நண்பர்களுக்கு வணக்கம்! ”தனி” மௌனத்தில் உறைந்துகிடக்கும் தனிமையான தீராத பொழுதுகளை பெரிதுபடுத்தாமல் புறக்கணிப்புக்கு இலக்காகும் பரப்பில் தனியாக (SOLIDARITY) குரல் எழுப்பக்கூடிய வடிவமாக உருவெடுக்க “நாம்” நண்பர்கள் குழுவினரின் புதிய முயற்சியாக தொடர்கிறது. “தனி” இதழ் ஆகஸ்ட் மத்தியில் நண்பர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக அறிமுகப்படுத்த நினைத்திருக்கிறோம். திட்டமிடப்படாத நாள் ஒன்றில் உங்களுக்கு அழைப்பு வரும் கலந்துகொள்ளுங்கள். ”தனி” – அடுத்த இதழுக்கான படைப்புகள் தொகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ற்குள் உங்களின் படைப்புக்களை எனக்கு அனுப்பிவையுங்கள்.
[‘பதிவுகள்’ இணையத் தளத்தில் உங்களது நூல்கள் பற்றிய விபரங்களை வெளியிட விரும்பினால், பிரதியொன்றினை எமக்கு அனுப்பி வையுங்கள். அனுப்ப விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com – பதிவுகள் -] இலண்டனில் வசிக்கும் எழுத்தாளர் கா. விசயரத்தினத்தின் ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ ( Ancient Tamils Social Imbalances’) நூல் கிடைக்கப் பெற்றோம். ஆசிரியரின் 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தமிழர் இலக்கியம், சமயம், அரசியல், கட்டடக்கலை, எனப் பல்வேறு விடயங்களை உள்ளடக்கித் தொகுப்பின் ஆக்கங்கள் அமைந்திருக்கின்றன. மனுநீதி போன்ற நூல்கள் போதிக்கும் தீண்டாமை, உடன் கட்டை ஏறுதல் போன்ற பெண்களுக்கெதிராக நிலவிய அடக்குமுறைகளைப் பற்றியெல்லாம் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஆசிரியரின் மேற்படி நூலினை வாங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் வருமாறு: