Canadian Leaders on International Women’s Day

Statement by the Prime Minister of Canada on International Women’s Day

- March 8, 2013, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark International Women’s Day:  “Today, I encourage all Canadians to recognize the tremendous achievements of women in Canada and around the world in promoting equality, peaceful development and in combating violence against women and girls. “Canada’s theme for this year’s International Women’s Day is Working Together: Engaging Men in Ending Violence Against Women, which highlights the importance of engaging men in efforts to prevent such aggression, including playing a role in educating boys about healthy and equal relationships.Prime Minister Stephen Harper – March 8, 2013, Ottawa, Ontario-  Prime Minister Stephen Harper today issued the following statement to mark International Women’s Day:  “Today, I encourage all Canadians to recognize the tremendous achievements of women in Canada and around the world in promoting equality, peaceful development and in combating violence against women and girls. “Canada’s theme for this year’s International Women’s Day is Working Together: Engaging Men in Ending Violence Against Women, which highlights the importance of engaging men in efforts to prevent such aggression, including playing a role in educating boys about healthy and equal relationships. Our Government supports grassroots organizations across the country for community projects aimed at ending violence against women and girls. These include initiatives addressing violence against women in four key areas: violence committed in the name of so-called ‘honour’; the trafficking of women and girls; women and girls in high-risk neighbourhoods; and engaging men and boys. Our Government has also been taking action by strengthening domestic laws against perpetrators of the most violent crimes and sex offenders who prey on our children. We have also taken several concrete measures to put the central focus of the criminal justice system back where it belongs, on the rights of victims.

Continue Reading →

40ஆவது இலக்கியசந்திப்பு- லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

40ஆவது இலக்கியசந்திப்பு- லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013: மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.

40ஆவது இலக்கியசந்திப்பு- லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013: மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும். நன்றி! – 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் (லண்டன்)

Continue Reading →

புலவர் பார்வதிநாதசிவம்: உணர்வைத் தந்த தமிழாசிரியர்!

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!எனக்குள் உணர்வைத் தந்த தமிழாசிரியர். ஈழத்துப்  பைந்தமிழ்க் கவியாள்பவர்களின்  வரிசையில்  புலவரும்  நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர். எளிமையானவர். பழகுவதில்  இனிமையானவர். தோய்த்துலர்ந்த  வேட்டி, நாஷனலுடன்  வகுப்புக்குள்  வந்தால்  அமைதியாகிவிடும். உடையிலேயே  தேசியத்தைக்  கடைப்பிடித்த  தமிழாளர். உரையாசிரியர். ம.க.வேற்பிள்ளை, ம.வே. மகாலிங்கசிவம், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, பண்டிதை. இ. பத்மாசினி,  பண்டிதர், சா.வே.பஞ்சாட்சரம், மயிலங்கூடலூர். ப. நடராஜன் போன்ற  பலரை உறவுகளாகக்  கொண்ட  பாக்கியம்  பெற்றவர். மேலாக, ம. ப.மகாலிங்கசிவம் அவர்களின்  இலக்கியப் பணி கூட  இவரிடம்  இருந்து  வந்ததுவோ? ஆனைப்பந்தி  உயர்கலைக் கல்லூரியில்  தமிழாசிரியராக  எனக்குக் கிடைத்தது நான் செய்த  கொடுப்பினை. இலக்கியப்பூக்களுக்கு  கட்டுரைகள்  ம.பா.மகாலிங்கசிவம்  அவர்களிடமிருந்து கிடைத்த போது பெருமிதமாக  இருந்தது. பின்னாளில், அவரின்  பசிப்பிணி  மருத்துவன், இன்னும் ஒரு திங்கள்  நூல்களை  வாசிக்கக் கிடைத்தது  போது  அவரின் கவிதைகள்  மீது  அளப்பரிய  விருப்பம்
ஏற்பட்டது.

Continue Reading →

பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்!

நவஜோதி ஜோகரட்னம்“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.

Continue Reading →

கவிஞன் என்றும் கவிஞன்தான்! கவிஞன் கவிதைச் சிற்றிதழ் மீது ஒரு பார்வை!!

இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.சதாசிவம் மதன் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு மீன்பாடும் தேனாட்டில் இருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான கவிஞன் என்ற சிற்றிதழின் 21 ஆவது இதழ் கிடைக்கப் பெற்Nறுன். முழுக்க முழுக்க கவிதைகளையே உள்ளடக்கி வரும் இவ்விதழ், சகல கவிஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதோடு கவிதை எழுதத் துடிக்கும் புதுக் கவிஞர்களுக்கும் சிறந்ததொரு ஊடகமாகவும் அமைந்துள்ளது. உருவத்திலும், உள்ளடக்கத்திலும் அழகாக காட்சி தரும் இவ்விதழ் இந்தியச் சிற்றிதழ்களுக்கு ஈடாக காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதழின் முன்னட்டை பிரபல கவிஞரும் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலின் ஆசிரியரும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமாகிய வெலிகம ரிம்ஸா முஹம்மத், 2007ம் ஆண்டு இலங்கை நல்லுறவு ஒன்றியம் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தபோது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. சாதனை யுவதி வெலிகம ரிம்ஸா முஹம்தைப் பற்றி கூறுவதாயின் இவர் இலக்கிய ஈடுபாடு கொண்டு தன்னை இலக்கியத்துடனேயே ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஓர் இளம் படைப்பாளி என்று சுருக்கமாக கூறிவிடலாம் என்றாலும், அவர் அதீத இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் அவரைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Continue Reading →

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புபல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களி;ல் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. `கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது…’ என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்’ இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.

Continue Reading →

Hugo Chávez [28 July 1954 – 5 March 2013]

Hugo Chávez [28 July 1954 – 5 March 2013][From Wikipedia, the free encyclopedia] Hugo Rafael Chávez Frías (Spanish pronunciation: [ˈuɣo rafaˈel ˈtʃaβes ˈfɾi.as]; 28 July 1954 – 5 March 2013) was the President of Venezuela from 1999 until his death in 2013. He was formerly the leader of the Fifth Republic Movement political party from its foundation in 1997 until 2007, when it merged with several other parties to form the United Socialist Party of Venezuela (PSUV), which he led until his death. Following his own political ideology of Bolivarianism and “socialism of the 21st century”, he focused on implementing socialist reforms in the country as a part of a social project known as the Bolivarian Revolution, which has seen the implementation of a new constitution, participatory democratic councils, the nationalization of several key industries, increased government funding of health care and education, and significant reductions in poverty, according to government figures.

Continue Reading →

கோவை ஞானி என்ற போராளி

கோவை ஞானிசுப்ரபாரதிமணியன்சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.  பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான  அணுகுமுறைகளும் தொடர  பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து  பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்

Continue Reading →

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!

புலவர் பார்வதிநாதசிவம் மறைவு!புலவர் பார்வதிநாதசிவம் அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கோர் இழப்பே. அவரது காணொளியிலான நேர்காணலொன்றினை இணையத்தில் ‘யு டியூப்’ இல் கேட்டேன். அவரது காணொளி நேரகாணலில் அவர் கூறியுள்ள தகவல்கள் (குறிப்பாக ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் பற்றிய அவரது கருத்துகள்) மிகவும் பயனுள்ளவை. ஈழநாடு பற்றிய அவரது கருத்துகள் எனக்கு அன்றைய காலகட்ட நினைவுகளைத் தோற்றுவித்தன. என் எழுத்துலக வாழ்வில் ஈழநாடு சிறுவர் மலர் மிகவும் முக்கியமானது. அதில் கட்டுரைகள், கவிதைகள், குட்டிக்கதை என எனது சிறுவர் காலத்து ஆக்கங்கள் பல வெளிவந்துள்ளன. புலவர் நேர்காணலில் ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகவிருந்த பெருமாள் பற்றிக் கூறியிருந்தார். பெருமாள் வாரமலருக்குப் பொறுப்பாகவிருந்தபோது எனது சிறுகதைகள் , நல்லூர் ராஜதானி நகர அமைப்பு பற்றிய கட்டுரைகள், பழமையின் சின்னங்கள் பேணப்படுதல் பற்றிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பிரசுரித்து ஊக்கப்படுத்தினார்.  அன்றைய காலகட்டத்தில் புலவரின் கவிதைகள் போன்ற ஆக்கங்கள் பலவற்றை ஈழநாட்டில் வாசித்ததாக ஞாபகம். அவரை நான் அறிந்து கொண்டதே ஈழநாடு மூலம்தான். அமைதியாகத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்களில் புலவரும் முக்கியமானவர். அவரது மறைவினையொட்டி இணையத்தில் கிடைத்த பிற தளச் செய்திகள் சிலவற்றை, நன்றியுடன், மீள்பிரசுரம் செய்கின்றோம். அவரது படைப்புகளை இணையத்தில் காண முடியவில்லை. அவரது  படைப்புகள்  சேகரிக்கப்பட்டு,  நூலகம்  போன்ற  தளங்களில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதவசியம்.  அத்துடன் அவரது மறைவால் வாடும் அனைவரின் துயரத்திலும்  பங்குகொள்கின்றோம்.

Continue Reading →