முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்!

கவிஞன் திருமாவளவன்- வெங்கட் சாமிநாதன் -ஈழத்தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து தொடங்கி. அந்த வாழ்வின் வதையை எல்லோருமே பகிர்ந்து கொண்டாலும், அந்தத் தொடக்கம் சிவரமணியின்  

அழகு கண்டு
அதிலே மொய்க்கும் வண்டின்,
மோக ஆதவனின் ஒளி கண்டு மலரும்
ஆம்பலின் நிலை கண்டு
கவிதை வரைவதற்கு
நான்
நீ நினைக்கும்
கவிஞன் அல்ல.

வரிகள் போல, மற்ற பலரின் கவிதைகள் அனுபவ சத்தியமும் கொண்டதல்ல. கவிதையாவதும் இல்லை. மாதிரிக்கு இதோ ஒன்று.

தென்கடல் ஓரம்,
திகழும் நிலாக்கொழுந்தே
துரத்தே எம் தீவு இன்று
துயராடும் தனித் திடல். 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 32: நா.பா.வின் ‘நித்திலவல்லி’ தந்த நினைவுகள்…

நா.பார்த்தசாரதி கடந்த சில வருடங்களில் கல்கி, நா.பார்த்தசாரதி போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழக அரசினால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால் அவை தமிழகத்தின் பல பதிப்பகங்களுக்கும் அவர்களது வியாபாரத்துக்கு உதவி வருகின்றன. அண்மையில் டொராண்டோ நூலகத்தில் நா.பார்த்தசாரதியின் ‘நித்திலவல்லி’ ‘கபாடபுரம்’ போன்ற நாவல்களின் கவிதா பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்த புதிய பதிப்புகளைப் பார்த்தேன். அழகாக அச்சிட்டு, வெளியிட்டிருக்கின்றார்கள். இவற்றில் ‘நித்திலவல்லி’  நாவலை, ஓவியர் கோபுலுவின் அழகான ஓவியங்களுடன் எனது மாணவப் பருவத்தில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசித்திருக்கின்றேன். வெகுசன படைப்புகளைத் தந்த எழுத்தாளர்களில் எனக்கு நா.பார்த்தசாரதியும் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். அவரது சமூக மற்றும் சரித்திர நாவல்களான குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், நித்திலவல்லி போன்ற நூல்களை நான் அன்று விரும்பி வாசித்திருக்கின்றேன். நா.பா.வின் எழுத்து வாசிப்பதற்கு இனிமையானது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர் என்பதால் நெஞ்சைனையள்ளும் இனிய தமிழில் அவரது படைப்புகள் விளங்கும். அந்தத்தமிழுக்காகவே வாசிக்கலாம். உதாரணமாக ‘நித்திலவல்லி’ பின்வருமாறு தொடங்குகின்றது:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 31: எனக்குப் பிடித்த திரைப்படப் பாடல்கள்!

– அண்மையில் முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ‘எனக்குப் பிடித்த திரைப்படப்பாடல்கள்’ பற்றீய கருத்துகளை ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதியில் ஒரு பதிவுக்காகப் பகிர்ந்து கொள்கின்றேன். ‘வாசிப்பும் யோசிப்பும்’ பகுதியில் வாசித்தவற்றையும், யோசித்தவற்றையும், வாசித்து யோசித்தவற்றையும் பகிர்ந்துகொள்கின்றேன். இத்திரைப்படப்பாடல்கள் கேட்டு யோசித்தவையென்பதால் யோசிப்பும் பகுதிக்குள் அடக்கலாம், அத்துடன் பாடல் வரிகளை வாசித்ததால் ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதிக்குள்ளும் அடக்கலாம். எனவே இப்பகுதிக்கும் இவை பொருத்தமானவையே. – வ.ந.கி- 

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி!

எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி'. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த 'பாசம்' திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி' பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்எனக்கு மிகவும் பிடித்த பழைய திரைப்படப் பாடல்களிலொன்று ‘ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’. எம்.எஸ்.வி/ டி.கே.ராமமூர்த்தி ஆகியோரின் இசையில் எஸ்.ஜானகியின் நெஞ்சையள்ளும் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் எம்ஜிஆர்/சரோஜாதேவி இணைந்து நடித்த ‘பாசம்’ திரைப்படத்தில் வருகிறது. டி.ராமண்ணாவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மேற்படி ‘ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’ பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் மருதகாசி. இந்தத் திரைப்படத்தில் எம்ஜிஆர் திருடனாக நடித்திருப்பார். அத்திருடனைக் காதலிக்கும் நாயகியாக வரும் சரோஜாதேவி மாட்டு வண்டியில் மேற்படி பாடலைப் பாடியபடி வருவார். திருடனைக் காதலிக்கும் நாயகி தன் காதலைப் கூறும் பாங்கு சுவையானது. ஒரு திருடனின் வாழ்வுடன் சம்பந்தப்பட்டிருக்கும் விடயங்களைக் கொண்டே கவிஞர் மருதகாசி இப்பாடலை இயற்றியிருப்பார். காட்டில் நாயகியைக் கண்ட திருடனான நாயகன் தன் இயல்பின்படி அவளிடன் உள்ளதைக் கொடு என்று வற்புறுத்தவே நாயகியோ கையில் எதுவும் இல்லாத காரணத்தால் தன் கண்ணில் உள்ளதைக் கொடுத்து விட்டேன் என்று பின்வருமாறு பாடுகின்றாள்:

Continue Reading →

நூல் அறிமுகம் (மீள் பிரசுரம்): சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

சுஜாதா நினைவுப் புனைவு 2009 அறிவியல் புனைகதைத் தொகுப்புஅறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார். பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன், தி.தா. நாராயணன், நளினி சாஸ்த்ரிகள், ஆர். எம்.  நௌஸாத், கே.பாலமுருகன், வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள். கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனை, நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து  அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா)  அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 30: ‘சோபி’யின் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!

வாசிப்பும், யோசிப்பும் - 30: 'சோபீஸ் உலகம் ( தத்துவத்தின் வரலாறு பற்றிய நாவல்); அபுனைவின் புனைவு!எனக்கொரு பழக்கமிருக்கிறது. எங்கே நூல்கள் விற்பனைக்குக் கழிவு விலையிலிருந்தாலும் விடுவதில்லை.  ஒரே நூலின் பல்வேறு பதிப்பகங்களின் வெளியீடுகளென்றாலும் வாங்கிவிடுவேன். குறிப்பாக இங்கு ‘டொராண்டோ’வில் கோடைக் காலமென்றால்  பலர் வீடுகளில் ‘கராஜ் சேல்ஸ்’ நடக்கும். அவ்விதமான விற்பனை நிகழ்வுகளில் நூல்களிருந்தால் சென்று பார்க்காமல் இருப்பதில்லை. அவ்விதமான கழிவு விற்பனை நிகழ்வுகளில் இருபத்தைந்து சதம், ஐம்பது சதத்துகெல்லாம் நூல்களை வாங்க முடியும். மிகவும் நல்ல தரமான நூல்களையெல்லாம் வாங்கும் சந்தர்ப்பங்களுண்டு. பல ஆங்கில செவ்விலக்கியப் படைப்புகள் பலவற்றை அவ்விதமான நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். அதுபோல் இங்குள்ள நூலகக் கிளைகளில் அவ்வப்போது நடைபெறும் நூல் விற்பனை நிகழ்வுகளில் நூல்கள் வாங்கத் தவறுவதில்லை. அவ்விதமான சில விற்பனை நிகழ்வுகளில் மூன்று டாலர்களுக்கு நூலகம் விற்கும் துணிப்பையினை வாங்கினால், அந்தப் பை கொள்ளூம் அளவுக்கு நூல்களை அள்ள விடுவார்கள். புனைவு, அபுனைவு என்று பல்துறைகளிலும் மிகவும் தரமான நூல்களை நான் நூல் நிலைய விற்பனை நிகழ்வுகளில் வாங்கியிருக்கின்றேன். காப்ரியல் கார்சியா மார்கெவ்ஸ், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஜேர்சி கொசின்ஸ்கி, ஜான் மார்டெல், சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, ஸ்டீன்பெக், கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் பிராய்ட், காலிட் ஹுசைன்..  என்று பலரது புகழ்பெற்ற படைப்புகளை வாங்கியிருக்கின்றேன். நூலகங்கள் விற்பனையில் மிகவும் நல்ல நிலையிலுள்ள நூல்கள் கிடைக்கும். நல்ல நூல்களென்றாலும், அந்தக் கிளையில் அந்நூல் அதிகம் வாசகர்களால் பாவிக்கப்படாமலிருந்தால் குறிப்பிட்ட காலத்தின்பின் விற்று விடுகின்றார்கள் போலும். ஏனெனில் நான் வாங்கிய பல நூல்கள் புதியவையாகவே காணப்பட்டன. ஒருமுறை ஸ்நேகா பதிப்பகத்தில் அக்காலகட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பர் பாலாஜி ஜேர்சி கொசின்ஸ்கியின் ‘நிறமூட்டிய பறவைகள்’ நாவலினைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவிருப்பதாகக் கூறியபோது என்னிடமிருந்த அந் நூலின் இரு பிரதிகளிலொன்றினை அனுப்பி வைத்தேன். அவ்விரு நூல்களையும் நூலகமொன்றின் புத்தக விற்பனையில்தான் வாங்கியிருந்தேன். அத்தமிழாக்கம் அண்மையில் வெளிவந்திருப்பதாக அறிந்தபோது மகிழ்ச்சியாகவிருந்தது.

Continue Reading →

ஆல விருட்சமொன்றின் ஆழ் விழுதுகள்!

பூரணி அம்மாள்- வெங்கட் சாமிநாதன் -தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர் தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஒரு இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப்படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான். அது ஒரு எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்றுதான் நினைவு. அது அப்போது உருவாகி வந்த ஒரு இலக்கியச் சிறு பத்திரிகைச் சூழலில், உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை. என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதி சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே. மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரண பொது அறிவின்பால், தர்மத்தின்பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு போலத் தான் இருந்தது. ராஜதர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து புடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றன தான், இன்னும் பரவலாகின்றனதான்.

Continue Reading →

சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)தமிழ்ச் சங்கத்தில் எழுந்த நூல்களில் இலக்கியம், அறிவியல், வாழ்வியல், இயற்கை வளம் போன்றவை பரவலாகப் பேசப்படும் பாங்கினைக் காணலாம். இந்நூல்கள் மக்கள் நலன் கருதியே எழுந்தனவாகும். மக்கள் இயற்கையுடன் இணைந்து, பிணைந்து வாழ்பவர்கள். அவர்கள் ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிரினங்கள்வரை அன்பு காட்டி அரவணைத்துத் தம் வாழ்வியலை நடாத்துபவர்கள். அதில் அசைவற்ற, ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, நடப்பன ஆகிய உயிரினங்கள் பற்றிய செய்திகளை நம் இலக்கியங்களில் காண்கின்றோம். இவற்றில் விலங்குகள் பற்றியும், பறவைகள் பற்றியும் சங்க இலக்கியங்களில் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்காகும்.

யானை, சிங்கம், புலி, குதிரை, ஆடு, மாடு, பசு, மான், கரb, முயல், பன்றி, நாய், பூனை, குரங்கு, எருமை, நரி, ஆமை, முதலை, உடும்பு, கழுதை, பாம்பு, எலி, பல்லி போன்ற விலங்கினங்களும், மயில், குயில், அன்னம், கோழி, சேவல், வாத்து, தாரா, கிளி, பருந்து, வல்லூறு, காகம், நீர்க்காகம், நாரை, கழுகு, ஆந்தை, வெளவால், கூகை, புறா, தும்பி, தேனீ, வண்டு போன்ற பறவையினங்களும் மக்களோடு தொடர்புபட்டனவாகும். இனி, விலங்கினங்களும், பறவையினங்களும் சங்க நூல்களிற் பவனி வரும் பாங்கினையும் காண்போம்.

Continue Reading →

பூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வை

பூங்காவனம் 14 ஆவது இதழ் மீதான ஒரு பார்வைபூங்காவனத்தின் 14 ஆவது இதழ் தற்பொழுது வாசகர் கைகளில் கிடைத்துள்ளது. காலாண்டுச் சஞ்சிகையாக வெளிவரும் பூங்காவனம், தனது ஒவ்வொரு இதழிலும் மூத்த பெண் எழுத்தாளர்களின் முன்னட்டைப் படத்ததைத் தாங்கி வெளிவருவதோடு அவர்களது இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய விபரங்களை நேர்காணல் மூலமாக பெற்று, சஞ்சிகையின் ஆசிரியர் ரிம்ஸா முஹம்மதும், இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னாவும் வாசகர்களுக்கு இலக்கிய விருந்து படைத்து வருகின்றனர். இம்முறை சிங்கள மொழியில் இலக்கியம் செய்து அதனைத் தமிழ் மொழிக்குப் பரிசளித்து வரும், அநேகம் பேர் அறிந்திராத மூத்த இலக்கியப் படைப்பாளி திருமதி. கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களது புகைப்படத்தை பூங்காவனத்தின் அட்டைப்படம் தாங்கி வெளிவந்திருக்கிறது.

சமாதானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தி உலகில் யுத்த நிலைப்பாடுகள் அகன்று சமாதானம் மலர வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர் தன் கருத்தாகத் தந்துள்ளார். பூங்காவனத்தின் உள்ளே திருமதி கிச்சிலான் அமதுர் ரஹீம் அவர்களுடனான நேர்காணலில் அவரது இலக்கியச் செயற்பாடுகளின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த இவர் மலாய் இனத்தவராவார். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான் என்பவர், ஒரு காரியாவார் (குர்ஆன் ஓதுபவர்). இவர் மார்க்க உபன்னியாசகராக இருந்து அச்சுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

Continue Reading →

ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை[ ரிஷான் ஷெரீப்பின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சுனேத்ரா ராஜகருணாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நூலுக்கு எழுத்தாளர் அம்பை எழுதிய முன்னுரை. இதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். – பதிவுகள்]

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள்,  ஏன்,  எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: குழந்தையுள்ளம் படைத்த அகஸ்தியரின் தர்மாவேசம்

எழுத்தாளர் முருகபூபதி‘அன்புள்ள   முருகபூபதிக்கு..… கடந்தவாரம்  லண்டனிலிருக்கும்  மகனிடம் வந்திருக்கிறோம்.   பேரக்குழந்தையின்   பிரசவம்   முடிந்தது.   ஆவன   செய்தபின் பிரான்ஸ்   திரும்புவோம்.   பெண்   குழந்தை   கிடைத்திருக்கிறது.  வந்த  இடத்தில் உடல்நலம்   பாதிக்காதவகையில்    இலக்கியக் கூட்டங்களுக்கும்   பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள்.    பின்   விபரம்  அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன்.  நன்றி.’ – இது  நண்பர் அகஸ்தியர் 22-08-1995   இல் எனக்கு எழுதிய கடிதம். அகஸ்தியர்   எனக்கு  எழுதிய  இறுதிக்கடிதம்  இதுதான்  என்பதை 09-12-1995  ஆம் திகதி   இரவு   நண்பர்   பாரிஸ்   ஈழநாடு   குகநாதன்   தொலைபேசியில்  அகஸ்தியரின்   மறைவுச்செய்தி   சொல்லும்   வரையில்  நான்   தீர்மானிக்கவில்லை.  அகஸ்தியர்  முதல்நாள்   பாரிஸ்  நகரத்தையே  ஸ்தம்பிக்கவைத்த  வேலைநிறுத்த   காலப்பகுதியில்   டிசம்பர்  8 ஆம் திகதி   மறைந்தார். அகஸ்தியரின்   புதல்வி   ஜெகனியுடன்   தொலைபேசியில்  தொடர்புகொண்டு   ஆறுதல்கூறி    நானும்   ஆறுதல்பெற்றேன். நீண்ட    காலமாக    நாம்   புலம்பெயர்ந்திருந்தாலும்    பேசிக்கொண்டது   கடிதங்கள் வாயிலாகத்தான்.    அதற்கும்    முற்றுப்புள்ளிவைத்துவிட்டு   விடைபெற்றார். ஈழத்து     இலக்கிய    உலகில்   மூத்த தலைமுறையைச்சேர்ந்தவராயினும் இளம்தலைமுறையினருடன்    ஒரு   குழந்தையைப்போன்று    வெள்ளைச்சிரிப்புடன் (சிரிப்பிலும்   பலவகையுண்டு)   மனந்திறந்து   பேசும்   இயல்புள்ளவர்.

Continue Reading →