகாந்தன்-   ஐயாவின் மரணத்துக்குப் பிறகு எனக்கு மிச்சமாகிப் போனவை அவரது நினைவும்,அவர் பாவித்த ஒரு பழைய சைக்கிளும்தான். முன்பே சைக்கிள் எடுத்து ஓடித்திரிய வீட்டிலே எனக்குக் கட்டுப்பாடிருந்தது. இப்போது அம்மா பெரும்பாலும் தன் சோகத்துள் இருந்த நிலையில் நான் கட்டறுத்தவனாய் திசையெங்கும் அலைந்து திரிந்தேன்.  இப்பவோ அப்பவோ ஒருபொழுதில் என் குடும்பத்தாருடன் காரிலும்,பஸ்ஸிலுமாய் நான் கலகலத்துச் சென்ற பாதைகளின் காடும்,வயலும்,வெளியும் பேசிய மௌனத்தின் சுவை என் அலைவின் தனிமையில் எனக்குச் சுகிப்பாயிற்று. மாலையின் மஞ்சள் வெளிச்சங்களில் மட்டுமில்லை,நிலாவின் மென்னொளி இரவுகளும்கூட என் அலைதல் காலமாயிற்று. கதைகளிலும்,கட்டுரைகளிலும் வாசித்து ரசித்த நிலக் காட்சிகளின் நிதர்சனம் மேலும்மேலுமாக இயற்கையின்மீதான என் ருசியினை ஏற்றிற்று. பள்ளிப் பாடங்கள் தவிர்ந்த புத்தக வாசிப்பும்,பள்ளிக்குச் செல்லாமலே மேற்கொண்ட ஊர் அலைவும் எனக்குள் ஒரு புதிய உலகத்தைத் திறந்தபோதும்,அதை சரியாகப் புரிந்துகொள்ள முடியாதவனாகத்தான் நான் இருந்தேனென்று நினைக்கிறேன். ஒரு இலக்கு நோக்கியல்லாமல் வெறும் அலைதலாக அது இருந்தது. அப்படியேதாவது பலன் அதிலிருக்குமாயிருந்தாலும் அதன் பேறு உடனடியாக அறுவடைக்குச் சாத்தியமாவதுமல்ல. பன்னிரண்டு வயதில் ஒரு செல்நெறியை நான் உணர்ந்து உள்வாங்கிவிட முடியாது. அதற்கான காலம் வரவேண்டியிருந்தது.

Continue Reading →

லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’

லண்டனில் வெள்ளிவிழாக் கண்ட ‘கலாநிகேதம்’

 ‘கலையின் மதிப்பிற்குரியவர்களாகத்; திகழும்;; மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிப்பினையை இவ் வெள்ளிவிழாவினுடாக இன்றைய நவீன சூழ்நிலையிலும் ஸ்ரீமதி விநோதினி பரதன் முன்னிறுத்துவதை அவதானிக்க முடிகிறது. பாரம்பரியமாகப் போற்றப்படும் இவ் வாசகத்தை எமது இளம் கலைஞர்களிடையே போற்றுவது முன்மாதிரியான விடயம்; என சிறப்புவிருந்தினராக ஜேர்மனியிலிருந்து வருகை  தந்திருந்த இசைச்சுடரொளி, குறள் இசைச் செல்வர் ஸ்ரீ மா. யோகேஸ்வரன் அவர்கள் பாராட்டியிருந்தார்.

Continue Reading →

என்னைக் கேட்டால்..

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்

Continue Reading →

ஆய்வு: புறநானூற்றில் வறுமையில் செம்மை

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை! வறுமை மனிதனுடன் நீங்காத தொடர்புடையது. இத்தொடர்பு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சற்றுக் காலங்கடந்து மனிதன் பக்குவமடைந்து உயர்வு தாழ்வு பேணும்போதுதான் வறுமையின் முழுப்பொருளாழம் கடைநிலை மக்களைத் தாக்கி உணர வைத்தது. குறிப்பாகச் சங்க இலக்கியக் காலத்தில் வறுமையின் தாக்கத்தை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்திய மனிதக் குலம் இன்றுவரை வறுமையைத் தீர்க்கப் போராடியும் வருகின்றது.

வறுமை மிகக் கொடியது
 இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்த வரையில் வறுமையின் காரணமாக ஒருவன் தவறான செயலில் ஈடுபடச் சமூகம் அவனைத் தூண்டி விடுமானால் சில நேரத்தில் அச்செயலைப் பொறுத்து அவன் எடுக்கும் முடிவுகள் தவறில்லை என்பதாகவும் கருதி விடுகின்றனர். வறுமை என்பது மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமையென்று மற்றவர்களும் உணரும் தேவை ஏற்பட்டபோது அதனைத் தீர்க்க மற்றவர்கள் முன்வராத நிலையில் வறுமைக்கு உள்ளானவன் எடுக்கும் முடிவு தவறானதாயினும் சரியாகவே கருதப்படும். தவறான முடிவாக இருக்குமானால் அம்முடிவிற்கும் பாடபேதம் கற்பிக்கும் நிலை இக்காலச் சூழலில் உள்ளது. ஒருவனின் வளர்ச்சியில் மற்றவனின் பங்கு இருப்பதைப் போலவே அவனுடைய வறுமைää தாழ்விலும் மற்றவரின் பங்கு இருக்கின்றது என்பதை உணர்ந்ததினாலேயே வறுமை ஒழிப்பிற்கு அனைவராலும் குரல் கொடுக்க முடிகின்றது. வறுமை தற்காலிகமானதுää இதனைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையினால்தான் வறுமைக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். வறுமை என்பது மனிதக் குலத்திற்கு எதிரானது என்ற கருத்தில் பிளவு இருக்க முடியாது. இதனை எதிர்ப்பதில் உள்ள சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் சமூகம் அவனை எதிர்கொள்கின்றது. வறுமை மிகக் கொடியது. வறுமையிலும் இளமையில் கொல்லும் வறுமையானது மிகவும் கொடுமையானது என்பது ஒளவையின் வாக்கு. இவ்வுலகத்தில் பிறந்து மகிழ்ச்சியாகவும் இயற்கையாகவும் சுற்றித் திரியும் இளமைப் பருவத்தில் இவ்வறுமை நமக்கு ஏன் வருகின்றது என்பதை அறியாமலே அதனில் உழன்று தலைமீது சுமந்து வாழும் இளமையான வாழ்க்கையானது கொடுமையானது என்பதை ஒளவை உணர்த்தி இருக்கின்றார். நீதியையும் அறநெறியையும் போதிக்கும் இலக்கியங்கள் வறுமையை எதிர்த்துள்ளன. வறுமையினால் மற்றவரிடம் இரந்து உயிர்வாழும் நிலை ஏற்படின் இவ்வுலகமே கெட்டழியட்டும் என்று வறுமையை உருவாக்கக் காரணமான சமூகத்தையே சாடுகின்றார் வள்ளுவர்.

Continue Reading →

ஆய்வு: இலங்கையில் இரு மொழியம்

ஆய்வுக்கட்டுரை!பொதுவாக இன்றைய சமுதாயம் இரு வேறுபட்ட இனங்கள் அல்லது பல்வேறுபட்ட இனங்கள் இணைந்து வாழும் சமுதாயமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்து நோக்குகின்ற பொழுது நூற்றுக் கணக்கான இனங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் நாட்டிலே தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்கள், கர்நாடக மாநிலத்தவர்கள், ஆந்திர மாநிலத்தவர்கள் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இலங்கையிலே சிங்கள இனம் பெரும்பான்மை இனமாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், வேடர்கள், மலேசியர்கள், பேகர்கள், காப்பிலியர்கள் போன்றோர் சிறுபான்மை இனமாகவும் குறிப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற பொழுது அவ்வினங்களுடையே இடைத்தொடர்பு (Intraction) ஏற்படுவதால் கலை, கலாசாரங்கள், பண்பாடு, மொழி போன்றவை இனங்களுக்கிடையே உள்வாங்கப்படுகின்றன. அவற்றுள் மொழியே மிக இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. அதற்குக் காரணம் இனங்கள் தமக்குள் இடைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக்கொள்கின்றமையாகும். தமது எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள் என நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்;துவதற்கும் மொழியே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியைப் பயன்படுத்துகின்ற பொழுது ஓர் இனம் அல்லது சமூகம் ஏனைய இனத்தின் அல்லது சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது. தொடக்க நிலையில் பேச்சு வழக்கு மொழியைக் கற்றுக் கொண்டு தேவை கருதி எழுத்து வழக்கினையும் கற்றுக் கொள்கிறார்கள். இதற்கமைய ஒரு சமுதாயம் இரு மொழிச் சமுதாயமாயின் இரு மொழிகளும் பன்மொழிச் சமுதாயமாயின் பல மொழிகளும் கற்றுக் கொள்ளப்படுகின்றன.

Continue Reading →