பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி காலமானார்!

மீள்பிரசுரம்: http://www.bbc.co.uk
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி என்றறியப்படும் இரா.தியாகராஜன் ஞாயிறன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கடந்த ஓராண்டு காலமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலும், அரசியல் கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதி வந்தார். நண்பர்களிடம் மணிக்கணக்கில் நாட்டு நிலை பற்றி விவாதிப்பார். திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். திமுக தலைமைக்கு நெருக்கமானவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலர் மகேந்திரன் போன்றோரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்டோர் மயிலை மயானத்திற்கு வந்திருந்தனர். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலர் பெருந்திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

Continue Reading →

பேச முடியாத காலத்தைப் பேச முயலும் நாவல் தெணியானின் ‘தவறிப்போனவன்’

தெணியானின் 'தவறிப் போனவன் கதை'‘தவறிப் போனவள்’ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முன்னால் ‘நடத்தை’ என்ற சொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டுவிட்டால் அதன் அர்த்தம் தெள்ளத் தெளிவாகப் புலப்படும். ஆனால் அவ்வாறான  ‘தவறிப்போனவன்’ பற்றித் தமிழில் எழுதுவார் யாருமில்லை. எமது இனிய தமிழின், தமிழ்க் கலாசாரத்தின் பாலியல் ரீதியான பாகுபாட்டு அம்சத்தின் அல்லது ஒடுக்குமுறை அம்சத்தின் கயமையான வெளிப்பாடுதான் பெண்பாலான, அந்த சொற்பிரயோகம் எனச் சொல்லலாம். ‘நடத்தை தவறிப்போனவன்’கள் இல்லாத ‘கோவலன்’ வழி வந்த புனித சமூகம் அல்லவா எம்மது?.  தமிழர்களாகிய நாம் இன ரீதியான பாகுபாடு பற்றிப் பேசுவோம். மொழி ரீதியான ஒடுக்குமுறை பற்றிப் பேசுவோம். பிரதேச ரீதியான பாகுபாடுகள் பற்றியும் வாய்கிழியப் பேசுவோம். பால்ரீதியான பாரபட்சம் பற்றி  மட்டுமே மேலோட்டமாக அவ்வப்போது பட்டும் படாமாலும் பேசுவோம். ஆனால் எழுத்து வடிவில் அதிகம் பயன்படுத்தாத மொழிப் பிரயோகத்தைப் தனது படைப்பின் தலைப்பாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் தெணியான். சகல ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் தெணியான் அவ்வாறு செய்வது அதிசயமல்ல. ஆனால் அவர் பேசுவதும் ஒழுக்க ரீதியாகத் தவறிப் போனவன் கதையை அல்ல என்பதும் உண்மையே.

Continue Reading →

எழுத்தாளர் அகஸ்தியருக்குப் பாரீசில் விழா

எழுத்தாளர் அகஸ்தியர்கவிஞரும் எழுத்தாளருமான திரு.வண்ணை தெய்வத்தின் ஏற்பாட்டில் எஸ். அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் அறிமுகம் பாரீசில் கவிஞை லினோதினி சண்முகநாதன், திருமதி. நவமணி அகஸ்தியர் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது. தனது இறுதிக்காலம் வரை மார்க்சிய சித்தாந்தங்களோடு தன் இலக்கியங்களை முன்னெடுத்துச் சென்ற முற்போக்கு எழுத்தாளரான எஸ்.அகஸ்தியரின் ‘போராடுங்கள்’என்ற வீரகேசரி வார இதழில் 2011 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி வெளிவந்த சிறுகதையுருவத்தினைச் சுட்டிக் காட்டிய மூத்த பத்திரிகையாளர் திரு. காசிலிங்கம் எந்தக் காலகட்டத்திலும் அகஸ்தியர் தன் எழுத்துக்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்; என்பதனைக் குறிப்பிட்டார். பதினைந்து வருடங்களுக்கு முன்னர்; அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்த காலங்களில் அவரின் நூல் வெளியீடுகளுக்குத் தலைமை தாங்கியதை நினைவு கூர்ந்த திரு.காசிலிங்கம் இன்று அவரது ‘லெனின் பாதச் சுவடுகளில்…’என்ற இந்த நூலுக்குத் தலைமை தாங்குவதைப் பெருமையாகக் கருதுவதாகத் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.    

Continue Reading →