பதிவுகள் வாசகர்களே! நண்பர்களே! உறவினர்களே! உங்கள் அனைவருக்கும் அவ்வப்போது உங்களது நண்பர்களிடமிருந்து அல்லது ஏன் உங்களிடமிருந்தே கூட பல்வேறு வகையான மின்னஞ்சல்கள் வரலாம். இத்தகைய மின்னஞ்சல்கள் பல்வேறு வகையான விளம்பரங்களைத் தாங்கி வருவதே வழக்கமாகுமென்பதையும் அறிந்திருப்பீர்கள். இத்தகைய மின்னஞ்சல்களைப் பற்றி இணையத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் புதியவர்களோ தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து இத்தகைய மின்னஞ்சல்கள் வரும்போது அதிர்ச்சியடைந்து விடுவார்கள். சில வேளைகளில் தேவையற்ற குழப்பங்களும், சஞ்சலங்களும் இவ்வகையான மின்னஞ்சல்களினால் ஏற்பட்டுவிடும் அபாயமும் உண்டு. இதனைத் தடுப்பதற்கு சரியான வழிமுறை இத்தகைய மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றனவென்பதை அறிந்து கொள்வதுதான். அவ்விதம் அறிந்த பின்னர் அவ்விபரங்களை உங்களுக்கு இணையச் சேவையினை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவித்து விடுங்கள். ஆயினும் ஒருபோதுமே இவ்விதமான மின்னஞ்சல்களைத் தவிர்த்துக்கொள்ள முடியாது. இவ்விதமான சந்தேகத்திற்கிடமாக வரும் மின்னஞ்சல்களை உடனேயே அழித்து விடுவதுதான் சரியான நிலைப்பாடு. சரி இப்பொழுது இவ்வகையான மின்னஞ்சல்கள் எங்கிருந்து வருகின்றவென்பதை எவ்விதம் அறிந்துகொள்வது என்பதைப் பார்ப்போம்.
‘நாளைய உலகம் உங்கள் கையில், நாளைய தலைவர்கள் நீங்கள்தான், எதிர்கால நட்சத்திரங்கள்’ இப்படியாக தேசிய அளவில் நீங்கள் பேசப்படுகிறீர்கள். எதிர்காலம் உங்களால் வளம் பெறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் உலக மாந்தர். குடும்ப அளவில் நோக்கினால் ‘நாளை குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உன்கையில், சகோதரங்களை கரை சேர்க்கும் பொறுப்பு, குடும்பக் கடன்களை தீர்க்க வேண்டிய தார்மீகக் கடமை’ எனப் பல உங்களைக் எதிர்பார்த்திருக்கின்றன. இவற்றில் பல உங்களுக்கு எதிர்காலத்தில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கப் போகின்றன. சில புகழின் உச்சங்களுக்கும் இட்டுச் செல்லப் போகின்றன. வேறு பல கடமைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்காவிட்டாலும் மகிழ்வைத் தராது போனாலும் கட்டாயம் செய்ய வேண்டியவை.