சிறுகதை: நண்பன்

எழுத்தாளர் க. அருள்சுப்பிரமணியம்‘பதிவுகள்’ இணைய இதழில் அன்று பல்வேறு எழுத்துருக்களில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது தமிழ் ஒருங்குறியில் மீள்பிரசுரமாகும்.. அந்த வகையில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியத்தின் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியான ‘நண்பன்’ சிறுகதை  தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் வெளியிடப்படுகின்றது.  இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த திருகோணமலையில் பிறந்த இவரது ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது’ என்ற நாவல் 1974ஆம் ஆண்டிற்கான ‘சாகித்திய அகாடமி’யின் விருதினைப் பெற்றதுடன் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இலங்கைத் தமிழ் நாவலென்ற பெருமையினையும் பெறுகின்றது. ‘சூரசம்ஹாரம்’ என்ற இவரது நாவல் ஆனந்தவிகடனில் வார இதழில் 23 வாரங்கள் தொடராக பிரசுரிக்கப்பட்டது. இவரது சிறுகதையான ‘அம்மாச்சி’ ‘ இந்தியா டுடே’ வெளியிட்ட இலக்கிய மலரொன்றில் வெளியாகியுள்ளது. அத்துடன் ‘வீரகேசரி’, ‘தினக்குரல்’ போன்ற ஈழத்துப் பத்திரிகைகளின் வாராந்த வெளியீடுகளில் மற்றும் ‘திண்ணை’, ‘பதிவுகள்’ போன்ற பல இணைய இதழ்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குக் கிழக்கிலங்கை பல்வேறு துறைகளில் பிரமிள், திமிலைத் துமிலன், நிலாவாணன், நா.பாலேஸ்வரி,  கலாநிதி சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி மெளனகுரு,  கலாநிதி சி. சிவசேகரம்,   புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, கே.எஸ்.சிவகுமாரன்,  மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, கலாநிதி எம்.ஏ.நுஃமான், வ.அ.இராசரத்தினம், தமிழ்நதி, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கலாநிதி இ.பாலசுந்தரம்  எனப் பல படைப்பாளிகளைத் தந்து வளம் சேர்த்துள்ளது. அவர்களில் எழுத்தாளர் க.அருள்சுப்பிரமணியமும் ஒருவர். அத்துடன் இலங்கையின் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களையும் கிழக்கிலங்கை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளது. .  – பதிவுகள் –

Continue Reading →