மீண்டும் வருகிறது ‘கணையாழி’

சிற்றிதழ்களில் முதன்மையானதும், இலக்கிய உலகின் லட்சினையுமான  ‘கணையாழி‘ மீண்டும் வெளிவருகிறது. சில வருடங்களுக்கு முன் சில பல காரணங்களால் வெளிவராமல் இருந்த ‘கணையாழி’ இதழ்; வரும் ஏப்ரல் 13ம் தேதி முதல் மீண்டும் வெளிவரயிருக்கிறது. தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் எம்.ராஜேந்திரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பபாசியின் தலைவர் சொக்கலிங்கம் அவர்களை (கவிதா பதிப்பகம்) பதிப்பாளராகக் கொண்டு கணையாழி இதழ் வெளிவருகிறது. இது கணையாழியின் நீண்ட நெடிய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.  சிற்றிதழ்களின் வாழ்வுக்காலம் குறுகியது எனும் நியதியைத் தகர்த்துப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெகுசில இதழ்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இதழ்களில் முக்கியமானது: ‘கணையாழி’ மாத இதழ். செய்திகளையும், சுவையான பகுதிகளையும் தாங்கிய இதழாகப் தினமணியின் முன்னாள் ஆசிரியார் மற்றும் பத்திரிக்கையாளர் கி. கஸ்தூரிரங்கனால் டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது.

Continue Reading →