கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – ஏப்ரில் 25, 2012- மறைந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்! கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் கடந்த 20 ஆம் நாள் (வெள்ளிக்கிழமை) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு  கவலையுறுகிறோம். தென்தமிழீழம் கல்முனை நகருக்கு அருகேயுள்ள பாண்டிருப்பில் 1939 ஆம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம் பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960 ஆம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் அடிப்படையில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும் அழகிய சிறுகதைகள் பலவும் கையெழுத்துப் படியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன.  இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

Continue Reading →

தாமரைச்செல்வியின் படைப்புகள்: சமகாலப் புனைவுலகத்தின் யதார்த்தமா? அல்லது யதார்த்த உலகத்தின் புனைவா?

தாமரைச்செல்வி1970களின் பிற்பகுதி. ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் அதிகமாக வாசிக்கப்பட்ட காலம் அது. இதற்கான வாய்ப்பை வீரகேசரி உருவாக்கியிருந்தது. அப்போது ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்களை வீரகேசரி, மாதம் ஒரு நாவல் என்ற அடிப்படையில்  வெளியிட்டு வந்தது. அதில் பல புதிய எழுத்தாளர்களும் அறிமுகமானார்கள். அப்பொழுதுதான் தாமரைச்செல்வியின் ‘சுமைகள்” என்ற நாவலையும் வாசித்தேன். அந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு வயது இருபது அல்லது இருபத்தொன்றாக இருக்கலாம். அந்த நாவல் அதிகம் என்னைக் கவர்ந்ததற்கு இரண்டு காரணங்களிருந்தன. ஒன்று, நாவலில் இடம்பெறும் களத்தின் அறிமுகம். அடுத்தது, எழுதிய தாமரைச்செல்வி எங்கள் ஊருக்கு அண்மையில் இருந்தார் என்பது. இதற்குப் பின்னர் தாமரைச்செல்வியின் எழுத்துகளில் ஒரு கூடுதல் அவதானிப்பு. அவர் அநேகமாக விவசாயிகளின் பிரச்சினைகளை, விவசாயக் கூலிகளின் பிரச்சினைகளையே எழுதினார். நாங்களும் ஒரு விவசாயக் குடும்பம் என்பதால் எங்களின் பிரச்சினைகள், எங்களுடைய கதைகளாகவே இருந்தன அவருடைய கதைகள். இதனால், எங்களின் குடும்பத்தில் தாமரைச் செல்வியின் எழுத்துகளுக்கு உச்ச வரவேற்பு. அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வரும்போது இந்த வரவேற்பின் உற்சாகத்தை எங்களின் வீட்டில் காணலாம்.

Continue Reading →

மீள்பதிவு: நாவலர் பண்ணை நினைவுகள்!

 ஏற்கனவே 'பதிவுகள்' இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] 'நாவலர் பார்ம்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது. [ ஏற்கனவே ‘பதிவுகள்’ இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] ‘நாவலர் பார்ம்’ எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்ட்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது.

Continue Reading →

TamilNet: Veteran Tamil activist and humanist reaches 88 in exile

Solomon Arulanandam David (S.A. David), popularly known as Gandhiyam David, who presided the Gandhian movement which spread simple agriculture, self-sustenance, and importance to early education as a way of life in the deprived villages of Tamil Eelam for nearly a decade from 1972, reaches 88-years Tuesday as he spends his older years among his friends in Chennai. [ Monday, 23 April 2012] Solomon Arulanandam David (S.A. David), popularly known as Gandhiyam David, who presided the Gandhian movement which spread simple agriculture, self-sustenance, and importance to early education as a way of life in the deprived villages of Tamil Eelam for nearly a decade from 1972, reaches 88-years Tuesday as he spends his older years among his friends in Chennai. TamilNet extends its wishes to Mr David as it recognizes his unique and selfless contribution to Northeast Tamils and the hill-country Tamils displaced by Sinhala intimidation, riots and pogroms in the 1970s and 80s. David was assisted by another humanist of the 70s, the late Dr Rajasundaram. Rajasundaram was killed in the Welikade prison massacre in 1983, whereas his friend, David, escaped, re-incarcerated in Batticaloa jail to escape again in the famous Batticaloa jail break. David’s contribution in the history of the struggle of Eezham Tamils is that at the inception of the armed struggle he had conceived the importance of a grassroot civil movement to accompany it. S.A. David at 88Threatened by the popularity of the spreading Tamil cultural consolidation and self-reliance in the most underdeveloped areas of the Northeast, and the opportunities presented to fleeing hill-country Tamils to begin life anew in the Northeast, Colombo framed charges against Mr David and Dr Rajasundaram under the Prevention of Terrorism Act (PTA) and jailed both, according to reports. Dr Rajasunderam was killed in the Welikade Prison massacre of July 1983. Mr David escaped Welikade massacre, but was later taken to Batticaloa prison. Tamil prisoners decided to break out of the prison, and in the successful jail break, twenty prisoners escaped first, and Mr David was taken by a supporter through the jungles to Poonakari from where he found his way to Rameswaram by boat.

Continue Reading →

அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 INTERNATIONAL CONFERENCE ON MURUGA BHAKTHI 2012

அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 INTERNATIONAL CONFERENCE  ON  MURUGA BHAKTHI  2012

ஏற்பாடு
1.  திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2.  மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.

Continue Reading →

39வது இலக்கியச்சந்திப்பு: விளிம்பும், விசாரணைகளும்

39வது இலக்கியச்சந்திப்பு: விளிம்பும்  விசாரணைகளும் ரொறொன்டோ கனடா மே 5, 2012 …… மேலதிக விபரங்கள் .. உள்ளே

Continue Reading →

‘தமிழ் மிரர்’: தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாகவுள்ளது: சுஷ்மா.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். 'அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை' என அவர் கூறினார்.இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின்  இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.  அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்’ எனக் கூறிய அவர்,  அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர்,  எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். ‘அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை’ என அவர் கூறினார்.

Continue Reading →

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – கிளர்த்தும் நினைவுகள்

ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது. சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது.ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகிய சண்முகம் சிவலிங்கம் அவர்கள் காலமாகிவிட்டார் என்ற செய்தி நந்தினிசேவியர் ஐயா மூலம் இன்று (20-04-2012) பகல் அறியநேர்ந்தது. சண்முகம் சிவலிங்கம் என்றாலே ‘ஆக்காண்டிப் பாடல்’தான் ஞாபகம் வரும். ‘ஆக்காண்டி’ என்ற நாட்டார் பாடலில் தனது குஞ்சுகளை ஒவ்வொன்றாக இழந்த தாய்ப்பறவையின் சோகம் காற்றில் இழைந்து வருவதை எல்லோரும் அறிவர். அதே ஆக்காண்டிப் பாடலை அடிப்படையாக வைத்து சண்முகம் சிவலிங்கம் எழுதிய பாடலும் எங்கள் வாழ்க்கையைப் பாடும் பாடலாக அமைந்திருந்தது. 1988 இல் வெளிவந்த “நீர்வளையங்கள்” என்ற தொகுப்பினூடாக இலக்கிய உலகில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பிறகு 2010 இல் தான் அவருடை ய இரண்டாவது தொகுதியான “சிதைந்துபோன தேசமும் தூர்ந்து போன மனக்குகையும்“ வெளிவந்தது. இந்த இரண்டாவது தொகுப்பு ஒரு காவியம்போலவே தொகுக்கப்பட்டுள்ளதை படிப்பவர் உணர்வர். அண்மைக்காலங்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. விமர்சனத்தின் புதிய போக்குகளை அவை இனங்காட்டத்தக்கவை. கவிதைகளோடு சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம் ஆகிவற்றிலும் தன் ஆளுமையைச் செலுத்திவந்துள்ளார். ஆனால் கவிதையே அவரை ஒரு அழியாக் கவிஞனாக நிலைநிறுத்தியுள்ளளது.

Continue Reading →

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் மறைவு!

சண்முகம் சிவலிங்கம்ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார். இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார். 1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன. மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன. இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.[ நன்றி: http://inioru.com/?p=27454 ]

Continue Reading →