புகலிடத்தமிழர்கள் மத்தியிலிருந்து ஒரு பதிப்பகம் எவ்வித ஆரவாரமுமின்றி உலகத்தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இதற்குக் காரணமான இதன் உரிமையாளரான எழுத்தாளரின் தன்னடக்கம் மதிப்புக்குரியது. எழுத்தாளர் வேறுயாருமல்லர் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான எழுத்தாளர் த.அகிலனே. ‘மரணத்தின் வாசனை: போர் தின்றவர்களின் கதை’ மூலம் எமக்கெல்லாம் அறிமுகமானவர். போர்ச்சூழலில் மக்கள் மரணத்துள் எவ்விதம் வாழ்ந்திருந்தார்கள் , எவ்விதம் அதனை எதிர்கொண்டார்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் கதைகளின் தொகுதி. முக்கியமான போர்க்கால இலக்கியப் பிரதிகளிலொன்று. கதை, கவிதை , கட்டுரை நூல் வெளியீடு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்துபட்டது.
வாழ்த்துகின்றோம் ‘வடலி’ பெரும் பனையாக வளர்ந்திட, உயர்ந்திட, மேலும் பல வளங்களை வாசகர்களுக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிட வளர.
இதுவரை உருவாகிய குறுகிய காலத்திலிருந்து இப்பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் , நேர்த்தியான வடிவமைப்புடன் வெளியான தன்மை வடலிக்கு மிகப்பெரிய வளர்ச்சியினை எதிர்காலத்தில் அடைய உதவுமென்பது வெள்ளிடைமலை.
கொரோனா காலகட்டத்தில் எழுதப்படும் கவிதைகள் ஏதோவொரு வகையில் அந்தக் காலகட்டத்தின் அக புற வெளிகளைப் படம்பிடித்துக்காட்டுகின்றன. அவ்வகையில் ஒரு காலகட்டத்தின் ஆவணமாகின்றன. சாட்சியமாகின்றன.
தமிழ் கவிதைகளை ஆங்கில மொழியாக்கம் செய்து இதுவரை நான்கைந்து தொகுப்புகள் வெளியிட்டுள்ள மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.சுப்பிரமணியன் (பாரதியார் கவிதைகளின் பெரும்பகுதியை மொழி பெயர்த்துள்ளார், சங்கத்தமிழ்ப்பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்) தனி கவிஞர்களுடைய ஆங்கில மொழியாக்கத் தொகுப்புகளெனவும் 10க்கு மேல் வெளியாகி யுள்ளன – அவற்றில் சில இளம்பிறை, உமா மகேஸ் வரி, தமிழச்சி தங்கபாண்டியன்(நூல் வெளியாக உள்ளது), அ.வெண்ணிலா(நூல் வெளியாக உள்ளது, ) அவர்கள் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகள் குறைந்தபட்சம் 100ஐ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
தொகுப்பிற்காக கவிதையை அனுப்ப விரும்பு கிறவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆளுக்கொரு கவிதை அனுப்பித் தரும்படி (டெமி ஸைஸ் தாளில் ஒன்று அல்லது இரண்டு பக்கங் களுக்கு மிகாமல்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கவிதைகள் அனுப்புவோர் தம்மைப் பற்றிய சிறு விவரக் குறிப்பு, புகைப்படம், விலாசம் மற்றும் தங்கள் கவிதையை மொழிபெயர்க்க அனுமதி ஆகியவற்றையும் அனுப்பித்தந்து உதவவும்.
கவிதை அனுப்பவேண்டிய கடைசி தேதி: இவ்வருடம் மே 15.
அனுப்பப்படும் அத்தனை கவிதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பில் இடம்பெறும் என்று உறுதியளிக்க இயலாது. பல்வேறு காரணங்களால் சில கவிதைகள் மொழிபெயர்ப்புக்கு ஏற்றவையாக அமையாதுபோகலாம்.