தொடர் நாவல்: மனக்கண் (3)

3-ம் அத்தியாயம்: களிப்பும் கலக்கமும்

பத்மா ஒரு கண்ணாடி ‘ட்ரே’யில் ‘ஒரேஞ்பார்லி’ கொண்டு வந்து கொடுத்தான். ஸ்ரீதருக்குச் சாதாரணமாக ‘ஐஸ்’ போடப்பட்ட அல்லது அறிஞர் அ.ந.கந்தசாமி[ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]   

ஸ்ரீதரின் திட்டப்படி அன்று மாலை தான் அவன் பத்மா வீட்டுக்குப் போக வேண்டும். அநேகமாக நாலரை மணிக்குப் பிறகு போனால் போதுமானது என்று அவன் முடிவு செய்திருந்தான். எனினும், காலையிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பித்துவிட்டான். அவன் இது சம்பந்தமாகச் செய்த முதல் வேலை, கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட்டில் 48/17ம் இலக்க வீடு எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிந்ததாகும். உண்மையில் ஸ்ரீதருக்கு அன்று இருப்பே கொள்ளவில்லை. பத்மா வீட்டுக்கு முதன் முதலாகப் போகப் போகிறோம். அவளுக்கும் தனக்குமுள்ள தொடர்புகள் இதன் மூலம் மேலும் வலுவடையும் என்ற எண்ணம், அவனுக்குப் பத்மா வீட்டுக்குச் செல்வதில் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணியது.

Continue Reading →

தினமலர்.காம்: அமெரிக்கா வர ஜெ.,க்கு ஹிலாரி அழைப்பு; இலங்கை பிரச்னையில் நடவடிக்கை: ஜெ., கோரிக்கை

தமிழக முதலவர் செல்வி. ஜெயலலிதாஅமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்சென்னை ஜூலை 21, 2011 : அமெரிக்கா வர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பிரச்னையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ‌ஹிலாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது ஹிலாரி கிளிண்டன், அப்போது அவர் ஜெ., அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெயலலிதா அமெரிக்கா வருவதன் மூலம் தமிழகத்தின் சாதனைகளை அமெரிக்கர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். ஹிலாரியிடம் ஜெயலலிதா, இலங்கையில் தமிழர்கள் இன்னும் முகாம்களில் வசித்து வருவதாகவும், இன்னும்அவர்கள் சொந்தமான இடங்களுக்கு திரும்பவில்லை எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Continue Reading →

சிறுகதை: தூரம்

எழுத்தாளர் நாகூர் ரூமி[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த சிறுகதைகள் சில ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியான படைப்புகள் இவ்விதம் மீள்பிரசுரம் செய்யப்படும். – பதிவுகள்]  மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான். முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது. அடி வயிற்றில் திடீரென்று ஒரு இடி.  ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.

Continue Reading →