தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள். வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த், ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம் நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று.நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று. ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்: பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு குறித்த இரங்கல் கூட்டம் …
‘நிழல்’ சினிமா இதழ் தனது உத்தியோகபூர்வமான இணைய இதழினை வெளியிட்டுள்ளது. இணையத் தள முகவரி: http://www.nizhal.in அனைவரையும் இணையத் தளத்திற்கு வருகை தருமாறு அழைக்கின்றோம். உங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியத் தாருங்கள்.
மு.பொ அவர்கள் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நவீனம், விமர்சனம், எனப் பல துறைகளிலும் தனது திறமைகளைக் காட்டியவர். இதழ் ஆசிரியரும் கூட. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசைகள் என்ற சிறந்த வார இதழின் ஆசிரியராகக் கடமையாற்றியவர். இவற்றைவிட சிறப்பாக இவரது சிந்தனை ஆற்றலைக் கூறலாம். மற்றவர்கள் சொல்வதை வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பவர் இவரல்ல. இரவல் வாங்காத சுயசிந்தனைதான் அவரது பெரு முதல். நான் அவரது ரசிகன். அவரது பல கவிதைகளை மிகவும் ரசித்தவன். ஆதேபோல அவரது சிறுகதைகளும், நாவலும் கூட எனக்குப் பிடித்தமானதே. எனவே இந்த கட்டுரையானது அவரது விமர்சன நூல் பற்றிய விமர்சனமாக இருக்கும் என நான் நம்பவில்லை. பெரும்பாலும் நான் ரசித்தவையாகவே இருக்கும்.
விமர்சனம் என்றால் என்ன?
இந்த நூலைப் படித்தபோது விமர்சனம் பற்றிய பல்வேறு சிந்தனைகள் என்னளவில் முகிழ்வு கொண்டன. அவை பற்றி சில கூறிவிட்டு முழமையாக நூலுக்குள் நுழையலாம் என எண்ணுகிறேன். இலக்கிய விமர்சனம் என்றால் என்ன? இலக்கிய விமர்சனம் என்பது ஒரு படைப்பைப் படித்தல், ஆய்வு செய்தல், அதன் இலக்கியத்தன்மையை மதிப்பீடு செய்தல், படைப்புப் பற்றிய இலக்கிய விளக்கம், அப் படைப்பின் நோக்கம், அது வாசகனிடத்தும் பரந்தளவில் சமூக நிலையிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை ஆராய்தல் என பல நிலைகளைக் கொண்டது எனலாம்.
சில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.
(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ” இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.
அன்பின் நண்பருக்கு, எனது கட்டுரையை பதிவுகளில் போட்டதற்கு மிக நன்றிகள். தமிழ்த் தலைவர்கள் தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கிவிட்டார்கள். இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியது. கூச்சலாலோ ஆர்பாட்டத்தலோ சாதிக்கமுடியாது. என்னை நான் ஒரு இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாக பார்க்கவில்லை. தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன். மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில், இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பேட்டியளித்திருப்பதாகவும், அதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில், இலங்கையில், சிங்கள மக்களுக்கு இணையாக தமிழ் மக்களுக்கும் சம உரிமை கிடைக்கும் வரை தனது அரசு ஓயாது என்றும் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை அரசியல் உள்நோக்கம் என்று கூறிய இலங்கை பாதுகாப்பு செயலரை ந்தியா கண்டிக்க வேண்டும் என்கிறார் தமிழக முதல்வர்.
தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் “நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள். கடந்த வைகாசி மாதம் நான் இலங்கை சென்று திரும்பிய பின்னர் பெண்கள் அதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இளம் பெண்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதனைப்படித்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு தமது கவலையைத் தெரிவித்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் நாம் கவலை அடைவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தின் மூலவேர் பெண்கள்தான். பலருக்கு இதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.