புகலிடத் தமிழ்ச் சிறுகதைகளில் கனடாத் தமிழ்ச் சிறுகதைகளுக்கும் முக்கியமானதொரு பங்குண்டு. புகலிடத் தமிழர் படைத்த சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை உளளடக்கிய தொகுப்புகள் பல வெளிவந்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக வெளிவரும் தொகுப்புகள் சிலவற்றில் வெளியாகும் படைப்புகளைப் பார்க்கும்போது ஒரு குழுவாக இயங்கும் சில எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அமைத்துக்கொண்ட வட்டத்தைச் சார்ந்தவர்களின் படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து தொகுப்புகளில் சேர்க்கும் போக்கு தென்படுகின்றதோ என்று ஐயுறுகின்றேன். இந்நிலை இலக்கியத்துக்கு ஆரோக்கியமானதொரு போக்கல்ல. ‘காலம்’ செல்வம், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இவர்களைச் சுற்றியுள்ள சில எழுத்தாளர்களின் படைப்புகள், கவிஞர்கள் இவர்களின் படைப்புகளை மட்டுமே திரட்டித் தொகுத்து வருகின்றார்களோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. கடந்த முப்பது வருடங்களில் ‘காலம்’ செல்வம் எத்தனை சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கின்றார்? ஆனால் அண்மைக்காலத் தொகுப்புகளில் தவறாமல் இவரது கவிதை, சிறுகதைகள் சேர்க்கப்படுகின்றன. ஒரு தொகுப்பானது தொகுக்கப்படும்போது குழு மனப்பான்மையுடன் தொகுக்கப்படுமானால் அது வரவேற்கத்தக்கதல்ல.
கவிதை: ஒரு கவிஞனின் (மனிதனின்) பெருங்கவலை!
– வ.ந.கிரிதரன் –
ஒரு சாதாரண ‘காலக்சி’யினோரத்தே – சுழலும்
ஒரு சாதாரணச் சூரிய மண்டலத்தே – சுழலும்
ஒரு சாதாரணக் கோளத்தில் – வாழும்
ஒரு சாதாரணக் கவிஞனொருவனுக்கு- அல்லது
ஒரு சாதாரண மனிதனொருவனுக்கு
ஒரு பெருங்கவலை. அது என்ன?
சிறுவர் இலக்கியமென்றால் முதலில் நினைவுக்கு வருமிருவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. மற்றவர் வாண்டுமாமா ( இயற்பெயர் வி.கிருஷ்ணமூர்த்தி ). அழ வள்ளியப்பா குழந்தைகளுக்காக , குழந்தைகள் இரசிக்கும்படியான அற்புதமான கவிதைகள் எழுதியவர். வாண்டுமாமாவோ குழந்தைகளுக்காக கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியதுடன் குழந்தைகளுக்கான சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் (பூந்தளிர், கோகுலம்) தன் பணியினைத் தொடர்ந்தவர். அறிவியல், இலக்கியம், வரலாறு எனப் பல்வேறு துறைகளிலும் குழந்தைகளுக்கு எளிமையாக, சுவையுடன், புரியும் வண்ணம் கட்டுரைகளை, கதைகளைப் படைத்தவர் வாண்டுமாமா. இவரது நூல்கள் பலவற்றை வானதி பக்கம் மிகவும் அழகாக, சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பா சொன்ன கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள் என்று பல தொகுதிகளை வானதி பக்கம் வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. வாண்டுமாமா சிறுவர்களுக்காக எழுதியதுடன் பெரியவர்களுக்காகவும் எழுதியிருக்கின்றார். கல்கி சஞ்சிகையுடன், அதன் இன்னுமொரு வெளியீடான கோகுலம் சஞ்சிகையுடன் இவரது வாழ்வு பின்னிப் பிணைந்துள்ளது. கல்கியில் இவர் எழுபதுகளில் கெளசிகன் என்னும் பெயரில் எழுதிய சுழிக்காற்று, சந்திரனே நீ சாட்சி ஆகிய மர்மத் தொடர்கதைகளும், பாமினிப் பாவை என்ற சரித்திரத் தொடர் நாவலும் இன்னும் ஞாபகத்திலுள்ளன.
இலங்கையின் மரபுக் கவிஞர்களில் கவிஞர் வி.கந்தவனத்துக்கு முக்கியமானதோரிடமுண்டு. ‘கவியரங்குக்கோர் கந்தவனம்’ என இரசிகமணி கனகசெந்திநாதனால் விதந்துரைக்கப்பட்டவர் கவிஞர் கந்தவனம். என் பால்ய காலத்திலேயே இலங்கையில் வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடாக இவரது பெயர் எனக்கு அறிமுகமானது. கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி), நிலாவணன், திமிலைத்துமிலன், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, மஹாகவி, இ.முருகையன், மதுரகவி இ.நாகராஜா, வேந்தனார், அம்பி என்று தொடரும் இலங்கைத்தமிழர் கவிதையுலகில் கவிஞர் கந்தவனத்துக்கொரு நிலையான இடமுண்டு.
கவிஞரின் படைப்புகளில் எனக்குப் பிடித்த மிக முக்கியமான தொகுப்புகளாக நான் கருதுவது ‘பாடு மனமே’, ‘இலக்கிய உலகம்’, மற்றும் ‘கீரிமலையினிலே‘ ‘பாடு மனமே’ தொகுப்பிலுள்ள நல்லதொரு கவிதை ‘பாவலனாகிடல் வேண்டும்’.
‘காலை, மாலை மற்றும் இரவு வேளைகளிலெல்லாம் மானுடர் வேலை செய்கின்றார். காலம் முழுவதும் இவர் செய்யும் வேலை எந்தவிதப் பயனுமற்றது. இவ்விதமாக வேலை , வேலை என்று நாளும் பொழுதும் வாழும் மானிடர் வாழ்வில் துயரம் சூழ்ந்துள்ளது. சோலி, சுரட்டில் அவர்தம் வாழ்வு சோர்ந்து தளர்ந்திடுகின்றது. வஞ்சகமும், சூதும், களவும் நிறைந்தவர் தஞ்சம் பெறுமுலகில், அவர்களுக்கஞ்சி நீதியும் மறைந்து விடுகிறது. பஞ்சக் கொடுமைகள், சாதிச்சண்டைகள் மலிந்த இவ்வுலகு கண்டு நெஞ்சம் வெடிக்கிறது.’
நாஞ்சில் நாடனின் இளம் எழுத்தாளர்கள் பற்றிய ஆனந்த விகடன் பட்டியல் பற்றிய தனது கருத்தினை தனது வலைப்பதிவில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். அதிலவர் ‘முதல்கேள்வி இப்படி பட்டியல்போடுவது சரியா என்பது. உலகமெங்கும் எங்கு இலக்கியம் உள்ளதோ அங்கெல்லாம் இப்படி பட்டியல் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதையும், இலக்கியம் தோன்றியநாள் முதல் இப்படிப்பட்ட பட்டியல்கள் வழியாகவே அது தரம் காணப்பட்டு தொகுக்கப்பட்டு முன்வைக்கப்படுகிறது என்பதையும் கோயிந்துக்களுக்கு கொட்டை எழுத்தில்தான் சொல்லவேண்டியிருக்கிறது. சங்ககால நூல்களெல்லாம் அப்படிப்பட்ட பட்டியல்களே. ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே’ என்று கூறியிருக்கின்றார்.
‘ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் பன்னிரு திருமுறைகள் என்பவை எல்லாம் பட்டியல்களே’ என்று ஜெயமோகன் பொதுவாகக் கூறியிருக்கிறார். இது தவறு. இதற்கான ஆதாரங்களை வைத்து அவர் கூறியிருக்க வேண்டும். ஐம்பெருங்காப்பியங்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நின்ற இலக்கியப் படைப்புகள். அதன் பின்னர்தான் பதினான்காம் நூற்றாண்டில் ஐம்பெருங்காப்பியங்களென்ற பெயரில் மயிலைநாதர் என்பவரால் அழைக்கப்பட்டதாக, – சொ.ஞானசம்பந்தன் என்னும் தமிழறிஞர் தனது ‘இலக்கியச் சாரல்’ என்னும் வலைப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:
தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத் தூக்குவது போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள், கழிவுப் பொருட்கள், டியூப் லைட்டுகள், மின்சார ஒயர்கள் என்று தாறுமாறாய் அந்தத் தேர் வடிவமைப்பில் இருந்தன. கூர்ந்து கவனிக்கிற போது ஒரு தேர் வடிவம்தான். ஆனால் முழுக்க கழிவு மற்றும் குப்பைப் பொருட்களால் ஆனது என்று தெரிந்தது அப்பாசாமிக்கு. பாடையைப் போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. தேருக்குப்பின்னால் இருவர் இருவராக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. பேனர்களும், வாசக அட்டைகளும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நெருங்க கோஷங்கள் புரிய ஆரம்பித்தன. சின்ன ஊர்வலம்தான். அட என்ன… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் புகுகிறதே ஊர்வலம். ஒருவாரமாய் போலீஸ் காவலால் திணறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இன்றைக்குக் காணோம். ஓரிருவர் பத்திரம் எழுதும் இடத்தில் தென்பட்டார்கள். ஊர்வலம் காம்பவுண்டுகள் புகுந்தது. கோஷங்கள் சற்று உரத்துக்கிளம்பின. ஊர்வலத்தை யாரும் தடுக்கவில்லை.
ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.
– ‘பதிவுகளில் அன்று’ பகுதியில் திஸ்கி மற்றும் அஞ்சல் எழுத்துருக்களில் பதிவுகளில் அன்று வெளியான படைப்புகள் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு அவ்வப்போது பிரசுரமாகும். அந்த வகையில் R.P. ராஜநாயஹம் எழுதிய இக்கட்டுரையும் பிரசுரமாகின்றது. – பதிவுகள் –
பகுதி 1
Criminals are Creative Artists என்று சொல்லப்படுகிறதல்லவா? அதை ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் மெய்யாக்கியுள்ளார்கள். ‘ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகையின் ஒரு பகுதி காலச்சுவடு 42ல் வெளி வந்த பிறகு 43வது இதழில் மோகனரங்கன், நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. அப்போது திண்ணையில் கண்ணனின் விவாதமாக வந்ததில் கீழ்கண்டவாறு ஒரு பகுதியில் குறிப்பிட்டிருந்தார். ‘ராஜநாயஹத்தை இன்றுவரை நான் சந்தித்ததில்லை. காலச்சுவடின் எந்த அரங்கிலும் அவர் கலந்து கொண்டதில்லை. ஊட்டி தளையசிங்கம் இலக்கிய அரங்கை பற்றிய ராஜநாயஹத்தின் பதிவு காலச் சுவடுக்கு வரும்வரை அவரோடு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. அவரை நாங்கள் அனுப்பி வைத்ததாக ஜெயமோகன் ஆதாரமின்றி அவதூறு செய்து வருகிறார். ராஜநாயஹம் அவர் பெயரில் கட்டுரை எழுதினார். புனைபெயரில் அல்ல. கட்டுரையாக எழுதினார். புனைவாக அல்ல. ‘ என்று எழுதி, பின் தொடர்ந்து எழுதும்போது ‘ஆர்.பி. ராஜநாயஹம் பதிவுக்கு எதிர்வினையாக நாஞ்சில் நாடன் காலச்சுவடுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஜெயமோகன் அதன் நகலை நாடனிடமிருந்து பெற்று திண்ணைக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அதில் நாஞ்சில் நாடனின் அனுமதியின்றி ஜெயமோகன் பல சொற்களை நீக்கியும் பல இடங்களில் தன் கருத்துக்களை சேர்த்தும் அனுப்பியுள்ளார். நாஞ்சில் நாடனின் கையெழுத்துப் பிரதி என்னிடம் உள்ளது. திண்ணைக்கு அதன் புகைப்பட நகலை என்னால் அனுப்பி வைக்க முடியும். என்னுடைய இந்தக் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுக்கும்படி ஜெயமோகனை கேட்டுக் கொள்கிறேன்.’ என்று சவால் விட்டிருந்தார். அப்போது ஜெயமோகன் மூச்சேவிடவில்லை. தொடர்ந்து அந்தர் தியானம். தேள் கொட்டிய திருடனின் நிலை.
– பதிவுகள் இணைய இதழில் 2005 காலகட்டத்தில் விவாதங்கள் பல நடைபெற்றன. எழுத்தாளர்கள் ஒருவருக்கொருவர் காரசாரமாக வாதிட்டுக்கொண்டார்கள். முட்டி மோதிக்கொண்டார்கள். இங்கு வெளிப்படும் கருத்துகள் பதிவுகள் இதழின் கருத்துகளல்ல. வாதங்களில் பங்குபற்றிய கட்டுரையாளர்களின் கருத்துகளே. உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்று கட்டுரையொன்றினை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்தார். அது தொடர்பாக R.P. ராஜநாயஹம் ‘சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! ‘ என்றெழுதிய கட்டுரையும் , அதனைத் தொடர்ந்து வெளியான எதிர்வினைகளும் ஒரு பதிவுக்காக ‘பதிவுகள் அன்று’ பகுதியில் மீள்பிரசுரமாகின்றன. – ஆசிரியர் –
தமிழகம்: சிறப்புடையாரியச் சீர்மையை அறியார்! – R.P. ராஜநாயஹம் –
தமிழ் இலக்கியச் சூழலை நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க்களமாக்கி அழிப்பதுதான் தன்னுடைய நோக்கமென்பதை ஜெயமோகன் மீண்டும் நிரூபித்துள்ளார். உயிர்மை ஏப்ரல் 2005 இதழில் ‘அசோகமித்திரன் படைப்பு மீதான அவதூறு’ என்பதாக இவர் எழுதியுள்ள கட்டுரை இவருடைய நேர்மையின்மையின் வெளிப்பாடு. ‘அசோகமித்திரன் – 50’ ஒளிப்பேழையை காலச்சுவடு மூலமாக கிழக்கு பதிப்பகத்திடமிருந்து பெற்று அந்த நிகழ்ச்சியை முழுமையாக, மூன்றுமுறை ஆழ்ந்து பார்த்தேன். சுந்தர ராமசாமி தன் பேருரையில் அசோகமித்திரனுக்கு பூரண மஹா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்து கௌரவித்திருக்கிறார். பேசியவர், பேசப்பட்டவர் இருவரையும் பற்றி எண்ணும்போது தியாகய்யரின் ஸ்ரீராகக் கீர்த்தனை ‘எந்த்தரோ மஹானுபாவலு அந்தரிக்கி வந்தனமு’ என்நெஞ்சை நிறைத்துப் பொங்கி வழிந்தது. சுந்தர ராமசாமி பேசியதின் சுருக்கம் கீழ்வருமாறு: ‘மிக முக்கியமானவராக அசோகமித்திரனை நான் கருதுகிறேன். நண்பர் ஒருவரிடம் விசாரித்தபோது 200 கதைகள் எழுதியிருக்கிறார் என்று அறிந்தபோது ஆச்சரியப்பட்டேன். இந்நிகழ்ச்சிக்காக இப்போது எண்பது கதைகளை என்னால் வாசிக்க முடிந்தது. இந்த சிறுகதை உருவத்தின் மீது இந்த கலைஞன் கொண்டிருக்கிற தீராத ஆசை. ஒரு நுட்பமான கலைஞனைப் பற்றிப் பேச நாம் இங்கே கூடியிருக்கிறோம். அசோகமித்திரன் 1950 வாக்கில் எழுதத் தொடங்கியிருக்கிறார். இலக்கிய இயக்கங்கள், அரசியல் இயக்கங்களின் பாதிப்பு அவரிடம் இல்லை. அவருடைய எழுத்தால் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களை அவரால் கவரமுடியவில்லை. இடதுசாரி, முற்போக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் போன்றவர்களுக்கு இவருடன் உறவு திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. வாழ்க்கை பற்றி ஓயாத கவலை, வாழ்க்கை திருப்தியாக இல்லை என்ற இவருடைய அக்கறையை அவர்கள் பரிசீலனை செய்யாதது ஏன்? வாசகர்கள் இரண்டு வகை 1. இலக்கியத்தை நேசிக்கும் வாசகர்கள். 2. விசுவாசமான வாசகர்கள். இவர்களில் இலக்கியத்தை நேசிக்கிற வாசகர்களால் இனி அசோகமித்திரனின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். அசோகமித்திரனின் படைப்புகள் சுவாரசியமாக, உறுத்தல் இல்லாதவை. வாழ்க்கையின் சாராம்சத்தை படைப்பாக மாற்ற இவரால் முடிந்திருக்கிறது’.
[ சக இணையச் சஞ்சிகையான ‘திண்ணை’ நமது நட்புக்கும் மதிப்புக்குமுரியது. ரோஸாவசந்தின் இக்கட்டுரை ஆரோக்கியமானதொரு விவாதத்தினை ஏற்படுத்தும் சாத்தியம் கருதியும், கருத்துச் சுதந்திரம் கருதியும் [அதற்காகப் பதிவுகள் நூற்றுக்கு நூறு வீதம் கருத்துச் சுதந்திரமான சஞ்சிகை என்று மார் தட்டிக் கொள்ள நாம் வரவில்லை] பதிவுகளில் பிரசுரமாகின்றது. திண்ணையைப் பொறுத்தவரையில் இணையத் தமிழ் சஞ்சிகைகளில் முதலாவதாக வெளிவந்த/ வெளிவருகின்ற ஆரோக்கியமான, காத்திரமான தமிழ் இணையச் சஞ்சிகை என்ற பெருமை அதற்குண்டு. இணைய விவாதப் பக்கம் எம்மை நாட வைத்ததே திண்ணையின் விவாதத் தளம்தான். இக்கட்டுரையினை இங்கு பிரசுரிப்பதன் மூலம் திண்ணையையோ அல்லது அதன் படைப்பாளிகளையோ (நானும் அவர்களிலொருவன் தான்) அவதூறு செய்யும் நோக்கம் எமக்குக் கிடையாது என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். – ஆசிரியர் -]
-3. எழுத மிகவும் அலுப்பாக இருக்கிறது. ஒரே மாதிரியான விஷயங்களை, அதுவும் எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை எத்தனை முறை சொல்வது! எனது பால், ஜாதி, சமூக நிலை காரணமாய் எனக்கு கிடைத்த எந்த சலுகையையும் விட்டுவிடாமல் அனுபவித்துகொண்டு, அதனால் விளைந்த ஒரு திமிரும் ஏதோ ஒருவகையில் கலந்துதான் ஒவ்வொருவார்த்தையும் என்னிடமிருந்து பிறக்கின்றன. இதில் என் குரல் திண்ணையில் அமுக்கபட்டது குறித்து ஒப்பாரி வைப்பது போன்ற ஆபாசம் கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால் என் எழுத்து திண்ணையில் தடை செய்யபட்டது குறித்து, என் பொருட்டு யாரும் இரங்கல் தெரிவிக்க நியாயமான காரணங்கள் இல்லை. இந்த கட்டுரையுடன் தொடர்புள்ள ‘விவாதம்’, மற்றும் திண்ணை என்ற பத்திரிகை, அதில் உள்ள ‘கருத்து சுதந்திரம்’, அதன் ‘நாட்டாமை’, குறித்து பலருக்கு இருக்கும் பிம்பம் இவற்றை மனதில் வைத்து சில தகவல்களை மட்டும் குறிப்பாய் கீழே தருகிறேன்.