காலம்: 01ஏப்ரல் 2013 (வங்கி விடுமுறை தினம்) | காலை 10.00 முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்: Trinity Community Centre, East Avenue,…
வாழ்க்கையின் மீதான விமர்சனத்திலிருந்தே ஒரு படைப்பு உருவாகிறது. சுய அனுபவத்தின் மெய்த்தன்மை படைப்பில் தென்படுமானால் அந்தப்படைப்பு வாசகரின் நம்பிக்கையை பெற்றுவிடுகிறது. நம்பிக்கையைப் பெற்று நம்மை பாதிக்கிறது. இந்தப்பாதிப்பே இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான உறவின் அடிப்படையாக அமைகிறது. நல்ல எழுத்து – அனுபவம்சார்ந்து வாழ்க்கையின் சிக்கலைப்பற்றி விவாதிக்கும். வாழ்க்கை இப்படி…இப்படி இருக்கிறது என்று கவனப்படுத்துவதன் மூலம், நமக்கும் வாழ்க்கைக்குமான உறவை ஒழுங்கு செய்யமுயலும், வாழ்க்கையை எதிர்கொள்ளுவதற்கான ஒரு சூழலையும் தயாரிப்பையும் உருவாக்கும். மகிழ்ச்சியான தருணங்களும், துயர நிகழ்ச்சிகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை அல்ல என்பது உண்மைதான். ஓரே நபருக்குக்கூட இவை எப்போதும் ஒரே மாதிரியானவை அல்ல. மற்றவர் வாழ்க்கை அனுபவங்களும் வேறுவேறானவைதான். ஆனால், எல்லா மனிதர்களுடைய சுக துக்கங்களுக்கும் பொதுவான ஒரு இழை இருக்கிறது. அந்த இழையை உணரச்செய்யும் எழுத்துக்கள் வாசகர் மனதில் பதிந்து வெற்றிபெற்றுவிடுகின்றன. முருகபூபதின் பறவைகள் நாவல், நம்காலச்சூழலின் ஒரு பகுதியைப்பதிவுசெய்துள்ள முறையில் நம்மைப்பாதிக்கிறது. பல எழுத்தாளர்களின் கதைகளைப்படித்த பின் அவர்களது புத்திசாலித்தனமும், கதையை சொல்லியவிதமுமே மனதில் மீந்திருக்கும். கதை முடிந்தபிறகு, அதை எழுதியவரைப்பற்றி நினைக்காமல் எழுத்தில் காட்டப்பட்ட வாழ்க்கையைப்பற்றி மனிதர்களைப்பற்றிக் கொஞ்சநேரமேனும் ஆழ்ந்து யோசிக்கவைக்கும் சக்தி மிகச்சில எழுத்தாளர்களுக்கே வாய்த்திருக்கிறது. அதில் முருகபூபதியையும் ஒருவராய்க்குறித்துக்கொள்ள முடிகிறது.
“ஐயா. சந்நிதி கோயிலுக்குப் போறாராம். என்னையும் வரட்டாம்.” என்றார் தீனக் குரலில். காலனின் கயிறு அவரது கழுத்தில் வீசப்பட்டதைக் கண்டதைப் போல அருகில் நின்றவர்களின் முகங்கள் பேயடித்து வெளிறின. உரித்த நார்போல படுக்கையில் கிடந்த அவரது குரல் இரகசியம் போசுவதுபோல ஒலித்தாலும் புரிந்து கொள்ளக் கூடியளவு தெளிவாக இருந்தது. இவரது வயது 75 யை நெருங்கியிருந்தது. ‘ஐயா’ என அழைத்த அவரது தந்தை இறந்து 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. பல நாட்களாக இவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். உணவு உட்கொள்வதைக் கைவிட்டுச் சில நாட்களாகிவிட்டன. நீராகாரம் மட்டும் பருக்குகிறார்கள். இன்றோ நினைவு தப்புவதும் மீள்வதுமாக இருக்கிறது. இது ஒரு மரணப்படுக்கைத் தரிசனம்.(Deathbed Visions) காலாதிகாலமாக இப்படியான விடயங்கள் பேசப்பட்டு வந்தாலும் அவை விஞ்ஞான பூர்வமான பதிவுகளானது அண்மையில்தான். 1924ம் ஆண்டளவில் பௌதீகவியல் பேராசிரியரான Sir William Barrett தான் இவ்வாறான விடயங்கள் பற்றி ஆய்வு செய்து முதன் முதலாக ஆவணப்படுத்தினார். பௌதீகப் பேராசிரியருக்கு முற்றிலும் அந்நியமான துறையில்; ஆர்வம் வந்ததற்குக் காரணம் மகப்பேற்று நிபுணரான அவரது மனைவிதான். January 12, 1924 அன்று குழந்தைப் பேற்றின்போது குருதி இழப்பினால் மரணத்தைத் தழுவிய ஒரு பெண்ணுக்கு கிட்டிய தரிசனம் பற்றிய தகவலை மனைவி வெளியிட்டதாலேயே அவருக்கு இத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டது. (முழமையான விபரங்களை இணையத்தில் தேடுங்கள்)
சீனர், மலாயர், இந்திய வம்சாவழியினர் , யுரேஷியர் மற்றும் இதரர் என்னும் பல்வேறு இனம் மற்றும் மொழிபேசுகின்ற குடிமக்களையும் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வோரையும் கொண்ட சிங்கப்பூரின் இன்றைய மக்கள் தொகை 53 லட்சம். இவர்களுள் இந்திய வம்சாவழியினர் மட்டும் சுமார் 9 விழுக்காடு. இவர்களுள் தமிழ் பேசுவோர் 3.2 விழுக்காட்டினர். இவ்வாறு குறுகிய எண்ணிக்கையில் தமிழரும் தமிழ் பேசுவோரும் வாழ்கின்ற நாடாக வளமிக்க சிங்கப்பூர் இருந்தாலும் மலாயாவிலிருந்து பிரிந்து சுதந்திரக் குடியரசாக 1965 ல் பிரகடனப்படுத்தப்ட்டதிலிருந்து கீழ்த்திசை நாடுகளின் வளர்ச்சிச் சுடரொளியாய் பரிணமிக்கும் இந்நாடு தமிழ் மொழிக்குத் தந்திருக்கும் தகுதி உயர்வானதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். கல்வித்துறையில் இங்குள்ள பாலர் பள்ளிகள் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழைப் பாடமாகப் பயில முடியும். பொது ஊடகங்களில் சிங்கை வானொலியின் ஒலி 96.8 அல்லும் பகலும் தமிழை ஏந்தி வருகிறது. தொலைகாட்சியின் வசந்தம் சென்ட்ரல் தமிழ் நிகழ்சிகளை நள்ளிரவு வரை நல்கிடக் காண்கிறோம். அச்சு ஊடகங்களில் தமிழவேள் கோ. சாரங்கபாணியவர்களால் 1935-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் முரசு நாளேடு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழாக இங்குள்ள தமிழ் சமூகத்தின் அடையாளமாகத் திகழக் காண்கிறோம்.
– March 22, 2013 – Chinua Achebe, the internationally celebrated Nigerian author, statesman and dissident who gave literary birth to modern Africa with Things Fall Apart and continued for decades to rewrite and reclaim the history of his native country, has died. He was 82. Achebe died following a brief illness, said his agent, Andrew Wylie. “He was also a beloved husband, father, uncle and grandfather, whose wisdom and courage are an inspiration to all who knew him,” Wylie said. His eminence worldwide was rivaled only by Gabriel Garcia Marquez, Toni Morrison and a handful of others. Achebe was a moral and literary model for countless Africans and a profound influence on such American writers as Morrison, Ha Jin and Junot Diaz. As a Nigerian, Achebe lived through and helped define revolutionary change in his country, from independence to dictatorship to the disastrous war between Nigeria and the breakaway country of Biafra in the late 1960s. He knew both the prestige of serving on government commissions and the fear of being declared an enemy of the state. He spent much of his adult life in the United States, but never stopped calling for democracy in Nigeria or resisting literary honours from a government he refused to accept.
அன்பு தோழர்களே, ‘தமிழர்களுக்கான சர்வதேசப் பிரச்சாரம்’ (Global Campaign for Tamils) சார்பாக , ஐ.நா.ம.உ.க வாக்கெடுப்பை முன்னிட்டு பல மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்திருக்கிறேன். இவற்றை உங்களுடைய வெளி மாநில, வெளிநாட்டு நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளவும். இது இன்றோடு முடிகிற விவகாரமன்று. இன்று தொடங்கி இந்த பிரச்சாரத்தை இலங்கையில் காமன்வெல் மாநாடு நடைபெறவுள்ள நவம்பர் வரையில், அல்லது அடுத்த ஆண்டு வாக்கெடுப்பு காலம் வரை செய்யவேண்டும். உலகின் கவனத்துக்கு ஈழத் தமிழர் பிரச்சனையைக் கொண்டு செல்ல அனைத்து முக்கிய ஐரோப்பிய, ஆசிய, இந்திய மொழிகளிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும். அதன் தொடக்கமே இந்த பிரச்சார ஃபேஸ்புக் கவர்கள். இன்று தொடர்ச்சியாக அவற்றை நான் ஃபேஸ்புக்கில் ஏற்றிவருகிறேன். பின்வரும் மொழிகளில் ஃபேஸ்புக் கவர்கள் இன்று தொடர்ச்சியாக வெளியிடப்படவுள்ளன:
குதிரையைக் குளத்துக்குக் கூட்டிக் கொண்டு போகலாம். ஆனால் குதிரையைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. அது தானாகத் தண்ணீர் குடித்தால்தான் (Well, you can lead a horse to water, but you cannot make him drink) உண்டு. இது ஒரு ஆங்கிலப் பழமொழி. ஒருவர் தனது மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்வார். எடுத்துக் காட்டாக ஒருவருக்கு விமானப் பயணத்துக்குரிய சீட்டை வாங்கி அவரை விமானநிலையத்துக்கு உரிய நேரத்தில் அழைத்துச் சென்று அவரை விமானத்தில் ஏற்ற ஒருவர் முயற்சி செய்யலாம். ஆனால் அந்த ஆள் விமானத்தில் ஏற மறுத்தால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. சென்ற ஆண்டு அய்.நா. மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா முதலில் எதிர்த்தது. “தனியொரு உறுப்பு நாடொன்றைக் குறிவைத்துக் கொண்டுவரப்படும் தீர்மானம் எதனையும் இந்தியா எதிர்க்கும். காரணம் அய்.நா. மனித உரிமை பேரவையின் ஆக்க பூர்வமான பேச்சு வார்த்தையையும் கூட்டு அணுகுமுறையையும் அது பலவீனப்படுத்தும் (India said it is against “country specific” resolutions because they may weaken the constructive dialogue and cooperative approach of the UNHRC.) என இந்தியா வாதிட்டது.
20 Mar, 2013 – WASHINGTON: The US-sponsored draft resolution before the ongoing session of the UN Human Rights Commission in (UNHRC) “calls” the Sri Lankan government to conduct an “independent and credible” investigation into allegations of human rights violations. The draft resolution – a copy of which has been obtained by PTI – has not ceded to demands of human rights bodies for an independent international investigation, as being called by the Office of the UN High Commissioner for Human Rights in its report. Welcoming the announcement by the Lankan government to hold elections to the Provincial Council in the Northern Province in September 2013, the draft resolution now calls upon Colombo to fulfill its public commitments, including on the devolution of political authority. A previous version of the draft resolution had expressed concern over the “failure” of the Sri Lanka to fulfill its commitment on devolution of power. The draft resolution, currently under circulation, also welcomes and acknowledge the progress made by the Lankan government in rebuilding infrastructure, demining, resettling the majority of internally displaced persons. At the same time it takes note of the considerable work that lie ahead in the areas of justice, reconciliation and resumption of livelihoods, and stresses the importance of the full participation of local populations, including representatives of civil society and minorities, in these efforts.
பாரிஸ்: நூல் வெளியீட்டு நிகழ்வு! க.வாசுதேவனின் ‘பிரஞ்சுப் புரட்சி’ (19ம் நூற்றாண்டின் பிரஞ்சுக் கவிதைகள்)!
இப்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில் அந்தக் கட்டத்தை நினைத்துப் பார்த்தால், அப்படியெல்லாம் “ஒருத்தர் இடம் கொடுத்தால் எதையும் எழுதிவிடுவதா?” என்று கேட்டாரே செல்லப்பா, அந்த மனநிலையைக் கொடுத்ததே அவரும் அவரது எழுத்து பத்திரிகையும் தான். அதற்கும் மேல், எங்கள் மனம் நடமாடிய அந்தச் சின்ன இலக்கிய சூழலில் இதைத் தானே நான் கற்றுக்கொண்டேன். எழுத்து, இலக்கிய வட்டம், அதைத்தொடர்ந்து தேவசித்திர பாரதியின் ஞானரதம் எல்லாம் என்னிடம், மனம் விட்டு எந்தத் தடையும் உணராது பேசும் எழுதும் உணர்வு கொண்டவர்களிடம் இதைத் தானே எதிர்பார்த்தது. வேறு கால கட்டங்களில் எழுத்து பத்திரிகையும் தோன்றியிருக்காது. அங்கு ஒரு செல்லப்பாவும் எங்கள் முன் இருந்திருக்க மாட்டார். செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.