‘நாட்டியப் பேரொளி’ பத்மினியுடன் கனடாவிலிருந்து இயங்கும் TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர் நடாத்திய நேர்காணலை இரு பகுதிகளாகத் தனது ‘முகநூல்’ பக்கத்தில் நணபர் வரன் மகாதேவன் பதிவு செய்துள்ளார்.…
அனைவருக்கும் பதிவுகள் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!
[ஏப்ரில் 2012]இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் குழுவில் அ.தி.மு.க. இடம் பெறாது. 1/1 சென்னை, ஏப்.12 – இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு- மீள் குடியமர்த்தல் பற்றி அதிபருடன் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாலும், இலங்கை தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ராஜபக்ஷே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் அ.தி.மு.க. உறுப்பினர் ரபி பெர்னார்டு பங்கேற்க மாட்டார் என சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்தார். நேற்று முதல்வர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விபரம் வருமாறு:- இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அந்த நாட்டில் மறு குடியமர்த்துவதற்காகவும், மறுவாழ்வு அளிப்பதற்காகவும், இந்திய நாட்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் 15 உறுப்பினர்கள் அடங்கிய இந்திய பாராளுமன்ற கூட்டுக் குழுவை இலங்கைக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்து, அதில் அ.தி.மு.க. சார்பில் ஓர் உறுப்பினரை அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வில்லியம் ரபி பெர்னார்டு அனுப்ப நான் முடிவு செய்தேன்.
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் (24)
பன்றியாக மாறி வாழ்ந்து அந்த வாழ்க்கையில் சுகம் காணும் இன்றைய பன்றி முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்த கதையைச் சொன்ன போது அதை மறுத்தவர் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. அல்லது மறுத்தவர்களின் வாதங்களையும் பெயர்களையும் அருண் தணிக்கை செய்துவிட்டாரோ?. அப்படி இராது என்று தான் நினைக்கிறேன். பன்றிக்கு பன்றியாக சுகமே வாழ்வதில் மறுப்பிராது .ஆனால் அதைப் பன்றி என்று நாம் அழைத்தால் அது கட்டாயம் அதன் வழியில் சீறும். ஏனெனில் அதற்கு தான் முன் ஜன்மத்தில் ரிஷியாக இருந்தது நினைவில் இருக்கக் கூடும். . சுகம் கண்டாயிற்று. இதுதான் சுகம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாயிற்று. அது ஆழமாகப் பதிந்தும் போய்விட்டது. பில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, அவ்வப்போது உலகத் திரைப்பட விழாவுக்கெல்லாம் தவறாமல் போய் வந்தும், தமிழ்த் திரைப்படங்களை தராசில் எடை போட வரும்போது ஹாசினிக்கு தமிழ் சினிமாக் கலாசாரமும் அதில் தான் வாழ்வேண்டிய நிர்ப்பந்தங்களும் தான் அழுத்துகின்றன. அழுத்துகின்றன என்று சொல்வது கூட தவறு என்று நினைக்கிறேன்.
[விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரசபடைகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தத்தின் முக்கியமானதோர் திருப்புமுனையாக அமைந்தது ஆனந்தபுரத்தில் புலிகளுக்கேற்பட்ட இழப்பு. அதுபற்றிய பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராஜின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு தேனீ இணையத்தளத்தில் வெளியானது. அதனை ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]
– இந்தக் கட்டுரை முதலில் ஏப்ரல் 10,2009ல், “எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட பாரிய தோல்வியினால் உயர்மட்ட புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்” எனும் தலைப்பில் எழுதப்பட்டது. பின்னர் அது புதுப்பிக்கப்பட்டு திருத்தங்களுடன் தற்போதைய தலைப்புடன் வெளியிடப்படுகிறது.அது மீண்டும் இங்கே வெளியிடப்படுவது, ஏப்ரல் 5,2009ல் ஆனந்தபுரத்தில் முடிவுற்ற தீர்க்கமான போரின் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக. அப்போது நான் எழுதியிருந்தது, ஆனந்தபுர யுத்தம் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயின் கண்ணோட்டத்தில் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பற்றிய கணிப்பினை தீர்மானிப்பதற்கு ஏற்ற ஒரு தருணம் என்று. – டி.பி.எஸ்.ஜெயராஜ் –
[தினகரன்(இலங்கை) வாரமஞ்சரியில் வெளியான கட்டுரை – பதிவுகள்] மலையக இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு மேலும் சிறப்பிடம் பெறுகிறது. இதற்கு காரணம் அந்த (தந்தையார்) தோட்டத்துப் பள்ளி ஆசிரியர் லயத்தின் தொங்கல் வீட்டில் குடியிருந்தது காரணமாகவிருக்கக் கூடும். தென்னிந்தியாவிலிருந்து கற்பிக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர் குழுக்களில் அவரது தந்தையும் ஒருவர் (தெளிவத்தை ஜோசப் அவர்களின் நேர்காணல் – மூன்றாவது மனிதன்). பதுளை ஊவா கட்டவளை என்ற தோட்டத்தில் சந்தனசாமி பிள்ளை, பரிபூரணம் ஆகிய இருவருக்கும் இரண்டாவது பிள்ளையாக 1934.02.16 திகதியன்று பிறந்தவரே ஜோசப். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக இருக்கும் அதேவேளை இதற்கு முன் ஒரு பாரிய நிறுவனத்திலும் கணக்காளராகவும் பணிபுரிந்துள்ளார். ‘பேசும்படம்’ என்ற சஞ்சிகையில் பார்த்த படங்களில் உள்ள பிடிக்காத காட்சிகளை ‘வெட்டுங்கள் வெட்டுங்கள்’ என்ற பகுதிக்கு பாடசாலை காலத்திலேயே எழுதி அனுப்பும் பழக்கம் இவருக்குண்டு. ‘எஸ் ஜோசப் – ஊவா கட்டவளை, ஹாலிஎல’ என்ற பெயரில் பல கடிதங்களை பிரசுரித்திருந்தன. இவ்வாறு ஆரம்பமானதே இவரது எழுத்துப் பணி. அதனை தொடர்ந்து 1955 இல் அவரது அண்ணன் ஞானப்பிரகாசம் (எழுதுவினைஞர்) தொழில் நிமித்தம் பதுளையின் இன்னொரு தோட்டமான தெளிவத்தை யில் தங்கியிருக்கும் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாய் அவருடன் இருந்த ஓய்வு நேரங்கள் அவரை எழுத்துப் பணிக்கு இழுத்துச்சென்றது.
இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலக்கியவாதியுமான தெளிவத்தை ஜோசப் இருதய நோய் காரணமாக கொழும்பு டேர்டன்ஸ் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயது நிரம்பிய இவர் மலையகத்தின் இலக்கிய முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களித்துள்ளார். இவரது இருதய சத்திர சிகிச்சைக்கு ரூபா ஏழு இலட்சம் இலங்கை நிதி தேவைப்படுவதால் இலக்கியவாதிகளிடமும் பரோபகாரிகளிடமும் புலம்பெயர்ந்து வாழும் நல்லுள்ளங்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளார். எனவே நல்லுள்ளம் படைத்தோர் மூத்த எழுத்தாளரின் உயிரைக் காப்பாற்ற கீழுள்ள வங்கிக் கணக்கில் முடிந்தளவு தொகையைச் செலுத்தலாம்.
குறும்பட விருது
அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம்.
காதல் என்னும் பதத்திற்கு அன்பு, பற்று, பாசம், நேசம், நட்பு, காம இச்சை, பக்தி, வேட்கை, ஆவல், பற்றார்வம், காதலணங்கு, அன்புச்செய்தி, காதல் நினைவூட்டு, காதல் தொடர்பு, காதலாட்டம், காதல் தெய்வம், மதவேள், அன்புகொள், பாசங்கொள், நேயமுறு, காதல்கொள், காதலி, விரும்பு, அன்புடன் பேணு, பெற்றுமகிழ், நுகர்ந்து மகிழ், ஈடுபாடுகொள், நாட்டங்கொள், சார்புகொள், விரும்பிப்பயில் போன்ற கருத்துகள் அகராதியில் நீண்டு அமைவதுபோல் காதலும் இன்ப ஒழுக்கத்தின் இயல்பை உணர்த்தி நின்று மக்களை வழிப்படுத்துகின்றது. பெண்ணானவள் 12 ஆவது, 13 ஆவது அகவைகளிலும், ஆணானவன் 14 ஆவது, 15 ஆவது அகவைகளிலும் பருவமடையும் பொழுது உடம்பில் ஏற்படும் ஓர் இயற்கை உந்தலால் தூண்டப்பட்டு, உடல் இச்சை கொண்டு, இன்பமடைய விரும்பி, காதல் வயப்பட்டு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் விரும்பிக் காதலிப்பர். பசித் தூண்டலுக்குச் சாப்பிடுவதும், தாகத்துக்கு நீர் அருந்துவதும் உடல் தேவையின் நியதியாகும். தொல்காப்பியம் (தி.மு.680—கி.மு.711):- இனி, எமக்குக் கிடைக்கக்கூடிய காலத்தால் மூத்த சங்க இலக்கிய நூலான தொல்காப்பியம் முதல் மற்றைய நூல்களிலும் காதல் எவ்வண்ணம் பேசப்படுகின்றது என்ற கதைகள் பற்றிக் காண்போம். தொல்காப்பியர் காதலை (1) கைக்கிளை, (2) அன்பின் ஐந்திணை, (3) பெருந்திணை என்று மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.
(89) – நினைவுகளின் சுவட்டில்
காலையில் எழுந்து பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்ஃபாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால் ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம் இருந்தது. இரவில் பார்த்த பத்துப் பதினைந்து பேருக்கு மேலாக நிறையப் பேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள். என்றார் ஜார்ஜ். சரி வாங்க காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில் தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன் தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம் தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, பளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில் தான் அனாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாதுக்கள். கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சினேகமாகவே இருப்பார்கள். சாதுக்களைப் பார்த்து நமக்கும் அதிகார தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை