ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு

ஈழத்து மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்புஇலங்கையின் தமிழ் இலக்கியத் துறை இன்று வரை சமூக நலன் சார்ந்ததாக, மக்கள் வாழ்வோடு இணைந்ததாக இருப்பதற்குக் அடிப்படைக் காரணம் முற்போக்குக் கருத்துகள் பூவோடு மணம் போல, எமது வாழ்வின் அங்கம் ஆகிவிட்டதே காரணம் எனலாம். கே.கணேஸ் முதற்கொண்டு இன்றைய எழுத்தாளர்கள் வரையான பெருந்தொகையான முற்போக்குக் கருத்துக் கொண்ட எழுத்தாளர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை மறந்துவிட முடியாது. இன்று காலம் அவர்களில் பலரை எம் மத்தியில் இல்லாது மறைந்துவிடச் செய்துவிட்டது. இருந்தபோதும் அந்த மூத்த எழுத்தாளர்களில் ஒரு சிலர் எம்மிடையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முதுமையின் தாக்கம் அவர்களின் உடலை வலுக்குன்றச் செய்துவிட்டபோதும் அவர்களில் சிலர் இன்றும் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அவர்களைக் கெளரவிக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’ விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு 30.06.2013 மாலை 5 மணிக்கு “மூத்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கான கெளரவிப்பு” விழா கொழும்பு தமிழ் சங்க சஙகரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் என்ற குறிப்புடன் அழைப்பிதழ் கிட்டியுள்ளது. கூட்டத்திற்கு செல்வி திருச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

Continue Reading →