சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-04-2011 உயிர்ப்பு நாடகப் பட்டறையின் 3வது கலை நிகழ்ச்சிக்குச் செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ரொறன்ரோ, 1785 பின்ச் அவன்யூவில் உள்ள யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. மாலை 4:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வைப் பற்றிய விவரங்களை சுல்பிகா அவர்கள் தொகுத்து வழங்கினார். சனிக்கிழமையும் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாகப் பார்வையாளர் சிலர் குறிப்பிட்டனர். ஈழத்திலே புகழ் பெற்ற கலைஞர்கள் பலர், பிறந்த நாட்டில் ஏற்பட்ட போர் சூழல் காரணமாகப் புலம் பெயர்ந்து கனடாவைப் புகுந்த நாடாக ஏற்றுக் கொண்டிருப்பதும், அவ்வப்போது தமது ஆத்ம திருப்திக்காகக் கலை நிகழ்ச்சிகளை மேடை ஏற்றிக் கொண்டிருப்பதும் பலரும் அறிந்ததே. அப்படியான ஆர்வமுள்ள கலைஞர்களில் சிலரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகப் பட்டறைகளில் ஒன்றுதான் ‘உயிர்ப்பு’ நாடகப் பட்டறை.
இடம்: Scarborough Civic Centre, Scarborough, Canada.; காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் பிற்பகல் 5.00மணி வரை.
“இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்” என்ற தலைப்பில் கருத்தாடல் களம் ஒன்றினைக் கூட்டி அதில் தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை சார்ந்து செயற்படக் கூடிய அனைத்துத் தரப்பாரும் பங்கெடுத்துக் கருத்துச் சொல்லும் வகையிலான நிகழ்வொன்றினை ரொறொன்ரோ தமிழ் சிந்தனை வட்டம் ஏற்பாடு செய்கின்றது.