பதிவுகளில் அன்று: ‘சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! பாலத்தினையும் அமைப்போம்! அதே சமயம் கால்வாயினையும் தோண்டுவோம்!’

பதிவுகளில் அன்று: 'சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!  பாலத்தினையும் அமைப்போம்! அதே சமயம் கால்வாயினையும் தோண்டுவோம்!'

[சேது சமுத்திரத் திட்டமென்றதும் நினைவுக்கு வருவது உருவாகிக் கொண்டிருக்கும் சேதுக்கால்வாய்த் திட்டம்தான். உண்மையில் மாகவி பாரதியின் கனவு இத்தகைய கால்வாய் பற்றியதாகவிருக்கவில்லை. அவர் இரு நாடுகளையும் இணைக்கும் வகையிலான, சேதுவை மேடுறுத்தி அமைக்கும்,  பாலம் பற்றியதாகவேயிருந்தது. அதனால்தான் அவர் ‘சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!’ என்று பாடினார். இது பற்றி பதிவுகள் இணைய இதழ் 39, மார்ச் 2003லொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. கனடாவில் வசிக்கும் கடற்துறைப் பொறியியலாளர் விஸ்வலிங்கம் வரதீஸ்வரனுடனான நேர்காணலே. அதிலவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை. பாரதியின் கனவை நனவாக்கும் அதே சமயம் கால்வாயையும் அமைப்பது பற்றியது. ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடிப்பது பற்றியது. பதிவுகளைப் பொறுத்தவரையிலும் சேதுக்கால்வாயை அமைக்கும் அதே சமயம் இரு நாடுகளையும் இணைக்கும்வகையில் பாலத்தினையும் அமைக்க வேண்டுமென்பதே இரு நாட்டு மக்களனைவருக்கும் நல்லதாகப் படுகிறது.. இவ்விதமாக அமைக்கப்படும் பாலமானது இரு நாடுகளையும் தரைவழியில் இணைப்பதுடன், இரு நாட்டு மக்களுக்குமிடையில் கூடுதலான பிணைப்பினையும், இணைப்பினையும் அதிகரிக்கவல்லதாகவிருக்கும். அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும். மேலும் பாரதியின் கனவு நனவாகவேண்டுமென்றால் இதுவொன்றே சரியான வழியாகவிருக்க முடியும். மேற்படி ‘பதிவுகள்’ இதழ் 39இல் வெளிவந்த நேர்காணல் ‘பதிவுகளில் அன்று’ பகுதிக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது. – ஆசிரியர்]

Continue Reading →

துவாரகன் கவிதைகள்

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

துவாரகன்நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.

அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி 

 

Continue Reading →

Youthful confidence wins the day in engaged riding of Scarborough-Rouge River

http://www.thestar.com/news/article/985151–youthful-confidence-wins-the-day-in-engaged-riding-of-scarborough-rouge-river

Rathika SitsabaiesanNew Democrat Rathika Sitsabaiesan admits she is still “feeling a little numb” about her historic victory in Scarborough-Rouge River on Monday night. As the first Tamil elected to Parliament, she says she is also humbled. The 29-year-old first-time candidate came to Canada with her family when she was 5. “My parents are very, very proud,” she said Tuesday morning after a night of celebration with throngs of supporters at her Sheppard Ave. campaign office and later with New Democrats from across the city at NDP Leader Jack Layton’s victory party downtown. Despite “still trying to absorb it all,” the advocate for workers, students and newcomers says she wasn’t surprised by her win. The ethnically diverse riding in the city’s northeast end has a large youth population and one of the GTA’s largest concentrations of Tamils. “But it was the entire community of Scarborough-Rouge River that came together for this,” said Sitsabaiesan, who moved to the riding several years ago after completing a master’s degree in industrial relations at Queen’s University.

Continue Reading →

கவிஞர் அஸ்மின் மலேசியா பயணம்

கவிஞர் பொத்துவில் அஸ்மின்கவிஞரும்,பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும் மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார். இலங்கையில்  மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் – ‘பொறுமை’என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை  இலங்கை ஏற்பாட்டுக்குழுவின்  தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வசந்தம்TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர்  ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி ‘ஜனாதிபதிபதி விருது’, பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் ‘தங்கப்பதக்கம்’, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார். 

Continue Reading →

கவிதை: விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;
இலவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

Continue Reading →

உயர்தர விஷம்

கவிதை: உயர்தர விஷம் – – திரிவேணி சுப்ரமணியம் –

காற்றின் வேகத்திற்கும் 
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை 
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.

Continue Reading →

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

என்ன தேசமோ

ப. மதியழகன்உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள் 
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்

Continue Reading →