தினமலர் இணையத்தளத்திலிருந்து …
சென்னை: தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். இதுவரை முன்னணி நிலவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும்.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.