என்னைக் கவர்ந்த நாடகக் கலைஞன் லடிஸ் வீரமணி

மீள்பிரசுரம்!

லடீஸ் வீரமணிகொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :’சலோமியின் சபதம்’ பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ ‘நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி’ என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், ‘நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்’ என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.

Continue Reading →

லண்டனில் தமிழ் நாடக விழா – 2011

நவஜோதி யோகரட்ணம்தொலைக்காட்சிகள் பெருகியதன் காரணத்தினால் நாடகங்களும்,  நாடக அரங்குகளும் குறைந்து வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பது கலை ரசிகர்களினால் வழக்கமாகிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின்’ நாடக விழா – 2011 இலண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மொழிபெயர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் கூடுதலாகக்கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டபோதும், இம்முறை நாடக விழாவில் ‘தர்மம்’ (மனோ மனுவேற்பிள்ளை), ‘அயலார் தீர்ப்பு’(பேராசிரியர் சி. சிவசேகரம்),  ‘படிக்க ஒரு பாடம்’(மாவை. தி. நித்தியானந்தன்,  ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை’(செழியன்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துருவாக்கத்தில் அமைந்த நாடகங்களை மேடையேற்றியிருந்தமை சிறப்பு அம்சமாகும்.      

Continue Reading →