எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் ‘ஆப்ரஹாம் லிங்கன்’

எழுத்தாளர் ஜெயபாரதனின் மொழிபெயர்ப்பில் ஜான் டிரிங்வாட்டரின் 'ஆப்ரஹாம் லிங்கன்' அறிவியல் அறிஞர் ஜெயபாரதன்எனக்கு மிகவும் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் ஆப்ரஹாம் லிங்கன். அதற்கு முக்கிய காரணம் சிறு வயதிலிருந்தே பாடப்புத்தகங்களில் அவரைப்பற்றிப் படித்ததனாலேற்பட்ட பிம்பமாக இருக்கலாம். வறிய சூழலில் , விறகு வெட்டி, தெருவிளக்கில் பாடங்கள் படித்துப் படிப்படியாக முன்னேறி அமெரிக்க ஜனாதிபதியாகியவர் என்று படித்தது, அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த கறுப்பின மக்களின் விடுதலைக்காக உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டதுடன், அதன் காரணமாகவே அமெரிக்காவின் தென் மாநிலத்தைச்சேர்ந்த தீவிரவாத எண்ணம் மிக்க நாடகக் கலைஞனான வில்லியம் பூத்தினால் சுட்டுகொல்லப்பட்டு , தன் கொள்கைக்காகத் தன் உயிரையே தந்தவர் என்று அறிந்தது போன்ற காரணங்களினால் சிறு வயதிலிருந்தே ஆப்ரஹாம் லிங்கன் எனக்குப் பிடித்த அமெரிக்க அரசியல் தலைவர்களிலொருவராக விளங்கி வருகின்றார்.

ஆப்ரஹாம் லிங்கனைப்பற்றியொரு நூலினை அண்மையில் வாசித்தேன். அதுவோர் அபுனைவல்ல. வரலாறுப்புனைவு: ஒரு நாடகம். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஜான் டிரின்ன்க்வாட்டர் (John Drinkwater) ஆங்கிலத்தில் எழுதி பல தடவைகள் பல்வேறு நகரங்களில் மேடையேறிய புகழ் பெற்ற நாடகமான ‘ஆப்ரகாம் லிங்கன்’ என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பான இந்த நூலினைத் தமிழில் தந்திருப்பவர் எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்களே.

இந்நாடகம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளிவந்து தமிழகத்தில் தாரிணி பதிப்பக வெளியீடாக (மே 2014)  வெளிவந்துள்ளது. இப்பிரதியினைப் பற்றிய எனது கருத்துகளைக் கூறுவதற்கு முன்னர் திரு.ஜெயபாரதனைப்பற்றிச் சிறிது கூறுவதும் அவசியமானதே.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 215 : புலம்பெயர் இலக்கியம் பற்றிய அலசல்…

வ.ந.கிரிதரன்அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கோ.நாதன் “புலம் பெயர்ந்தவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி படைத்தால் புலம் பெயர்வு இலக்கியமாகுமா?” என்றொரு  கேள்வியினைக் கேட்டிருந்தார். அது பற்றிய எனது கருத்தும் அதனைத்தொடர்ந்து முகநூலில் நடைபெற்ற சிறு கருத்துப்பரிமாற்றம் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.

எனது பதில்: “புலம் பெயர்ந்து வாழும் தமிழர் படைக்கும் எதுவுமே புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள்தான் வரும். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம் பெயர்ந்து வாழும் எவரும் படைக்கும் இலக்கியம். அவ்விலக்கியம் அக்கரை மண்ணின் வாழ்வினை விபரிக்கலாம். இழந்த மண்ணின் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தலாம். பிறந்த மண்ணைக்களமாகக்கொண்டும் படைக்கப்படலாம்.

புகழ்பெற்ற யூத இனத்தைச்சேர்ந்த அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பிரிந்த நிலையில் , சிறுவனாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தப்பிப்பிழைப்பதற்காக அந்நியர்களுடன் அலைந்து திரிந்திருக்கின்றார். யூதச்சிறுவனான அவரைப்பெற்றோர் முகம் தெரியாத அந்நிய மனிதர்களுடன் அவராவது தப்பிப்பிழைக்கட்டுமென்று அனுப்பி விடுகின்றார்கள். . தன் இளமைக்கால அனுபவங்களை அவர் தனது புகழ் பெற்ற நாவல்களிலொன்றான ‘The Painted Bird’  என்னும் நாவலில் விபரித்திருக்கின்றார்.  இவ்விதம் சிறுவனான அவர் அலைந்து திரிந்த  சமயம் யூத மக்கள் படும் துன்பங்களை, அவர்கள் மீது நடைபெறும் படுகொலைகளை, யூதப்பெண்கள் மீது புரியப்படும் கூட்டுப்பாலுறவு வன்முறைகளை, இவை போன்ற கொடிய அனுபவங்களையெல்லாம் அப்படி அப்படியே  வாசிப்பவர் தம் இதயங்களை உலுக்கும் வகையில் விபரிக்கின்றார்  அந்த நாவலில் ஜேர்சி கொஸின்ஸ்கி. இன்று அந்தப்படைப்பு அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்றாகக் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குணா கவியழகன், சோபா சக்தி, தமிழ்நதி, சயந்தன், விமல் குழந்தைவேலு…  எனப் புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் பலரின் படைப்புகளின் கதைக்களங்களும்  பிறந்த மண்ணின் மீதான சமூக அரசியல் நிகழ்வுகள்தாமே. அவர்கள் யாவரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியமாகத்தானே அழைக்கப்படுகின்றது.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 214 : தற்போதுள்ள தமிழக அரசியல் சூழல் பற்றியொரு பார்வை…

முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும்தீபா ஜெயகுமார்ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவைப்பற்றி பல்வேறு ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வருவதைப்பார்த்து அப்படி என்னதான் இவரிடம் இருக்கிறது என்று பார்ப்போமேயென்று அவரது நேர்காணல்களுள்ள காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன், பார்த்தபோது அவருக்கும் , மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குமிடையிலுள்ள பல ஒற்றுமைகள் புலப்பட்டன. தமிழ் மொழியைப்பாவிக்கும் முறையிலும், உரையாடும் முறையிலும், நிதானமாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முறையிலும் ஜெயலலிதாவை தீபா நினைவுறுத்துவதை அவதானிக்க முடிந்தது.

இந்தியா வாரிசு அரசியலுக்குப் பெயர் போன நாடுகளிலொன்று. பிரதமர் இந்திராகாந்தி மரணமடைந்தபோது எந்தவித அரசியல் அனுபவமுமற்ற ராஜிவ் காந்தி முன்னுக்குக் கொண்டுவரப்பட்டு இந்தியாவின் பிரதமாரானது யாவரும் அறிந்ததே. எனவே ஜெயலலிதா மறைந்த சோகத்திலிருக்கும் பெரும்பாலான மக்களுக்குத் தீபாவைப்பார்க்கும்போது ஜெயலலிதாவையே பார்ப்பது போலிருக்கும் உணர்வு தோன்றுவதும், அந்த உணர்வின் அடிப்படையில் அவரையே அதிமுகவின் அடுத்த தலைவராக எண்ணினாலும், ஆதரவு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எம்ஜிஆரின் மறைவின் போது ஜெயலலிதா பலராலும் ஓரங்கட்டப்பட்டார். அது போல் ஜெயலலிதாவின் மறைவின்போதும் தீபா ஜெயலலிதாவின் இறுதிக்காலத்தில் தனது அத்தையைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

Continue Reading →

இலங்கை: எழுத்தாளர்கள் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோருக்கு விருது!

இலங்கை: எழுத்தாளர்கள் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோருக்கு விருது!

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 டிசம்பர் 11,12,13 ஆகிய தினங்களில் இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது எழுத்தாளர்களான வெலிகம ரிம்ஸா முஹம்மத் மற்றும் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களிடமிருந்து விருது பெறுவதையும், அருகே பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். அஸ்வர், சேகு இஸ்ஸதீன், தமிழ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் பாட்ஷா, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது, காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீன் ஆகியோர்களையும் படத்தில் காணலாம்.

Continue Reading →

‘பகிர்வு’: தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் வெளியீட்டு விழா

தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் வெளியீட்டு விழா 24-12-2016 அன்று சென்னை இக்ஸா மையத்தில் நடை பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். – தமிழ்மணவாளன் –…

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: கான்ஸ் விருது பெற்ற தீபன் – திரையிடல் & கலந்துரையாடல்

25-12-2016, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம்…

Continue Reading →

ஆய்வு: தஞ்சை மராட்டியர்கள் கீழ் ஆங்கிலக் கல்வியும் கிருத்து சமயக்கல்வியும்

கி.இரவிசங்கர்இந்தியாவில் ஆங்கில  தலைமை கவா்னராக பதவி வகிகத்த வெல்லஸ்லி பிரபு பொ.ஆ 1797 இல் சென்னை கவா்னராக நியமனம் பெற்று பொ.ஆ 1798 இல் கவா்னா் ஜென்ரலான1 ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டு மொழிகள், சட்டத் திட்டங்கள், வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பது வெல்லஸ்லியின் கருத்தாகும். கம்பெனி ஊழியா்களுக்கு அலுவல்களைப் பற்றிய கல்வியளித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பொ.ஆ 1800 இல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்.2 ஆங்கிலேயா்கள் வாணிகக் குழுவில் பணியேற்கும் முன்பு இக்கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.  அக்கல்லூரியில் பல ஐரோப்பியப் பேராசிரியா்களும் 80 இந்தியப் பண்டிதா்களும் பணியாற்றி வந்தனா்.  இக்கல்லூரியில் பயின்றவா்களைவிட பயிற்றுவிக்கும் ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொ.ஆ 1802 இல் இக்கல்லூரி மூடப்பட்டது.  பொ.ஆ 1806 இல் மீண்டும் இக்கல்லூரி ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. மேலும் கீழைநாட்டு மொழிகளைக் கற்பிக்க பொ.ஆ 1806 இல் கிழக்கிந்தியக் கல்லூரி ஒன்றும்3 தொடங்கப்பட்டது. வெல்லஸ்லி பிரபு காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியுடன் ஆங்கிலேயா் ஓர் உடன்படிக்கைச் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை கோட்டையும், சில கிராமங்களும் தவிர மற்றவற்றை ஆங்கிலேயா் எடுத்துக் கொண்டனா்.  மன்னருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பொ.ஆ 1833-ல் சரபோஜி மன்னா் இறக்கவே அவரது மகன் கடைசி சிவாஜி பணம் பெற்றுவந்தார். பொ.ஆ 1855 இல் சிவாஜி வாரிசு இன்றி இறக்கவே பொ.ஆ 1853இல் டல்ஹௌசி பிரபு காலத்தில் தஞ்சாவூர் ஆங்கிலேயா் வசமானது.4 ஹேஸ்டிங்ஸ் பிரபு பொ.ஆ 1813 இல் இந்தியாவின் கவா்னா் ஜெனரலானார். இவா் ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்குப் பல பள்ளிகளை நிறுவினார். கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரிக்கு ஆதரவு அளிந்தார். அக்கல்லூரியில் ஆங்கிலமும் மேலைநாட்டு விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன.5 வில்லியம் பெண்டிங் பிரபு பொ.ஆ 1803 இல் சென்னை ஆளுநரனார். பெண்டிங் பிரபு காலத்தில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.  பொ.ஆ 1813 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சாசனச் சட்டப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் கலாச்சார கல்வியை இந்திய மக்களிடையே பரப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தத் தொகையை செலவிடுவது பற்றி பல சா்ச்சைகள் ஏற்பட்டன.  கீழைநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கும், கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கீழைநாட்டு ஆதரவாளா்கள் (Orientalises) கூறினா்.  இவா்கள் கருத்தை எதிர்த்து, மேலைநாட்டு கல்வி ஆதரவாளா்கள் (Occidentalises) மேலை நாட்டு அறிவியல் கல்வியை ஆங்கில மொழியின் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்றனா். H.H.வில்சன் போன்ற அறிஞா்கள் கீழைநாட்டு மொழிகளான வடமொழி, அரபிக், பாரசீகம் போன்றவற்றிற்காக இராஜாஇராம் மோகன்ராய் போன்றவா்கள் மேலைநாட்டு அறிவியல் கல்வியை ஆங்கிலம் மூலமாகக் கற்பிக்க வேண்டும் என்றனா் (Occidentalises) இதனால் பெண்டிங் பிரபு தம் அவையில் இருந்த மெக்காலே பிரபுவிடம் கருத்து கேட்டார். மெக்காலே பிரபு இந்தியா்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஆங்கிலேயா்கள் அறிந்து கொள்ளவும், ஆங்கிலேயா்களை பற்றி இந்தியா்கள் அறிந்து கொள்வதற்கும் ஒரு பொதுமொழி தேவை என்பதை வலியுறுத்தினார்.  எனவே இந்தியா்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து அவா்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தை கற்கும்படி செய்யத் திட்டமிட்டார். இந்தியா்களுக்கு ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது என்பதை கூறி வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் கூறி 1835 இல் கல்வி அறிக்கை (Education Minute) அக்கல்வி அறிக்கை அந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதுமுதல் ஆங்கிலம் இந்திய அரசின் பயிற்றுமொழியாகவும், அரசாங்க மொழியாகவும் மாறியது.  இம்மொழியை கற்றறிந்த இந்தியா்கள் குறிப்பாக உயா்தர, மத்தியதர வகுப்பினா்கள் ஆங்கில நாகரீகத்தை பின்பற்ற தொடங்கினா்.

Continue Reading →

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.

பிடல் காஸ்ட்ரோவின் அரசியலும் இலக்கியமும்.தனது 90வது வயதில் இயற்கை எய்தினார் பிடல் காஸ்ட்ரோ. சகல இணையத்தளங்களும், பத்திரிகைகளும் அவர் சம்பந்தமான அநேக விடயங்களைப் பிரசுரித்து விட்டனர். குறிப்பாக அவரது பிறப்பு சாதனை சோதனை என அனைத்தையும். இலக்கியப் பிரியர்களான நாம் அவரது அரசியலையும் இலக்கியத்தையும் சிறிய ஆய்வில் ஒப்பிடுவோம்.

இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பு மிக்க அரசியல் பிரமுகராக இருந்தவர். 1959ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். பனிப்போரில் இரண்டு அணுவாயுத நாடுகள் மோதிக்கொண்டிருந்த சமயம் உலக அரசியல் அரங்கில் மிக முக்கியமான மீமனித அறிவாற்றலராகத் (Titan) திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட்டுகளுக்கும் (Communist Bloc) மேற்குலகுக்கும் இடையிலான கருத்துவேறுபாட்டில் கேந்திரமான ஆட்ட ஜாம்பவான் காஸ்ட்ரோ தான். சமகாலத்தில் ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகளின் ஆதர்சம் பிடல் என்றால் தகும். கியூபாவின் கடற்கரை தாண்டிய பகுதிகளிலும் பிடலின் செல்வாக்கு எண்ணிலடங்காத வகையில் சென்றடைந்தது. அவரை Charismatic Figure என்றே ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.  அந்த அளவுக்கு மிடுக்கான அரசியல் தளத்தில் பிடல் இருந்தார் என்பதே இது போன்ற பெருமைகளின் காரணம்.

எவ்வளவு நண்பர்கள் உள்ளனரோ அந்த அளவு எதிரிகளையும் பிடல் சம்பாதித்திருந்தார். குறிப்பாக அவரது சித்தாந்த எதிரிகள். தனது மக்களுக்கான போராட்டத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக எண்ணியே வாழ்வினைப் புரட்சியில் முன்னிறுத்தினார். வராலாற்றுக் காலங்களை டைனோசர் எங்ஙனம் ஆட்கொண்டதோ, அதேபோல் தான் பிடலும் ஆரம்பகால போராட்ட இயக்கங்கங்கள் ஒவ்வொன்றையும் தன் கொள்கைகளால் ஈர்த்திருந்தார்.

Continue Reading →

கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் –

கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் -

1. உறவுமலர்!

ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.

2. பாதபூஜை.

இனிமேல் பார்க்கக் கிடைக்குமோ,
தனியாய் தொலைந்த காரணமோ,
பனித்த கண்களால்
பாதம் கழுவி,
புனிதம் அடைந்தேன்

Continue Reading →

அருண். விஜயராணி நேர்காணல் – புரிதலும் பகிர்தலும்: ” ஒரு பெண் குழந்தையைப் படிப்பித்தலே ஒரு நாடு செய்யக்கூடிய சிறந்த மூலதனம்” ” நம் மரபு பற்றி நமக்கே ஒரு பெருமை இருக்க வேண்டும் “

அருண். விஜயராணி–  இலங்கையில் வெளியாகும் ஞானம் மாத இதழின் ஆசிரியர் தி. ஞானசேகரனுக்கு 1999 இல் அருண். விஜயராணி வழங்கிய நேர்காணல். புரிதலும் பகிர்தலும் நேர்காணல் தொகுப்பில் வெளியானது. 16-03-1954 ஆம் திகதி இலங்கையில் உரும்பராயில் பிறந்த விஜயராணி செல்வத்துரை  இலக்கியவாதியானதன்  பின்னர், அருணகிரி அவர்களை மணந்து  அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதிவந்தவர். கடந்த 13-12- 2015 ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் மறைந்தார். இன்று  13 ஆம் திகதி  அவரது ஓராண்டு நினைவு அஞ்சலி காலத்தில் இந்த நேர்காணலும் பதிவாகிறது. –

கேள்வி:   இலங்கையிலும்  இங்கிலாந்திலும்  வாழ்ந்து  தற்போது அவுஸ்திரேலியாவில்  குடியேறியிருக்கிறீர்கள்.  இம்மூன்று நாடுகளிலும்  தங்கள் வாழ்வு அனுபவங்கள் எழுத்தாளர் என்ற நிலைமையில்  எவ்வாறு அமைந்துள்ளன ?

பதில்:   ”  இலங்கை  விஜயராணியே  நான்  ரசிக்கும்  எழுத்தாளர்.  கன்னிப் பெண்ணாக  இருந்து  படைத்த  படைப்புகள்  தைரியமானவை.  போலித்தனம்   இல்லாதவை.   யாருக்கும்  பயப்படாமல்  எழுதிய  எழுத்துக்கள்.    திரும்பிய  பக்கம்  எல்லாம்  இலக்கியம்  பேச  மனிதர்கள் இருந்தார்கள்.   கருத்துச்  சுதந்திரம்  இருந்தது.   (சில  அரசாங்கக் கட்டுப்பாடுகளைத்   தவிர)   மாற்றுக்  கருத்துக்கள்  பலவற்றை  பகிர்ந்து கொள்ளக்கூடிய   சந்தர்ப்பங்களும்,    அவற்றை  முன்வைக்க  மாறுபட்ட கருத்துடைய   பல  பத்திரிகைகள்,  சஞ்சிகைகள்,  வானொலி, தொலைக்காட்சி   என்று  அங்கு  ஓர்  இலக்கிய  உலகமே  இருந்தது.   எனவே நாம்   சுழல  விரும்பாத  உலகத்தை  ஒதுக்கி  விட்டு  இலக்கிய  உலகில் மூழ்கித்   திளைக்க   அது   வசதியாக   அமைந்தது.

Continue Reading →