‘கழுகும் குழந்தையும்’ ஓவியமும், புகைப்படக் கலையும் பற்றி…

கழுகும் குழந்தையும்அண்மையில் எழுத்தாளரும், ஓவிய, காணொளிக் கலைஞருமான தமயந்தியின் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா எழுதியிருந்த பதிவொன்றில் காணப்பட்ட வசனனங்கள்  என் கவனத்தை ஈர்த்தன. அது இதுதான்:  “ஒரு புகைப்படம் என்பது ஒரு புகைப்படக் காரனுக்கு தொழில் அல்ல. அது அவனது அரசியலைப் பேசுபவை” உண்மையில் நான் அறிந்த புகைப்படக் கலைஞர்கள் பலர் சிறந்த புகைப்படக் கலைஞர்கள். அவர்களில் பலருக்குப் புகைப்படம் என்பது தொழில். இது ஓவியர்களுக்கும் பொருந்தும்,  இவர்களெல்லாரும் தம் கலையை விற்றவர்கள்; விற்பவர்கள்.  இவர்கள் எல்லாரும் சிறந்த புகைப்படக் கலைஞர்கள்; ஓவியர்கள்.  இந்த வசனங்களைப்பார்த்ததும் முதலில் என் நினைவுக்கு வந்தவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த , வெள்ளையினத்தவரான கெவின் கார்ட்டர். உலகின் மிகச்சிறந்த புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக விளங்கியவர். உலகின் பல பகுதிகளிலும், தென்னாபிரிக்காவிலும் நடந்த மானுட துயரம் மிகுந்த மோதல்கள் பலவற்றின் மானுட துயரங்களைப் புகைப்படங்களாக்கியவர்.

Continue Reading →

கொரொனாக் கால முகநூற் குறிப்புகள் !

மொன்ரியால் மைக்கல்மொன்ரியால் மைக்கல்பதிவுகள் இணைய இதழ், திண்ணை இணைய இதழ் போன்றவை ஒரு காலகட்டத்தில் (முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் தோன்றியிராத காலத்தில், வலைப்பூக்கள் உருவாகாத காலத்தில்) உலகெங்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு பற்றும் முக்கிய களங்களாகவிருந்தன. அக்காலகட்டத்தில் இலக்கிய ஆளுமைகள் பலரின் தொடர்புகள் ஏற்பட்டன. மொன்ரியால் மைக்கல் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலகட்டத்தில் ஜீவன் கந்தையா, சதுக்கபூதம் என்னும் புனைபெயர்களில் வந்து விவாதங்களில் பங்கு பற்றியிருக்கின்றார். பதிவுகள் இதழில் பல படைப்புகளை எழுதியுள்ளார். ‘ஏழாவது சொர்க்கம்’ என்றொரு நாவல் எழுதியுள்ளார். 

தற்போது மொன்ரியாலில் வயோதிபர்களுக்கான முதியோர் இல்லமொன்றில் தலைமைச் சமையற்காரராக (Chef)வேலை பார்க்கின்றார். கொரோனாவின் தாக்கத்தால் உலகே அலறிக்கொண்டிருக்கும் தற்போதுள்ள சூழலில் இவரைப்போன்ற முன்னிலைப்பணியாளர்களின் சேவை போற்றுதற்குரியது. முதலில் அதற்காக இவர்களுக்கு எம் நன்றியைத்தெரிவிப்போம். அவர் தற்போது தனது கொரோனா அனுபவங்களைச் சிறு சிறு முகநூற் குறிப்புகளாகப்  பதிவு செய்து வருகின்றார். அவை வெறு ம் குறிப்புகள் மட்டுமல்ல. இலக்கியத்தரமான குறிப்புகளும் கூட. அக்குறிப்புகள் கொரொனா மானுடர் மேல் ஏற்படுத்தும் உளவியல்ரீதியிலான தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்துகின்றதால் மேலும் முக்கியத்துவம் மிக்கவையாகவுள்ளன. அவற்றில் அண்மையில் அவர் எழுதிய குறிப்புகளை இங்கு தொகுத்துத் தருகின்றேன். அவை ஒரு  குறிப்பிட்ட கால மானுட அனுபவங்களாக இன்னுமொரு காலத்தில் விளங்கும் என்பதாலும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’ –


உயில்(1): பெரு மழை.

இந்த இடர்க்கால வாழ்க்கையை நான் எழுத விரும்புகிறேன் . நான் வேலை செய்யும் geriatric centerஇல் உண்மையான இடர் வெளிவரமுடியாது. ஆங்கு, 99வீதமாமான வயோதிபகர்கள் யூதர்கள். நிர்வாகம் ஏதோவொரு காரணத்திற்காக எல்லா உண்மைகளையும் மறைக்கிறார்கள். இன்று நான் பகிர்ந்தளித்த 564 சாப்பாடுகளுக்குள், முப்பத்தியாறு சாப்பாடுகள் தனிமைப்படுத்தியவை. அவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதாக நம்புகிறேன்.

Continue Reading →