வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும்!

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய  `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை' நூல் வெளியீடுவெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய `கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை’ நூல் வெளியீடும் இலக்கிய, ஊடக மூத்த பெண் ஆளுமைகள் இருவருக்கான கௌரவிப்பும் எதிர்வரும் 2013 ஜூலை 07 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பு முஸ்லிம் நூலகமும், இளம் மாதர் முஸ்லிம் பேரவை (வை. டப்ளியு.எம்.ஏ) ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, வைத்திய கலாநிதி தாஸிம் அகமது அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கிறது.

Continue Reading →

நூல் அறிமுகம்: ‘வண்ணாத்திக் குளம்’ நாவல் பற்றிச் சில கருத்துகள்…..

- காவலூர் இராஜதுரை - [ 13-10-2004  திகதி அன்று காவலூர் இராஜதுரையால் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. – பதிவுகள்]   இலங்கையில் 1980-1983 வரையிலான காலப்பகுதியை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நெடுங்கதை.-வண்ணாத்திக்குளம் இதனால் இந்நூலை சமகால வரலாற்று நவீனம் எனக் கொள்ளத்தகும். 1952இல் உத்தியோகத்தின் நிமித்தம்  கொழும்பு வந்த நான்  2000ஆம் ஆண்டுவரை  கொழும்பிலே வாழ்க்கை நடத்தவேண்டியதாயிற்று. 1956முதல் 1983 வரை நடைபெற்ற எல்லா கலவரங்களின் போதும் கொழும்பிலேயே குடும்பத்துடன் இருந்தேன். சுமார் 35 வருடகாலம் கொள்ளுப்பிட்டியில் பின்னர் 15 வருடகாலம் நாவலயில். இது தவிர இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்  உத்தியோகம் பார்த்த எட்டு வருட காலத்தில் இலங்கையின் பலபாகங்களுக்கும் குமண, தந்திரிமலை மகியங்கனை ஆகிய இடங்கள் உள்ளிட்ட  பகுதிகளுக்கும் பயணம் செய்திருக்கிறேன் எனவே ‘குடா நாட்டிற்கு வெளியே வாழத்தலைப்பட்ட போதுதான்  தமிழினம் தவிர்ந்த ஏனைய இனமக்களும்  எவ்வாறு அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது,’ என்று நடேசன் தமது என்னுரையில் கூறுவதை  முழு மனத்துடன் ஏற்றுக் கொள்ளக்தோன்றுகிறது. அதிலும் 1956ஆம் ஆண்டின் சிங்களம் மட்டும் சட்டத்தின் சிங்கள் வாரிசுகள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களுக்கு சிங்களம் தவிர வேற்று மொழி தெரியாது இருக்கிறது. சிங்கள ஊடகங்கள் அரசியல்வாதிகளின் கைகளில் இருந்தன. எனவே பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் சிங்கள மக்கள் மத்தியிலே இனத்துவேசத்தை நாளும் பொழுதும் வளர்க்க  வாய்ப்புகள் இலேசாக கிடைத்தன. ஆகவே ஆட்டுவித்தால் ஆடாதவர் யார் எனும் பாங்கில் பெரும்பான்மை இனமக்கள் இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading →

பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத படமும் வெற்றி பெறும் என்பதற்கு உறவு நல்ல எடுத்துக்காட்டு

உறவு திரைப்படக் காட்சி...நக்கீரன் (தங்கவேல்)நேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது  நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும்  குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை.  தண்ணுமை  வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன. 

Continue Reading →

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா: நினைவு முகம் கலைந்து போகுமா?

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா“முடிவில்: நான் ஒரு வைத்தியராகப் பல பயிற்சிகள் பெற்று 40 ஆண்டுகள் கடமையாற்றி இளைப்பாறியது என் பாக்கியமே. எனவே இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போல எங்கள் வைத்தியத் துறை தொடர்ந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் விருத்தியடைய நான் மனதார வாழ்த்துகிறேன்” வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா
    
வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா அவர்கள் எழுதிய “20 ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு” என்ற கட்டுரையை “பிரித்தானியாவின்  தமிழ் பெண் எழுத்தாளர்கள்”  என்ற எனது தொகுப்பிற்காக பதிவு செய்துகொண்டிருந்தவேளை, அவரின் பிரிவுச் செய்தி எழுத்தாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தபோது என் கண்கள் நனைந்;து வேதனையாகியது. யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் பாடசாலையில் தனது கல்வியை மேற்கொண்ட வைத்தியர் சீதாதேவி மகாதேவா 1998 இல் லண்டனில் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியராகத் திகழ்ந்தவர். குழந்தை வைத்தியம், மனநோய்ச்சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியசேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற திருமதி சீதாதேவி மகாதேவா பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் 27 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இலங்கையிலும் சேவையாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.
   

Continue Reading →

தமிழ் இலக்கியத் தோட்டத்துக்கு உதவித் தொகை $8500 ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ வழங்குகிறது.

araikuRaiyaana ஓவியங்கள்!தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அறக்கட்டளையினால் $8,500 உதவித் தொகையாக இவ்வாண்டு வழங்கப்பட்டுள்ளது.  100 சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ‘நிலவற்ற இரவு’ (“Moonless Night”)  என்னும் பெயரில் வெளிவரவுள்ளது. அதற்காகவே, மேற்படி தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதற்காகவும், வெளியிடுவதற்காகவும்  தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்க் கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்படும் 100 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். வெளிவரும் நூலானது பொதுசன நூலகங்கள், சமுக அமைப்புகளில் மட்டுமல்லாது இணையத்திலும் விற்பனைக்கு விடப்படும். இவ்வாறு ஒண்டாரியோ டிரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கிறது. 1999 இலிருந்து இதுவரையில் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு $500,000ற்கும் அதிகமான உதவித் தொகையினை மேற்படி ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ என்னும் அமைப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உதவித் தொகை பெற்ற அமைப்புகளின் விபரங்களை  ‘ஒண்டாரியோ ட்ரில்லியம் ஃபவுண்டேசன்’ தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. யாரும் சென்று பார்க்கலாம். அதன் இணையத்தள முகவரி: http://www.otf.ca/en/index.asp

Continue Reading →

நா. ரகுநாதன் – சில நினைவுக் குறிப்புகள்

[ நா.ரகுநாதன் வெங்கட் சாமிநாதனுக்கு எழுதிய கடிதங்கள – இங்கே ]

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு முதலில் தெரியவந்தது விக்னேஸ்வரா வா, ரசிகனா என்பது இப்போது நினைவுகொண்டு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக ரசிகன் தான் என்று நினைக்கிறேன். 1957 லிருந்து 1966 வரை தில்லியில் கரோல் பாகில் அடிக்கடி தங்கும் அறையையும் சாப்பிடும்  ஹோட்டலையும் மாற்றிக்கொண்டு வாழவேண்டி வந்த காலத்தில் ஒரு சௌகரியமும் இருந்தது.  எல்லாவற்றிற்கும் எங்கு போனாலும் குறுக்கே போகும் ஒரு ரோடு உண்டு ஒரிஜினல் ரோடிலிருந்து ராமானுஜம் மெஸ்ஸைத் தாண்டி நான் இலவசமாக டைம் ந்யூஸ்வீக் பத்திரிகைகளை அவை வந்த மாலையே எடுத்துச் சென்று, படித்துத் திரும்ப மறு நாள் மாலை கொடுக்கச் செல்லும்  ராய் புக் செண்டர் வரை செல்லும் ரோடு அது. வழியில் ஒரு இடத்தில் இடது பக்கம் திரும்பினால் நாயர் மெஸ் வலது பக்கம் திரும்பினால் வைத்தியநாத அய்யர் மெஸ். இவையெல்லாம் இன்று மறைந்து விட்ட புராதன சரித்திரச் சின்னங்கள். அந்த ரோடில் 1962-ல் ஒரு நாள் மாலை ஒரு பஞ்சாபி கடையில் வாங்கியது தான் ரசிகன் கதைகள் – நா ரகுநாதன் என் நினைவில் இது தான் முதல் அறிமுகம். பின்னர் சில வருடங்கள் கழிந்து ரசிகன் நாடகங்கள் – நா ரகுநாதன். 1965-ல் வெளிவந்தது.  அது பின்னர் எழுத்து பத்திரிகையிலும், தினமணி, சுதேசமித்திரன் போன்ற தமிழ்ப் பத்திரிகைகளிலும் மெயில், ஹிந்து, ஸ்வராஜ்யா போன்ற பத்திரிகைகளிலும் மதிப்புரைகளில் கண்டு கொள்ளப் பட்டுள்ளன என்று ரசிகன் நாடகங்கள் புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

Continue Reading →

ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு

ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்புஇலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’ விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு “மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு” விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

Continue Reading →

நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும்  காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல்துறை, சம்பந்தப்பட்டவர்களை கூண்டிலேற்றி நீதத்தை நிலைநாட்டுகிறது. இது உலகளாவிய ரீதியில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு.

Continue Reading →