அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்!

தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ரஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.  அடக்கம் மிகுந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம்  மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும்  நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

Continue Reading →

உலக நெறியான மனித நேயம்

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது ‘மனித உலக வாழ்க்கை இயல்’, ‘மனித இனநலக் கோட்பாடு’, ‘மனிதப் பொதுமைநல இயல்’, ‘மனித இனப் பொதுச்சமய அமைதி’, ‘மனித இன இயற் பண்பாய்வுத் துறை’ என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள   அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.

Continue Reading →