காலம்: ஜூன் 2, 3ம் நாட்களில்
இடம்: 440 McLevin Avenue, Scarborough, ON M1B 5J5
சனிக்கிழமை, 2018 ஜூன் 2: நிகழ்ச்சி நிரல்
காலை 10:00: நிகழ்ச்சி ஆரம்பம்
•வரவேற்பும் சிற்றுண்டியும்
•ஓவியக் கண்காட்சி
•நூலக நிறுவனத்தின் கண்காட்சி
•புத்தகக் கண்காட்சி ஆரம்பம்
காலை 11:00: ஆரம்ப நிகழ்வு
•வரவேற்பும் மௌன வணக்கமும்
•பூர்வீக மக்களின் நில உரிமை பற்றிய அறிவிப்பு
•இலக்கியச் சந்திப்பின் வரலாறு – அதீதா
காலை 11:20 – பி.ப 1:00 : அமர்வு 1: இளையோர் உலகம்: சமகாலப் பார்வைகள்
சாலினி | கவிதன் | ஶ்ரீரஞ்சனி
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘யுத்தம் செய்’,’பிசாசு’, ‘துப்பறிவாளன்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவரும், நடிகரும், எழுத்தாளருமாகிய திரு மிஷ்கின் அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் ஏற்பாடாகி…
கனடாவில் கடந்த 25 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமையன்று 19-05-2018 ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. புதிய இயக்குனர் சபைக்கான தேர்தல் (2018) நடைபெற்றபோது தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகசபையினரின் பதவிகளுக்கான தெரிவில் போட்டி எதுவுமின்றி அனைத்து பதவிகளுக்கும் பின்வருவோர் சபையினால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்
‘ உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ – (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த மூன்றாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு முடிவுகளை காக்கை குழுமம் வெளியிட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து வெளிவரும் காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த புலம்பெயர் கவிஞர் ‘கி பி அரவிந்தன்’ நினைவாக ஆண்டு தோறும் இலக்கியப் பரிசுப் போட்டிகளை நடாத்திவருகிறது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டில் ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’ இனை நடாத்தியது. இந்தப் போட்டியில் உலகளாவிய 59 எழுத்தாளர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் இறுதிச் சுற்றுக்கு 30 குறுநாவல்கள் தெரிவாகின. இந்தக் கடுமையான எழுத்துப்போட்டியின் தெரிவுகளை நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர்கள் மதிப்புக்குரிய பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா) மதிப்புக்குரிய எழுத்தாளர் இளவாலை விஜயேந்திரன் (நோர்வே) கொண்ட குழு பரிசீலனையில் எட்டப்பட்ட முடிவுகளை காக்கை இதழ்க் குழுமம் 10.04.2018 அன்று முறைப்படி வெளியிட்டிருக்கிறது.
குறுநாவல்களின் பெறுமானம் கருதி பரிசுக்குரியனவாக 14 குறுநாவல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பூர்வீகமும் – புலம்பெயர்வுமென இந்தியா, இலங்கை, ஜேர்மனி, கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் என தற்போது புவி எங்கு பரந்து வாழும் தமிழர்களது படைப்புகளின் மஞ்சரியாக அமைந்தமை சிறப்பானதாகும்.
பணப்பரிசுகளும் சான்றிதழுமான குறுநாவல்கள் – 7 மற்றும் காக்கையின் ஓர் ஆண்டு சந்தா பெறும் தெரிவுக் குறுநாவல்கள் – 7 என இவை தெரிவாகியுள்ளன. இந்தக் குறுநாவல்கள் அனைத்தும் காக்கை வெளியீடாக நூல் வடிவம் பெறும் என காக்கை குழுமம் அறிவித்திருக்கிறது..
0. முதலாவது பரிசு : 10 000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் கொங்கை – அண்டனூர் சுரா (இந்தியா)
0. இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் மைதானம் – சோ. தர்மன் (இந்தியா)
0. மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ் குரவை மீன்கள் புதைந்த சேறு – மோனிகா மாறன் (இந்தியா)
திருத்தப்பட்ட பட்டியல் : 09.04.2018 அன்று வெளியாகியிருந்த இரண்டாவது பரிசு ‘இராமன் ஒரு தூர தேசத்து மகாராஜா’ எனும் குறுநாவல் ஊடகமொன்றில் ‘தூர தேசத்து மகாராஜா’ எனும் தலைப்பில் வெளியாகியுள்ளதால் தகுதிநீக்கமடைகிறது.
நான்கு ஆறுதல் பரிசுகள் : 1500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
· நீலு என்கிற நீலாயதாட்சி – எஸ். ஸ்ரீவித்யா
· இனியும் விதி செய்வதோ… ! – மைதிலி தயாபரன் (இலங்கை)
· வெயில் நீர் – பொ. கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
· நெடுஞ்சாலைப் பைத்தியங்கள் – வி. வல்லபாய் (இந்தியா)
நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது.
விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /-
(பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப்போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவிலாவது பரிசு பெரும் திரைக்கலைஞர், நான்காவது ஆண்டும் பங்கேற்று ஏதேனும் ஒரு பிரிவில் விருது பெற்றால் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். ஆனால் இடையில் ஒரு வருடம் இடைவெளி ஏற்பட்டாலும் பரிசுத்தொகை கிடைக்காது. தொடர்ந்து குறும்படத்துறையில் இயங்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கவே இத்தகைய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.
கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். மிக முக்கியமாக விழாவில் திரையிட தேர்வு செய்யப்படும் பத்து குறும்படங்களும் தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் நடத்தும் சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 க்கு நேரடியாக தகுதி பெரும். சென்னை சுயாதீன திரைப்பட விழா நடைபெறுவதற்கு முன்னரும் குறும்படங்கள் சமர்ப்பிக்க அறிவிப்பு வெளிவரும். ஆனால் அப்போது பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று திரையிட தெரிவான பத்து குறும்படங்களை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அந்த குறும்படங்கள் நேரடியாக IFFC யில் பரிசுக்குரிய பிரிவில் திரையிடப்படும்.
Nadarajah Selvarajah – noolthettam.ns@gmail.com