சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 1 – கறுப்புப் பூனையும் காவல் வீரனும்..!

பால்ய காலத்து வாசிப்பனுபவம்: பிள்ளைப் பிராயத்திலே.....பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) -
வீட்டுக் கரசன் நான்தானே
வீட்டைக் காக்கும் காவல்காரன்
வெளியே இருந்து காக்கின்றேன்
வீரன் யாரு தெரியாதோ… ..

காவல் காரப் பெரியவரே
கனக்க வீரம் காட்டுகிறீர்
நானும் வித்தையில் வல்லவனே
நீரும் என்னை அறிவீரோ… ..

Continue Reading →

கனடா தமிழர் வரலாறு – நூல் வெளியீடு

ஏப்ரில் 2, 2017  ஞாயிற்றுக் கிழமை இகுருவி வருடாந்த விழாவில் இகுருவி இதழின் எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய ‘கனடா தமிழர் வரலாறு’ ( Canadian Tamils’…

Continue Reading →

வீரகேசரி முன்னாள் பிரதம ஆசிரியர் க.சிவப்பிரகாசம் அமெரிக்காவில் மறைந்தார்

வீரகேசரி  முன்னாள்  ஆசிரியர் க. சிவப்பிரகாசம் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம் கடந்த வெள்ளியன்று 14 ஆம் திகதி அமெரிக்காவில் வேர்ஜினியா மாநில மருத்துவமனையில்  காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவருக்கு வயது 83. 1966 ஆம் ஆண்டு முதல்,  ஆரம்பத்தில் வீரகேசரியின் இணை ஆசிரியராகவும் பின்னர் பிரதம ஆசிரியராகவும்  1983 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.  1983 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.  அதன்பின்னர் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார். அங்கு நீண்டகாலம் பொஸ்டன் மாநிலத்தில் வசித்தார். அவருடைய அன்புத்துணைவியாரும் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் அவர்களுக்கு இரண்டு பேரக்குழந்தைகள். இலங்கையின் வடபுலத்தில் மாதகலில் பிறந்திருக்கும் சிவப்பிரகாசம்   1958  இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் அருணாசலம் விடுதியிலிருந்து கற்று பொருளாதார  பட்டதாரியானவர்.  அங்கே பல மாணவர் இயக்க செயற்பாடுகளிலும்  ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த இந்து மாணவர் சங்கம்  மற்றும் தமிழ்ச்சங்கம் ஆகியனவற்றில் இணைந்து இச்சங்கங்களின்  நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய  சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பேராசிரியர் சு. வித்தியானந்தன்  குறிப்பிட்ட நாடகங்களை தயாரித்து நெறிப்படுத்தியிருக்கிறார். பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாக வெளியேறிய சிவப்பிரகாசம் , லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் இணைந்தார். இங்குதான் இவரது இதழியல் பணி ஆரம்பமாகியது.

Continue Reading →

நினைவலைகள்: வீரகேசரி முன்னாள் ஆசிரியர் க. சிவப்பிரகாசம் இலங்கையில் நெருக்கடியான காலப்பகுதியில் தமிழ் இதழியல் பாதையில் நிதானமாக நடந்தவர்

வீரகேசரி  முன்னாள்  ஆசிரியர் க. சிவப்பிரகாசம் எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம்  வீரகேசரி,   எத்தனையோ காலமாற்றங்களை   சந்தித்தவாறு  தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது.  வீரகேசரி  துளிர்விட்ட  வருடம் 1930.  விருட்சமாக  வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள்,  எத்தனைபேர்  அதற்கு  நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர்  அந்த  நிழலின்  குளிர்மையை  நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள்  என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே  நிற்கிறது. பின்னாளில்  அதன்வழிகாட்டுதலில்   வந்தவர்களில்  ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு  தற்பொழுது 82 வயதும்  கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள்  வீரகேசரியில் அவருடன்  இணைந்து பணியாற்றியவருமான  வீரகேசரியின்  முன்னாள் விநியோக – விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம்  நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில்  சொன்னார்.  அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு  வந்து  எனது  கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை  மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன்  மின்னஞ்சலில்  அனுப்பியிருந்தார்.

அமெரிக்காவில்   ஒரு மாநிலத்தில்  மூத்தபிரஜைகளை  பராமரிக்கும் இல்லமொன்றில்  எங்கள்  முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும்   தற்பொழுது  கவலைக்கிடமாக இருப்பதாகவும்  அடுத்தடுத்து  தகவல்  வந்தததையடுத்து,  அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர்  சிவப்பிரகாசம்,  இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக  ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில்  இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர்.  ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது  முன்னாள் ஆசிரியர். மற்றவர்  து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின்  முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள்  இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்,  2007  ஆம் ஆண்டு  இறுதியில்,  கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா  இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக  சந்திக்கநேர்ந்தது.  அந்தப்பயணத்தில்  இணைந்திருந்த அவுஸ்திரேலியா  நண்பர் நடேசனும் நானும்  அந்த விருந்தில்  அவர்களுடன்  ஒன்றாக  அமர்ந்திருந்தோம்.

Continue Reading →

ஆய்வு: ‘பதிவுகள்’ இதழ் கவிதைகளில் மார்க்சியம்

கட்டுரையாளர்:  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம்முன்னுரை
இணையத்தமிழ் இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதழ் பதிவுகள் இதழ். இந்த இதழில் பெண்ணியமஇ; மார்க்சியம்இ தலித்தியம்இ புலம்பெயர்வு போன்ற நவீன இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அக்கவிதைகளில் மார்க்சிய கவிதைகளை ஆராய்வதாக இக்கட்;டுரை அமைகின்றது.

மார்க்சியம்
சமுதாயத்தில் நிலவும் நிகழ்ச்சிகளுக்கு காரணகாரிய விளக்கம் காட்டி உண்மையைப் புரிந்து கொள்ளத் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதையே மார்க்சியப் படைப்பாளர்கள் தங்களின் இலக்கியப் பணியாக கொண்டனர். மார்க்சிய வாதிகள் இலக்கியத்தைச் சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையாண்டனர். சமுதாயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல் குறைகளுக்குத் தீர்வுகாண்பதே மார்க்சியத்தின் நோக்கமாகும். உலகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை நீக்குவதற்கு வர்க்கப்போர் ஒன்றையே தீர்வாக மார்க்சிய இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக அமைவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்கள் தான். அப்பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்;துக்கொள்ள மக்கள் எல்லா வகையிலும் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். என்பதை,

Continue Reading →

முனைவர் நா.சுப்ரமணியத்தின் கடிதமொன்று..:

கலாநிதி நா. சுப்பிரமணியன்

ஈழத்தமிழ் இலக்கியத்தை (புகலிட / புலம்பெயர் இலக்கியத்தையும் உள்ளடக்கி) ஆவணப்படுத்திவருபவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள். இவரது ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல் அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்த நூல். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் அவ்வப்போது எழுதி வருவதுடன், ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகும் படைப்புகள் பற்றியும் அவ்வப்போது தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்பவர். அண்மையில் முகநூலிலும் , ‘பதிவுகள்’ இணைய இதழிலும் ‘தாயகம்’ இதழ் பற்றி எழுதிய எனது குறிப்புகள் பற்றிய தனது கருத்துகளையும் அவர் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவற்றை உங்களுடன் நானிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.


அன்ப!

பதிவுகள் தளத்தை நான் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் குறிப்பாக வாசிப்பும் யோசிப்பும்   என்ற தலைப்பிலமையும்  பகுதியிலே இடம்பெறும்   தங்களுடைய  வாசிப்பநுபவப் பதிவுகளில் தனிக்கவனம் செலுத்திவருகிறேன். அவற்றில் குறிப்பாகக் கனடாவின் தமிழிலக்கிய வரலாறு சார்ந்த  பதிவுகளில் முக்கியமானவை என நான்  கருதுபவற்றைச் சேமித்துக்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இவ்வகையில்  ஏப்ரல் 7 திகதியிட்ட  தங்களுடைய     வாசிப்பும் யோசிப்பும் -229  என்ற பதிவிலே எழுத்தாளர் ஜோர்ஜ் இ. குருஷேவ் அவர்களின் தாயகம்   இதழ்பற்றிய  தகவல்களைக் கண்டபோது பெரிதும் மகிழ்ந்தேன்.-சேமித்துங்கொண்டேன்.

Continue Reading →

ஆய்வு: இளையராஜவின் இலக்கியப் படைப்புகளில் அணிகள்

இளையராஜாஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.

இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)

பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்‌கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்‌ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 229 : எழுத்தாளர் ஜோர்ஜ்.இ.குருஷேவின் தாயகம் (கனடா) புகலிடத்தமிழர்களின் முக்கியமான பத்திரிகை / சஞ்சிகைகளிலொன்று.

எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.'தாயகம்' சஞ்சிகை அட்டை...புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.

ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.

தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான ‘எழுக அதிமானுடா!’ தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.

தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் ‘படிப்பகம்’ (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்’ முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

ஆய்வு: அகநானூற்றுப் பாடல்களில் இருவாழ் உயிரினங்கள்

சி.யுவராஜ்முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும்  செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.

தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும்  நகர்ந்தும் செல்லும். பொதுவாக  இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: நூலகர் செல்வராஜாவின் ஆவணப்பதிவு — ஈழநாடு – ஒரு ஆலமரத்தின் கதை ” யோகர்சுவாமியின் காலத்தை முந்திய ஞானமும் பிரதமர் ரணிலின் காலத்தைப் பிந்திய ஞானமும் “

நூலகர் செல்வராஜா” ஈழநாட்டிலே  பல சமூகத்தவர்கள் இருக்கின்றார்களெனினும் தமிழரின்  சொந்தப்  பண்பாட்டினையும்  உரிமைகளையும் எடுத்துரைக்கும்போது,  பிறசமூகத்தினரும் இந்நாட்டில் வாழ்ந்துவருகின்றனர்  என்பதையுணர்ந்து வேற்றுமையில்  ஒற்றுமை காண  முயலவேண்டும். ஒற்றையாட்சி( யுள்ள) இந்நாட்டில் மனித உரிமைகளைப்பெறுவது  சாத்தியமானதா…? அடிப்படை மனித உரிமைகள்  அனைத்தும் நன்கு பாதுகாக்கப்படுமா…? அன்றேல் சமஷ்டிதான்  இலங்கைக்கு  உகந்ததா…? மாகாண சுயாட்சி முறை எமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றத்தக்கதா…? இவைபோன்ற கேள்விகளுக்கு  விளக்கம்  தரும் கருத்தரங்கமாக ‘ஈழநாடு’ விளங்கும்.” என்று 58 ஆண்டுகளுக்கு முன்னர் (அமரர்) கே.சி. தங்கராஜா யாழ்ப்பாணத்திலிருந்து 11-02-1959 ஆம் திகதி வெளியான முதலாவது ஈழநாடு வார  இதழில் பதிவுசெய்துள்ளார். ஈழநாடு  வெளிவருவதன் நோக்கத்தை அவர் அன்று எழுதியிருந்தாலும், அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளுக்கு இற்றைவரையில் சரியான பதில் கிடைக்கவும் இல்லை.  தீர்வுகளும் தூரத்தூர  விலகிச்சென்றுகொண்டே  இருக்கின்றன.

இலங்கையில்  இதுவரையில் எத்தனை தடவை அரசியலமைப்பு மாற்றப்பட்டுவிட்டது…?  தொடர்ந்தும்  வரைபுகள் முன்வைக்கப்படுகின்றன. பெரியார்  தங்கராசாவின் அரிய கருத்துக்களுடன் 1959 இல் ஒரு பிராந்திய பத்திரிகையாக இலங்கையில் வெளியான ஈழநாடு பற்றிய ஒரு  ஆவணப்பதிவாக வெளியாகியிருக்கிறது ‘ ஈழநாடு ஒரு ஆலமரத்தின் கதை’

ஏற்கனவே  இலங்கையின்  இலக்கிய – அறிவியல் படைப்புகள் பற்றிய செய்திகளையும்  ஆளுமைகள் மற்றும் நூலகவியல் பற்றிய கட்டுரைகளையும்,  நூல் பதிப்புத்துறை தொடர்பான ஆக்கங்களையும் – எரிக்கபட்ட யாழ். பொது நூல்நிலையம் பற்றியும்  வெறும் குறிப்புகளாக அல்லாமல்,  நீடித்து நிலைத்துநின்று பேசத்தக்க ஆவணமாகவே தமிழ் உலகிற்கு   வழங்கியிருக்கும் நூலகர் என். செல்வராஜா அவர்களின் மற்றும் ஒரு தேடல் பயணத்தின்  பயன்தான் இந்த அரிய நூல். ஆவணப்படுத்துபவர்களுக்கு  தேடல் மனப்பான்மையும், பதிவுகளைத்தொகுக்கும்  அனுபவமும் இருக்கும் பட்சத்தில்  எம்மைப்போன்ற வாசகர்கள்  பயனுள்ள  தரவுகளையும் தகவல்களையும்  பெற்றுக்கொள்வார்கள். வாசகருக்காகவும்  அதேவேளை சமூக, அரசியல் ஆய்வாளர்களுக்காவும்   தொடர்ச்சியாக அயற்சியின்றி இயங்கிவரும் நூலகர் செல்வராஜா எம்மத்தியில் சிறந்த ஆவணக்காப்பாளராகவே விளங்கிவருகிறார். அவரது அயோத்தி நூலகசேவை இந்நூலை  வெளியிட்டுள்ளது. 35 கட்டுரைகளின் தொகுப்பாக வெளியாகியிருக்கும் இந்நூலுக்கு வீரகத்தி தனபாலசிங்கம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.

Continue Reading →