முற்குறிப்பு : இக்கட்டுரையில் உள்ளடங்கியிருக்கும் தகவல்கள் ஒருசாராருக்கு தமது வாழ்நாளில் கேள்விப்பட்டிராத, ஒரு சுத்தப் பைத்தியக்காரத்தனமான, நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விடயமாக தோற்றமளிக்கலாம். ஆனால் இது சம்பந்தமான ஆர்வமுள்ள மறுசாராருக்கு ஒரு புதுச்சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடுவதாக இருக்குமென்பதுடன் இக்கட்டுரை ஒரு விருந்தாகக்கூட அமையலாம். அவையெல்லாம் அவரவர்கள் கொண்ட அறிவையும் அதில் ஊற்றெடுக்கும் சிந்தனைகளின் பரிமாணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு நான் வேற்றுகிரக உயிரினங்கள் உண்டு என்று அவற்றின் இருப்பை நிறுவ வரவில்லை. இக்கட்டுரை அத்தளத்தினை தாண்டி அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பைப்பற்றி ஆதாரங்களுடன் விபரிக்க முற்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் எமது சிற்றறிவுகொண்டு இப்பரந்த முடிவற்ற பிரபஞ்சத்திலே வேற்றுக்கிரக உயிரினங்களின் இருப்பை மறுப்பது இப்பூமியிலே மனிதனது இருப்பை மறுப்பதற்கு ஒப்பானது.
[‘பதிவுகள்’ மற்றும் நந்தா பதிப்பகத்தாரின் (கனடா) ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் 2004இல் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியின் நடுவர்களாக பிரபல எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் ஆகியோர் இருநது பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அது பற்றிய விபரங்களையும், பரிசுக் கதைகளையும் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]
[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.