எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம்

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார்.  
தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது. 
 

Continue Reading →

முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

திலகபாமா(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை  இதோ)  பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன்  2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த  விசயங்களை  நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என்  தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.

Continue Reading →

காலச்சுவடு: மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் –

மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் - சுனந்த தேசப்ரிய-மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

Continue Reading →

காலச்சுவடு: முள்ளிவாய்க்கால் – இன அழிப்பும் போர்க்குற்றங்களும்!

அறிமுகம்

 ஜூட் லால் பெர்ணாண்டோ டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.  இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர்.]மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

Continue Reading →

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் – 3

அத்தியாயம் மூன்று: மாமா மகன்

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]     மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு….  வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. ‘பார்க்’ ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது.  மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான.  இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள்.  குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள்.  தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய்.  தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில்  அதன் அளவினை உணரமுடிந்தது.

Continue Reading →

“எதுவரை” இணைய சஞ்சிகை ! மே இதழ்-2012

 எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி — http://eathuvarai.net/  அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்! “நமது மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டதும் பெரியளவிலுமான அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகளையும் சவால்களையும் மேலாதிக்கத்தினையும் அக/புற முரண்பாடுகளையும் எவ்விதமான அணுகுமுறைக்கு ஊடாக குறைக்க முடியும் அல்லது தீர்க்கமுடியுமென நீங்கள் நம்புகிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு பலரிடம் பல்வேறு பதில்கள் இருக்கலாம்… சமூக மாணவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை நமது பண்பாட்டுத்தளத்தில் எழுத்து ,வாசிப்பு, கற்றல்,உரையாடலின் மூலம் இந்த நிலைமைகளை மாற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்க முடியுமென நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.அதற்கான களங்களைத் திறப்பதும் இந்த வழிமுறை மீது நம்பிக்கை வைத்து தொடர்சியாக செயற்படுவதும் இன்று அவசியமாக உள்ளது.!/

Continue Reading →

‘பாரதியைப் பயில…..

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh7.htmவழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.நன்றி. அன்புடன்,வீ.சு.இராமலிங்கம்தஞ்சாவூர் bharathisangamthanjavur@gmail.com

Continue Reading →

மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்

யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழனின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழன் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. – அன்புடன் முஸ்டீன்

Continue Reading →

எல்லைகளுக்குள் வாழும் உறவு

நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன. - நடேசன் -நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன.

Continue Reading →