சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர். மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன. அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.
Continue Reading →
-‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-
Continue Reading →
இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?
Continue Reading →
திரைப்படம்: அமெரிக்க பூதமும், கம்யூனிச பிணமும்! – சுப்ரபாரதிமணியன் –
[எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ‘பதிவுக’ளில் அவ்வப்போது எழுதிய சினிமா பற்றிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்] போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன் ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு கம்யூனுக்கு மாற்றுகிறார்கள். கம்யூன் தலைவன் கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது. கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். ” யார் இந்த வயதானவன் ” பையன் அதிர்ந்து போய் சொல்கிறான். ” லெனின்” லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது. கம்யூனிசத்தில் அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை “குட்பை லெனின் ” என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம். ” லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட துர்பாக்கியம். அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் ” என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின் ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்திற்கு முன்னுரையாக இருந்திருக்கிறது.
Continue Reading →
முல்லைப்பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கும் அணை தமிழகத்திற்கும் உரியது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையை பராமரித்து வருகிறது. 1895 ஆம் ஆண்டு இது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி மற்றும் உயரம் 155 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடி பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது. இதன் கீழ்பாசனத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட ஆணை ஆகும். மெட்ராஸ் மாகாணத்திற்கும் தண்ணீரை திருப்பி விவசயப்பணிகளுக்கு பயன்படுத்திகொள்ளும் பொருட்டு ‘பெரியார் திட்டத்தின்’ கீழ் அப்போதை மெட்ராஸ் மகாநாதிற்கும் திருவிதாங்கூர் மகாராஜவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. 1886 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
Continue Reading →