தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது “கடலுக்கு அப்பால்’, “புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!
திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)
பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்
உரை : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.
நாள் : 15-06-2013, மாலை 5 மணி
இடம் : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.