நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programmeநிலாச்சோறு விசேட நிகழ்ச்சி a global tamil news network programme
20.5.2011 வெள்ளி மாலை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 வரை; இந்திய நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை

சமகால ஈழ நாடகம் : கலந்துரையாடல்; உரையாடுவோர்: இங்கிலாந்திலிருந்து க. பாலேந்திரா கலந்து கொள்கிறார். பாலேந்திரா இலண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் நெறியாளர். கடந்த பல தசாப்தங்களாகச் சளையாது இலங்கையிலும் புகலிடத்திலும் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வருபவர். புகலிட தமிழ் குழந்தைகளுக்கான நாடகப்பள்ளி இவரது முக்கியமான பங்களிப்பு.

Continue Reading →

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா, கவிஞர் வைரமுத்து, டைரக்டர் வெற்றி மாறனும் விருது பெற்றனர். ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனுக்குச் சிறப்பு விருது

ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷ் மற்றும் கவிஞர் ஜெயபாலன்தேசிய விருதுகளைப் பெறும் தனுஷ், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் வைரமுத்து[புதுடெல்லி, மே.20, 2011] டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார். அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார். 58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.  ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார். இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

Continue Reading →

பிரமிளின் புனைவுலகு

பிரமிள்[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, ‘குவாண்டம்’ இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார்.  இதனைத்தான்  ‘விஞ்ஞானம் – ஞானம் – விபூதிப்பட்டை’, ‘விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்’ போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில ‘பதிவுகளி’ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்]

Continue Reading →