பதிப்பகங்கள் அறிமுகம் (2): குமரன் புத்தக இல்லம் | குமரன் பப்ளீஷர்ஸ்

பதிப்பகங்கள் அறிமுகம்

எழுத்தாளர் செ.கணேசலிங்கன்

பதிவுகள் இணைய இதழில் பதிப்பகங்களின் அறிமுகம் இடம் பெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்ப்பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. உலகளாவியரீதியில் தமிழ் மக்களால் வாசிக்கப்படும் பதிவுகள் இணைய இதழில் உங்களைப்பற்றிய அறிமுகங்கள் மூலம் உலகளாவியரீதியில் உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றித் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பதிப்பகங்கள் தம்மைப்பற்றிய விபரங்களை அனுப்பி வைத்துப் பயனடைய வாழ்த்துகின்றோம்.  இப்பகுதிக்கு விபரங்களை அறிவிக்க விரும்பினால் பதிப்பகத்தின் பெயர், வெளியிட்ட நூல்கள், தொடர்பு விபரங்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினை அனுப்பி வையுங்கள். அவை பதிவுகளின் ‘பதிப்பகங்கள் அறிமுகம்’ பகுதியில்  பிரசுரமாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ngiri2704@rogers.com


எழுத்தாளர் செ.கணேசலிங்கன் உருவாக்கிய பதிப்பகம் குமரன் பப்ளிஷர்ஸ். தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸ் இயங்க, இலங்கையில் அவரது மகன் க.குமரன் உருவாக்கிய பதிப்பகம்தான் குமரன் புத்தக இல்லம். இரு பதிப்பகங்கள் மூலமும் நாவல், கட்டுரை, நாடகம், சிறுகதை, ஆய்வு (இலக்கியம், தொல்லியல், வரலாறு என் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளிலும் இலங்கை எழுத்தாளர்கள்,கல்விமான்கள் பலரின் நூல்களை வெளியிட்டுள்ளார்கள் இப்பதிப்பகத்தினர். இவர்களுடன் தொடர்பு கொள்வதற்குரிய விபரங்களைக் கீழே தருகின்றோம்:

Continue Reading →

ஜெயாபாதுரியின் நடிப்பில் ‘குட்டி’

குட்டி திரைப்படம்

என அபிமான நடிகைகளிலொருவர் நடிகை ஜெயாபாதுரி. சாதாரண அடுத்த வீட்டுப் பெண் போன்ற தோற்றம். மானுட உணர்வுகளை உள்வாங்கி மிகச்சிறப்பாக, இயல்பாக நடிக்கும் திறமை. இவை இவரது நடிப்பின் வலுவான அம்சங்கள். ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னரே இவருக்கு நடிப்புத்திறமையில் ஆர்வமிருந்தது. உலகப்புகழ்பெற்ற இயக்குநர் சத்யத் ரேயின் ‘மாநகர்’ திரைப்படத்தில் இவர் தன் பதின்ம வயதில் நடித்திருக்கின்றார். பின்னர் இவர் நடிப்பு, சினிமா இவற்றில் ஆர்வம் கொண்டு புனாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து தங்கப்பதக்கம் பெற்று தேர்ச்சியடைந்தார். இவரது முதலாவது ஹிந்தித்திரைப்படம் ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வெளியான ‘குட்டி’.

Continue Reading →

பதிப்பகங்கள் அறிமுகம்: பூபாலசிங்கம் புத்தகசாலை / பதிப்பகம்

பதிப்பகங்கள் அறிமுகம்அமரர் பூபாலசிங்கம்

பதிவுகள் இணைய இதழில் பதிப்பகங்களின் அறிமுகம் இடம் பெறும். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ்ப்பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு வளம் சேர்த்து வருகின்றன. உலகளாவியரீதியில் தமிழ் மக்களால் வாசிக்கப்படும் பதிவுகள் இணைய இதழில் உங்களைப்பற்றிய அறிமுகங்கள் மூலம் உலகளாவியரீதியில் உங்கள் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றித் தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பதிப்பகங்கள் தம்மைப்பற்றிய விபரங்களை அனுப்பி வைத்துப் பயனடைய வாழ்த்துகின்றோம்.  இப்பகுதிக்கு விபரங்களை அறிவிக்க விரும்பினால் பதிப்பகத்தின் பெயர், வெளியிட்ட நூல்கள், தொடர்பு விபரங்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய சுருக்கமான அறிமுகக் குறிப்பினை அனுப்பி வையுங்கள். அவை பதிவுகளின் ‘பதிப்பகங்கள் அறிமுகம்’ பகுதியில்  பிரசுரமாகும். அனுப்ப வேண்டிய முகவரி: ngiri2704@rogers.com


1. பூபாலசிங்கம் புத்தகசாலை, இலங்கை

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்துக்குக் காலம் பதிப்பகங்கள் பல  தோன்றி மறைந்துள்ளன. அவற்றில் பல தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. அவற்றில் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குத் தனி மதிப்புண்டு. தற்போதைய அதன் உரிமையாளரான ஶ்ரீதர்சிங் அவர்களின் தந்தையாரான பூபாலசிங்கம் அவர்களுக்குத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த மதிப்புண்டு. இலங்கைத்தமிழர்களை, இலங்கைத் தமிழ்ச்சஞ்சிகைகளை, பத்திரிகைகளையெல்லாம் வரவேற்று ஊக்கமும் , ஒத்துழைப்புமளித்தவர் அவர். அவரைப்பற்றி இலக்கிய ஆளுமைகள் பலர் தம் நினைவுக்குறிப்புகளில் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் நிலவிய போர்ச்சுழலில் எரிக்கப்பட்டபோது மீண்டும் உயிர்ந்தெழுந்து சாதனை படைத்துள்ளது. தற்போதும் பூபாலசிங்கம் புத்தகசாலை இயங்கி வருகின்றது. புத்தகசாலையுடன் பதிப்பகமாகவும் இயங்கி நூல்களை வெளியிட்டு வருகின்றது.

Continue Reading →

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம் !

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஓயாமலுழைத்து நிற்கும் ஓருயிரை நினைப்பதற்கு
தாய்நாளாய் ஒருநாளை தரணியிலே வைத்துள்ளார்
வாழ்வெல்லாம் எமக்காக ஈந்துநிற்கும் அவ்வுயிரை
வதங்காமல் காப்பதுதான் மானிலத்தில் தாய்த்திருநாள்  !

சுமையென்று கருதாமல் சுகமாக எமைச்சுமந்து
புவிமீது வந்தவுடன் புத்துணர்வு அவளடைவாள்
அழுதழுது அவதியுற்று அவளெம்மை பெற்றிடுவாள்
அவள்மகிழச் செய்வதுவே அன்னையரின் தினமாகும்    !

காத்துவிடும் தெய்வமாய் காலமெலாம் இருந்திடுவாள்
கண்ணுக்குள் மணியாக எண்ணியெமைக் காத்திடுவாள்
பார்க்குமிடம் எல்லாமே  பார்த்திடுவாள் எம்மையே
பாரினிலே அவளுக்கு ஈடாவார் எவருமுண்டோ   !

Continue Reading →

சிறுகதை : நீச்சல்

நீந்தும் சிறுவன்

கடல்புத்திரன் (ந.பாலமுரளி) -

வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிருருந்தது .’ஒரு மாறுதல் தேவை’ என‌ நினைத்தார். கல்விக்கந்தோரில் இவரின் அப்பாவிற்கு தெரிந்தவரான‌ மகாலிங்கம் , இராசையா போன்ற அதிகாரிகள் இருந்தார்கள். மகாவித்தியாலயதிற்கு அண்மித்தே கல்விக் கந்தோரும் இருந்தது, அதிபரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு நேரிலே சென்று விண்ணப்பத்தை கையளித்தார். யாழ்ப்பாணம் தான் விருப்பப் பிரதேசமாக இருந்தது. இங்கே வருவதற்கு முதல் அங்கே தான்…சிறு வயதில் பணியைத் தொடங்கி இருந்தவர். கல்யாணம் முடித்த பிறகு கொஞ்சம் தள்ளி இருந்தால்… என்ன, என்று வவுனியாவைத் தெரிய …அம்மாவிற்கு என்னம் காரணங்கள் ? அவருடைய மகன் திலீபனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அன்று, தெரியிற வயசுமில்லை ,பன்னிரெண்டு, பதின்மூன்று என்ற..பிஞ்சுப்பருவம் ! ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விருட்ச‌ விருப்பம் ? அதிபரிடம் ஏற்கனவே கதைத்திருந்தார். எப்பவுமே உடம்பை ஒரு வித ஆட்டத்துடன் கதைக்கிற‌ சத்குருநாதன், அரசியல் மேடைகளில் பிரச்சார பீரங்கியாக …போக வேண்டிய‌வர், அதிபராகி அரசியலில் சம்பாதிக்க முடியாத ‘நல்லவர்’ என்ற பெயரை ஆசிரியர் ,மாணவர் மத்தியில் சம்பாதித்து விட்டிருக்கிறார். நிச்சியமாக அவர் கதைப்புத்தகம் வாசிக்கிற ஒரு இலக்கியவாதியாகவும் இருக்கவே வேண்டும் ! ஒருவேளை , மனுசர் ஆங்கிலத்தில் படிக்கிறாரோ ?. கனகாலமாக அதிபராக வீற்றிருக்கிறார் . புரிந்து கொள்ள‌க் கூடியவர், வயதில் பெரியவர் .”தங்கச்சி, உதவி ஏதாவது செய்ய வேண்டுமா? ” எனக் கேட்டார். ” இல்லை சேர், தெரிந்தவர்கள் இருவர் அங்கே இருக்கிறார்கள் ” என்று பள்ளிக்கூட நேரத்தில் அனுமதிப் பெற்றுச் சென்றார் .

Continue Reading →