மீண்டும் ஸ்டீபன் ஹார்பர் பிரதமர்! முதல் முறையாகக் கனேடிய பாராளுமன்றத்திற்குத் தமிழர் தெரிவு.

இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப்…

Continue Reading →

கனடாவில் பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011

பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.பாரதி கலைக் கோயிலின் திறன் காணல் நிகழ்வு – 2011, ஏப்ரல் மாதம் 22ம், 24ம் திகதிகளில், 610 கோறனேஷன் டிறைவ்வில் உள்ள ஐடியல் கொமுனிற்றி சேவீஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திறன் காணல் நிகழ்வில் சுமார் 500 மேற்பட்ட மாணவர் கலந்து கொண்டனர். பல கனடிய மணவ செல்வங்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்ட, தங்கள் பல்வேறு வகைப்பட்ட திறமைகளில் ஒரு பகுதியை வெளிப்படுத்தும் ஒரு இனிய நிகழ்வாக இந்த நிகழ்வு ரொறன்ரோவில் அமைந்திருந்தது. இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் இளம் பாடகர்கள், நடன தாரகைகள், இசைக் கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். வித்தியாசமாக அமைந்திருந்த இந்த இலவச நிகழ்வை நேரடியாகப் பார்த்த உணர்வை மண்டபத்தில் கூடியிருந்த மாணவச் செல்வங்களின் பெற்றோர்களும், இசைப்பிரியர்களும் பெற்றுக் கொண்டனர்.

Continue Reading →

சுதந்திர வேட்கையுடன் நெடும் பயணம்: The way back ஆங்கில சினிமா

சுதந்திரத்திற்கான வேட்கை அடக்க முடியாதது. மற்றவனுக்கு தாழ் பணிவதும், அடங்கி வாழ்வதும், கொடும் சிறையில் அடைக்கப்பட்டு அல்லலுறுவதும் எந்தவொரு மனிதனுக்கும் உவப்பானதல்ல. அதுவும் செய்யாத குற்றத்திற்காக அடைபட்டுக் கிடப்பது கொடூரமானது மட்டுமல்ல அவலமானதும் கூட.  Janusz (Jim Sturgess)  சிறையில் அடைபடுகிறான். அவன் குற்றம் செய்யவில்லை என்பது சூசமாக எமக்கு உணர்த்தப்படுகிறது. அவனது மனைவியே அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்வதைப் பார்க்கிறோம். பயத்தில் உறைந்த முகமும், கலைந்து கிடக்கும் கேசமும், சிவந்த கண்களும், முட்டிக் கொண்டு வரும் கண்ணீரும், அது உதிர்வதைத் தடுக்க முயலுவதுமாக அவள்.

Continue Reading →

காலம் என்பது…

தேவகாந்தன்காலம் என்பதுதான் என்ன என்ற ஒரு கேள்வி, சிலகாலமாகவே என் நினைவுள் நுழைந்து விடை தேடி நின்றுகொண்டிருந்தது. அண்மையில் நிகழ்ந்த தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனுடனான ஒரு சந்திப்பில் கலந்துகொண்டதற்குப் பின்னர் அந்தக் கேள்வி இன்னும் வலுவடைந்துள்ளதாகவே தோன்றுகிறது. ‘காலமென்பது கறங்குபோல் திரிந்து கீழது மேலாய், மேலது கீழாய்ப் புரட்டும் ஒரு மகாசக்தி’யென இலக்கியங்களில் படித்ததுண்டு. இது வரலாற்றுக் கண்கொண்டு நோக்கப்பட்ட காலமெனச் சொல்லலாம். இன்னும், ஆரூடகாரனின் நாவில் குதிபோடும் ‘தம்பிக்கு காலம் இப்ப நல்லாயில்லை…’ அல்லது ‘காலம் நல்லாயிருக்கு’ என்ற வாசகங்களில் விதியென்ற மாயத்தின் பாய்ச்சலைக் காணமுடியும். காலத்துக்குத்தான் தமிழில் புதிராய், மாயமாய், விளக்கமாய், செறிவாயென எத்தனை அர்த்தங்கள்!

Continue Reading →