தேன்நிலவில் சீதைக்கு எழுந்த ஐயுறவு

நுணாவிலூர் கா.விசயரத்தினம்- (இலண்டன்)விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.

Continue Reading →

கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு

முனைவர் மணிகண்டன்விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார். 10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,) தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது. 

Continue Reading →