மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (8)

வெங்கட் சாமிநாதன்இது காறும் நான் முழுவதுமாகப் பார்த்த படங்களைப் பற்றியே பேசி வந்திருக்கிறேன். சில பழைய படங்கள், நினைவிலிருப்பவை. அனேகமாக புதியவை மிகக் குறைவாகவே பார்த்திருக்கிறேன். தியேட்டருக்குப் போய்ப் படம் பார்ப்பது என்ற பழக்கம் விட்டு நாற்பது வருடங்களுக்கு மேலாயிருக்கும். ஃபில்ம் சொஸைடி திரையிடும் படங்களையோ அல்லது உலகத் திரைப்பட விழாக்களிலோ கிடைப்பது அவ்வளவையும் ஒரு வெறி  பிடித்துப் பார்ப்பதில் தான் பின் வந்த வருடங்கள் கழிந்தன. ஒரு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதிலி ருந்து தமிழ்ப் படங்கள் அவ்வப்போது என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்திற்காக தொலைக் காட்சியில் வருவனவற்றை மாதிரிக்கு அவ்வப்போது பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த அனுபவத்தில் தான் எண்பதுக்களுக்குப் பிறகு வெகுவாகப் பேசப்பட்ட நக்ஷத்திரங்கள், சூப்பர் ஸ்டார்கள், வெற்றிப் படங்கள், கலைத்தரம் மிக்கவை என்று சொல்லப்பட்டவை எல்லாம் பார்த்தது. வெகு சமீபத்தில் வந்த, புதிய பாதையில் செல்வனவாகச் சொல்லப்படும் படங்கள் பெரும்பாலானவற்றை நான் அவ்வப்போது தொலைக்காட்சியில் உதிரியாகக் காட்டப்படும் காட்சிகளைப் பார்த்த்தோடு சரி. ஒரு சிலவற்றை முழுதுமாகப்    பார்த்திருக்கிறேன். அவை சந்தர்ப்பத்தைப் பொறுத்து என்று சொல்ல வேண்டும். ஆதலால் முழுதுமாகப் பார்த்த சிலவற்றை வைத்தும், மற்றவற்றை படத் துணுக்குகளாகப் பார்த்ததையும் வைத்துத் தான் நான் பேசுகிறேன்.

Continue Reading →