ஈழத்து இசைவாணர் கண்ணன் அவரது புதல்வர் சாயிதாசனுடன் வழங்கும் இசையுடன் கூடிய கலந்துரையாடல்

– நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி 17.06.2011 வெள்ளிக் கிழமை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 மணி வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணி வரை –

 ஈழத்து இசைவாணர் கண்ணன் அவரது புதல்வர் சாயிதாசனுடன் வழங்கும் இசையுடன் கூடிய கலந்துரையாடல்இசையமைப்பாளர் கண்ணன் என்று கூறினால் 70 களில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கண்ணன் நேசம் இசைக்குழுவாகும். கண்ணன் நேசம் இசைக்குழு ஈழத்து சினிமாவுக்கும் மெல்லிசைக்கும் பொப்பிசைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆரம்ப காலத்தில் கண்ணன் நேசம் இசையமைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது ரோஜா மலரே என்னும் பாடலை அனைவரும் நினைவு கூருவர். மேலும் அருவி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குளிரும் நிலவு இசைத்தட்டில் உள்ள பாலை வெளி என்ற என்.சண்முகலிங்கம் எழுதிய  பாடலையும்; கண்ணன் நேசம் இசையமைத்தமை இங்கு நினைவு கூரலாம். இவ்வாறு கண்ணன் நேசம் குழுவினூடாக அறிமுகமான கண்ணண் அவர்களின் ஆளுமை பின்னாளில் பல பரிமாணங்களைக் கொண்டதாக பரிணமிக்கிறது.

Continue Reading →

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா

சிற்பி பாலசுப்பிரமணியன் (நன்றி: முதல்வா வலைப்பதிவு)கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர்.  அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது.  அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர்  பற்றிய அரிய செய்திகள்/ புகைப்படங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம். தங்களது படைப்புகள், நன்கொடைகள் வருகிற 30.06.2011  தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டிகிறோம்.

Continue Reading →