மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (7)

- வெங்கட் சாமிநாதன் -மிக நல்ல படங்களாக, தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்ரந்த் படங்களாக்க் கொடுக்கப்பட்டுள்ள பட்டிய்லில் பல படங்களை நான் பார்த்ததில்லை. பழ்சிலிருந்து சிலவும், புதியனவற்றில் பலவும் நான் பார்த்ததில்லை.  அந்த நாள் படம் பார்த்திருக்கிறேன். அது ஒரு புதுமையான சோதனை முயற்சி என்றே எடுக்கப்பட்ட படம். அது சம்பிரதாயமான பாட்டு நடனம் போன்ற மசாலாக்களையும், நீண்ட கனல் கக்கும், அல்லது கத்திப் புலம்பி கண்ணீர் மல்கும் வசன்ங்களையும் தவிர்த்த ஒரு படம். கதை ஒரு துப்பறியும் கதை என்று ஞாபகம். அது சோதனை என்று பேசப்பட வாய்ப் பளிக்கும், இயக்குனருக்கு ஒரு வரி பெருமையாகப் பேச வாய்ப்பளித்த படம் என்பதற்கு மேல் அது தமிழ் சினிமாவில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் சமூகம் சாதிகக விடவில்லை. மசாலாக்கள் தான் வீர் தீர வசன்ங்கள் தான் வேணும் என்று சந்தைத் தீர்ப்பைத் தந்தது. அது ஒரு நீர்க்குமிழியாக தோன்றி அடுத்த க்ஷணம் மறைந்துவிட்டது. ஒரு சின்ன ஓடையாகக் கூட அது தன்னை ஸ்தாபித்துக்கொள்ளவில்லை.

Continue Reading →

நிகழ்வுகள் மூன்று ( இலங்கை )

1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா

யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.  மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது. இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்

Continue Reading →