வெகுசன இலக்கியம் பற்றி…..

எழுத்தாளர் அ.யேசுராசாஎழுத்தாளர் யேசுராசா அவர்கள் அண்மையில் தனது முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

“நா. பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’, ‘பொன்விலங்கு’, போன்ற நாவல்களை எனது பதின்ம வயதில் விருப்புடன் வாசித்திருக்கிறேன். ஒழுக்க விழுமியங்களையும் இலட்சிய நோக்குகளையும் எம்மனதில் விதைத்தவை அவை (மு. வரதராசனின் படைப்புகளும் அவ்வாறான வையே!). தற்போது எமது விமர்சகர் பலர், இவர்களது படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இன்றைய நிலையில் அவை இலக்கியமாக என்னைக் கவருமா என்பதை, மறுபடி வாசித்த பின்னர்தான் கூற முடியும்.”

இதற்கான எனது எதிர்வினை: நிச்சயமாகக் கவராது. ஆனால் அவை உங்கள் வாசிப்பின் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுவதால் நிச்சயம் அவற்றைக்கையிலெடுத்ததும் மகிழ்ச்சியைத்தரும். இன்றைய நிலையில் அவை இலக்கியமா என்று பார்க்கக்கூடாது. அன்றைய நிலையில் ,உங்களது இளமைபருவத்தில், அவை உங்களைக் கவர்ந்ததா என்பதுதான் முக்கியம்.ஏனென்றால் இன்று நீங்கள் இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் அன்று நீங்கள் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற வெகுசனப்படைப்புகளை வாசித்து, வாசிப்பதில் ஆர்வம்கொண்டு வளர்ந்ததால்தான். அவையெல்லாம் ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியில் தவிர்க்க முடியாத படிக்கட்டுகள்.

Continue Reading →

பத்து நாட்கள் பத்து திரைப்படங்கள்: திரைப்படம் (5 ) – அகிர குரோசாவாவின் (Akira kurosawa) ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala – 1975)

இயக்குநர் அகிரா குரோசாவாஜப்பானியத் திரைப்பட இயக்குநர் அகிரா குரோசாவாவின்  ‘டேர்சு உசாலா’ திரைப்படம் இவ்வரிசையில் என் அடுத்த  தேர்வு. ‘டேர்சு உசாலா’ (Dersu Uzala) ருஷ்யாவின் தூரகிழக்குபகுதியான பனி சூழ்ந்த சைபீரிய வனப்பகுதியில் ஆய்வுப்பணிகளைச் செய்த ஆய்வாளர் விளாமிடீர் ஆர்செனியேவ் (Vladimir Arsenyev) தன் அனுபவங்களைப் பயண நூல்களாக வெளியிட்டுள்ளார். அவ்விதமான ஆய்வுப் பயணங்களிரண்டை மூலக்கதையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமே ‘டேர்சு உசாலா’. திரைப்படம் இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதற்பகுதி முதற்பயணத்தில் அவருக்கு அறிமுகமாகிப் பயணத்தின் முடிவில் மீண்டும் தன் வனப்பகுதிக்கே திரும்பும் அப்பகுதி வேட்டக்காரனான பூர்வீக மனிதன் ஒருவனைப் பற்றி விபரிக்கின்றது. அவனது பெயர்தான் டேர்சு உசாலா. திரைக்கதை ஆய்வாளரின் பயணங்கள் பற்றிய நனவிடை தோய்தலாக ஆரம்பமாகின்றது.

இரண்டாம் பகுதி அடுத்த பயணத்தை மையமாகக்கொண்டது. ஏழு வருடங்கள் கழிந்து மீண்டும் அவர் அப்பகுதிக்கு நில அளவை ஆய்வுக்காகச் தன் குழுவினருடன் செல்கையில் மீண்டும் அம்மனிதன் எதிர்ப்படுகின்றான். பயணத்தின் முடிவில் டேர்சு உசாலா பார்வைக்குறைபாட்டினை உணர்கின்றான். அக்குறைபாட்டுடன் தனித்து அவ்வனப்பகுதிக்குள் தன்னால் தப்பிப்பிழைக்க முடியாதென்று உணர்கின்றான். அதன் காரணமாக இம்முறை அப்பயண முடிவில் அவன் ஆர்னிசேவுடன் அவருடைய இல்லத்துக்குத் திரும்பச் சம்மதிக்கின்றான். இவ்விதம் திரும்பும் அவன் நகரம் தன் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்புடையதல்ல என்பதை உணர்கின்றான். இதற்கிடையில் அவன் ஆர்செனியேவின் குடும்பத்துடனும் குறிப்பாக அவரின் பால்ய வயதுப்பையனுடனும் நன்கு பழகி விடுகின்றான். இறுதியில் நகர் அவனது வாழ்க்கைக்கு ஒத்து வரவில்லையென்பதால் காடு நோக்கித் திரும்புகின்றான். திரும்பும் வழியில் அவனுக்கு என்ன நடக்கின்றது? என்பதை நாவல் விபரிக்கின்றது. அதுதான் நாவலின் கிளைமாக்ஸ்.

Continue Reading →