மீள்பிரசுரம்: காலச்சுவடு.காம்
நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவருடைய கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியைத் தண்ணீரில் மிதக்கவிட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணிவரை அங்கே கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து முடிந்ததன் பின்னரே அங்கிருந்தும் சென்றிருந்தார்கள். பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு அறியக் கிடைத்திராத, ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமொன்று அவர்களுக்குக் காணக் கிடைத்தது அப்போதுதான். சுடலையில் அஸ்திக்குப் பதிலாகக் காணக் கிடைத்தது, அந்தத் தாயின் அஸ்தி அழிந்துசெல்லும்வண்ணம் அக்கல்லறையின் மீது போடப்பட்டிருந்த, சுட்டுக்கொல்லப்பட்ட நாய்கள் மூன்றினது சடலங்களே. அத்தோடு அந்த அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும்வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.
அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
அடுத்த மூன்று வாரங்களும் இளங்கோவுக்கும், அருள்ராசாவுக்கும் ஹரிபாபுவுடன் கழிந்தது. ஹரிபாபு கூறியபடியே அவர்களுக்குமொரு நடைபாதைக் கடையினை கிறிஸ்தோபர் வீதியும், நான்காம் வீதி மேற்கும் சந்திக்குமிடத்தில் போட்டுக் கொடுத்துவிட்டான். ஹரிபாபு, அவன் மனைவி மற்றும் ஹென்றி எல்லோரும் தமது பழைய இடங்களிலேயே தங்கள் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஹரிபாபுவுக்கு நண்பர்களிருவரும் வேடிக்கையாக வைத்த பெயர் ‘நடுத்தெரு நாராயணன்’. நடுத்தெரு நாராயணன் கடையிலிருந்து நடைபாதைக்கு வந்தவன். அவனது கடையிலேயே அவனது விற்பனைப் பொருட்கள் யாவுமிருந்தன. நடுத்தெரு நாராயணன் நடைபாதை வியாபாரத்தின் பல்வேறு விதமான நெளிவு சுளிவுகளையும் கற்றுத்தேர்ந்த கில்லாடி. இந்த விடயத்தில் சில சமயங்களில் நியூயார்க் காவற்துறைக்குக் கண்களில் விரல்களை விட்டு ஆட்டிடும் வல்லமை பெற்றிருந்த அவனிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் பல இருந்தன. அவ்விதம்தான் இளங்கோ அவனைப்பற்றி எண்ணிக் கொண்டான்.
சில சமயங்களில் வார இறுதி நாட்களில் நியூயார்க் நகரின் சில வீதிகளை மூடி விட்டு அங்கு நடைபாதை வியாபாரிகளைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதி வழங்குவார்கள். அத்தகைய சமயங்களில் அவ்விதம் மூடப்பட்ட வீதிகளில் வைத்து விற்பதற்கு அதிக அளவில் கட்டணத்தைச் மாநகரசபைக்குச் செலுத்த வேண்டும். இத்தகைய சமயங்களில் நடுத்தெரு நாராயணனான ஹரிபாபு வின் செயற்திட்டம் பின்வருமாறிருக்கும்: