முற்றுப் பெறாத உரையாடல்கள் – 6 : பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்

கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.கடந்தவாரம் சனிக்கிழைமையன்று (21.07.2018) மீண்டுமொரு மாலை வேளை ஈஸ்ட் ஹாம் Trinity Centre இல் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் அமைப்பினரால் ‘பிரதிகள் மீதான வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற பதாகையின் கீழ் பல நூல்களின் அறிமுக விழாவும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

மூன்று அமர்வுகளாக இடம்பெற்ற இந்நிகழ்வின் முதலாவது நிகழ்வினை கவிஞர் நா.சபேசன் நெறிப்படுத்தினார். இதில் முதலாவதாக ஜிப்ரி ஹாசனின் படைப்புலகமாக அவரது மூன்று நூல்களான ‘போர்க்குணம் கொண்ட ஆடுகள்’ என்ற சிறுகதைத்தொகுதியும் ‘மூன்றாம் பாலினத்தின் நடனம்’ என்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும் ‘விரியத் துவங்கும் வானம்’ விமர்சன நூலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவை குறித்து அறிமுகம் செய்யுமாறும் நான் கேட்கப்பட்டிருந்தேன். மூன்று நூல்கள். எனக்கு 25 நிமிடங்கள் தரப்பட்டிருந்தது. ஒரு வகையாக 35 நிமிடங்கள் வரை எடுத்து பேசி முடித்தேன். ஜிப்ரி ஹாசன் இன்று கிழக்கிலங்கையின் முக்கியமான படைப்பாளி, விமர்சகர், மொழி பெயர்ப்பாளர். அவரது படைப்புலகம் குறித்து இங்கு ஓரிரு வார்த்தைகளில் எழுதி முடித்து விட முடியாது. அவரது இந்த மூன்று நூல்களும் இன்று ஈழத்தில் பலராலும் விதந்துரைக்கப்படுகின்ற முக்கியமான நூல்கள் என்பதினை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அடுத்த நிகழ்வாக அனோஜன் பாலகிருஷ்ணனின் ‘பச்சை நரம்பு’ சிறுகதைத்தொகுதி குறித்து ஹரி இராஜலெட்சுமியும் பாத்திமா மஜிதாவும் உரை நிகழ்த்தினார்கள். ஹரி ‘அனோஜனின் சிறுகதைகளில் ஆண்களும் எதிர்பாலின ஒழுங்கு சீர்திருத்தங்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன்னுரையில் போரின் தரிசனங்களை சாட்சியங்களாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சயந்தன், யோ.கர்ணன், போன்றவர்களின் கதைகளில் இருப்பதாகவும் அது வாசிக்கும் போது களைப்பினை ஏற்படுத்துவதாகவும் ஆனல் அனோஜன் அதிலிருந்து விலகி அக உணர்வுச் சிக்கல்களை அழகாகவும் தத்ரூபமாகவும் வெளிப்படுத்துகிறார் எனவும் ஆயினும் இவரது கதைகளிளும் போரின் சாட்சியங்கள் அரூப தரிசனங்களாக வெளிப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.  

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 5 : எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல. ‘புதிய திசைகள்’ பாலன் உடன் ஓர் உரையாடல்

புதிய திசைகள் பாலன்மீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின்  பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.

•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை.
•போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும்.
•சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற்காக எமது உரிமைகளை விற்க முடியாது.
•தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல்.
•வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.

மேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.

முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – 04: முற்போக்கு தேசியத்தை முன்வைத்து: மக்கள் கலை பண்பாட்டு களம் தோழர்களுடன் ஓர் உரையாடல்!

கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.கொஞ்சம் தாமதமான பதிவு. ஆயினும் இதனை இங்கு பதிவிடாமல் இந்த உரையாடல் வெளியினை கடந்து செல்ல முடியாது. கடந்த மாத இறுதியில் 30.06.2018 சனிக்கிழமையன்று மக்கள் கலை பண்பாட்டுக் களம் அமைப்பினரின் சார்பில் ஒரு நிகழ்வு ஒன்று இலண்டன் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த நியூ மோல்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பறையிசை, பாடல்கள், கவிதா ஆற்றுகை போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளுடன் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் பொதுச்செயலாளரும் ‘புதிய பூமி’ பத்திரிகையின் ஆசிரியருமாகிய சி.கா. செந்தில்வேல் எழுதிய ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ என்ற நூல் அறிமுகமும் நடைபெற இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

மக்கள் கலை பண்பாட்டுக் களம்  அமைப்பானது மிக அண்மையில் (ஒரு சில வருடங்களுக்கு முன்பே) உருவாக்கம் பெற்ற இடது சாரி சார்பு நிலை கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பாகும். மக்களின் சமகால பிரச்சனைகளை,  சமூக வாழ்வியலை அவர்களின் வாழ்வியலினூடக, அவர்களின் வாழ்க்கையின் மொழியினூடாக, கலை, இலக்கிய வடிவங்களாக வெளிக்கொண்டுவருவதும் அதையே அவர்களது போராட்ட ஆயுதமாக்குவதும் தான் மக்கள் கலை பண்பாட்டு களத்தின் நோக்கமாகும்.

அவர்கள் கடந்த காலங்களில் நடாத்திய நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற அமைப்பினர்களைப் போல் அல்லாமல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் குறித்த நேரத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணத்தில் நானும் குறித்த நேரத்திற்கு முன்பே சமூகமளித்திருந்தேன். ஆனால் இந்த தடவை அவர்களது நிகழ்வும் ஒரு கொஞ்ச நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது என்பதினையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். 

ஒரு நிமிடநேர மௌன அஞ்சலியுடன் ஆரம்பமாகிய அந்நிகழ்வானது நேரிடையாகவே தோழர் சி.கா.செந்தில்வேல் இன் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை’ நூல் அறிமுகத்திற்குள் நுழைந்தது.

நிகழ்வினை தோழர் வேலு அவர்கள் நெறிப்படுத்தினார். முதலில் புதியதிசைகள் ஒருங்கிணைப்பாளர் மாசில் பாலன் அவர்கள் உரையாற்றினார். இது போன்ற வரலாற்று ஆவணங்கள் வெளிவரவேண்டியத்தின் அவசியத்தை வலியுறித்தி வரவேற்று பேசிய அவர் அதற்குமப்பால் இந்நூல் குறித்தும் புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறுவிதமான காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். ஈழ விடுதலைப் போரை முற்று முழுதாக நிராகரிக்கும் அவர்கள் அந்த முப்பது வருட காலத்தில் வெறும் அறிக்கைகள் விட்டதற்கும் அப்பால் செய்த நடவடிக்கைகள் என்ன என்றும், முற்போக்கு தேசியம் குறித்தும், அப்படி ஒரு தேசியம் உருவானால் அதனுடன் இணைந்து பயணிப்பதாகவும் இப்போது குறிப்பிடும் இவர்கள் கடந்த காலங்களில் ஒரு முற்போக்கு தேசியத்தின் உருவாக்கத்திற்கு என்ன நடவைக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். 

Continue Reading →

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்: சிறுகதை – நாவல் பயிற்சிப்பட்டறை – July 2018

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் பயிற்சிப்பட்டறை இம்மாதம் எதிர் வரும் சனிக்கிழமை (28-07-2018) அன்று காலை 10:15 தொடக்கம் 11:45 வரை ஸ்காபுறோவில்   90 Littles…

Continue Reading →

சந்திப்பு – 40

தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள்சிறப்புரை  ஆர் வெங்கடேஷ் (பத்திரிகையாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர். கட்டுரையாளர்)இடம் :      கிளை நூலகம்,  தேதி                           26.07.20187 இராகவன் காலனி…

Continue Reading →

சொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் – 2018

சொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018

கனடா, மிசசாகாவில் உள்ள சொப்பா குடும்ப மன்றத்தின் கனடாதினக் கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை, யூன் மாதம்  30 ஆம் திகதி 2018 இல் மிசசாகாவலியில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கில் கொண்டாடப்பட்டது. 500 மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பு கடந்த ஒன்பது வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. சென்ற சனிக்கிழமை மிசசாகா நகரில் கனடா தினம் கொண்டாடப்பட்ட போது பல்வேறு சமூகம் சார்ந்த பல அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கனடாதின விழாவின் ஆரம்பத்தில் விசேட விருந்தினர் ரஜீவ்கரன் முத்துராமன் அவர்களால் கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, சொப்கா மன்றக் கீதம் ஆகியன மன்ற அங்கத்தவர்களால் இசைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வைத்தியகலாநிதி வி. பிகராடோ, திருமதி பிகராடோ ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். இந்த நிகழ்வின்போது கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டு, அவரது பிரதம விருந்தினர் உரையும் அப்போது இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்திருந்த மிசசாகா மேயர் மதிப்புக்குரிய போணி குறம்பி (டீழnnநை ஊசழஅடிநை) அவர்களின் உரை இடம் பெற்றது. தொடர்ந்து நகரசபை, மாகாணசபை அங்கத்தவர்களின் உரைகள் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து மன்றத்தின் முன்னாள் தலைவியும், தற்போதைய காப்பாளருமான சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்கள் மன்றத்தின் தற்போதைய தலைவர் குரு அரவிந்தனால் அவரது கடந்தகால சேவைகளைப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

Continue Reading →

கோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு!

கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக  ஆசி கந்தராஜாவின் "கள்ளக்கணக்கு" சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.

கோவை புத்தக திருவிழாவில், காலச்சுவடு பதிப்பக வெளியீடாக  ஆசி கந்தராஜாவின் “கள்ளக்கணக்கு” சிறுகதைத் தொகுப்பு அ முத்துலிங்கத்தின் முன்னுரையுடன் வெளியிடப்படுகின்றது.

கோவை வெளியீடு:
உரை: திரு க மோகனரங்கன்
காலம்: 2018 ஜூலை 22 ஞாயிறு காலை 10:00 மணி.
இடம்: கோவை புத்தக திருவிழா. ஆர்த்ரா ஹால், அண்ணா சிலை அருகில். கோவை.

Continue Reading →

முற்றுப் பெறாத உரையாடல்கள் – ௦3: இசை உலகம் – இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக ..

முற்றுப் பெறாத உரையாடல்கள் - ௦3: இசை உலகம் – இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக ..

மீண்டும் ஒரு நூல் அறிமுக விழா கடந்த வாரம் சனிக்கிழமையன்று (23.06.2018) ஈஸ்ட்ஹாம் இல் உள்ள Trinity Centre இல் நடைபெற்றது. கௌசல்யா சுப்ரமணியனின் ‘இசைத்தமிழ் சிந்தனைகள்’ ‘தமிழ் இசைப்பாடல் வகைகள்’ என்ற இரு நூல்களே அவை. இசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ரசிப்பதுடன் சரி. இப்போது கொஞ்சம் எனது வாசிப்பு எல்லைகளை விரிவு படுத்திய காரணத்தினால் இசையை ரசிப்பது என்பதுவும் அறவே இல்லாமல் போய்விட்டது. எனவே வேண்டா வெறுப்பாகத்தான் அரங்கில் போய் உட்கார்ந்தேன். 4 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு மிகவும் தாமதமாக 6 மணிக்கே ஆரம்பமாகியது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் நா.சுப்பிரமணியம் அவர்கள் ‘ஒரு கால கட்டத்து நாவல்கள்’ என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. எனவே அவர் உரையைச் செவி மடுப்பதே எனது நோக்கமாக இருந்தது.

Continue Reading →