நேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும் குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை. தண்ணுமை வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.
“முடிவில்: நான் ஒரு வைத்தியராகப் பல பயிற்சிகள் பெற்று 40 ஆண்டுகள் கடமையாற்றி இளைப்பாறியது என் பாக்கியமே. எனவே இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போல எங்கள் வைத்தியத் துறை தொடர்ந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் விருத்தியடைய நான் மனதார வாழ்த்துகிறேன்” – வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா
வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா அவர்கள் எழுதிய “20 ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு” என்ற கட்டுரையை “பிரித்தானியாவின் தமிழ் பெண் எழுத்தாளர்கள்” என்ற எனது தொகுப்பிற்காக பதிவு செய்துகொண்டிருந்தவேளை, அவரின் பிரிவுச் செய்தி எழுத்தாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தபோது என் கண்கள் நனைந்;து வேதனையாகியது. யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் பாடசாலையில் தனது கல்வியை மேற்கொண்ட வைத்தியர் சீதாதேவி மகாதேவா 1998 இல் லண்டனில் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியராகத் திகழ்ந்தவர். குழந்தை வைத்தியம், மனநோய்ச்சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியசேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற திருமதி சீதாதேவி மகாதேவா பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் 27 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இலங்கையிலும் சேவையாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.