நாவல்: வேர் மறந்த தளிர்கள் (14, 16, 17, 18, 19) –

 15 மகன் திரும்பல  
 
வே.ம.அருச்சுணன் – மலேசியா “நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”         

 “பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது  சமை…..அம்பிகை  பசி வயிற்றைக்  கிள்ளுது…..!” சமையலில்  தனக்கு  இதுவரையில் எதுவும்  தெரியாது  என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட  தினகரன்  மனைவியின்  முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
 
“என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி  நேரத்திலே  உங்களுக்குப்  பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை  சில நிமிடத்தில் தேநீர்  கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.    
 
இரவு மணி  ஏழு. இன்னும்  பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை  சமையல்  வேலைகளில்  மும்முரம்  காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில்  வேலைக்குச் சென்ற  மகன்  இன்னும்  இல்லம்  திரும்பாமல்  இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.
 

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 15

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை அந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள்.  வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த  அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு  வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான்.  அன்று விசேடமான வேலை நாள்.  பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான்.  சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக  உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.

Continue Reading →

பாரிஸ்: கலை விமர்சகர் – மொழிபெயர்ப்பாளர் – கவிஞர் இந்திரனுடன் ஒரு மாலைநேரச் சந்திப்பு..!

கலை விமர்சகர் - மொழிபெயர்ப்பாளர் - கவிஞர் இந்திரனுடன் ஒரு மாலைநேரச் சந்திப்பு..!கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார். நேற்று மாலை (07 – 06 – 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் – ஊடகவியலாளர்கள் – இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது. பாரிஸ் மாநகரில் ”ஸ்ராலின்கிராட் மெற்றோ” நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ”சமரா கோணர் ” உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் – கவிஞர் தா. பாலகணேசன் – திருமதி பாலகணேசன் – கவிஞர் க. வாசுதேவன் – ”தமிழமுதம்” வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் – எஸ். குமாரதாஸ் நேசன் – இ. குலம் – மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: “புலம்பெயர் இலக்கிய’ முன்னோடி ப.சிங்காரம்!.

எழுத்தாளர் ப.சிங்காரம்தமிழ்ச் சூழலில் கவனிக்கப்பட்ட படைப்பாளிகளைவிட கவனிக்காமல்விட்ட படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகமென்பது பலரும் அறிந்ததுதான். ஓர் எழுத்தாளரைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து, அவருடைய படைப்புகளை அங்கீகரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் சில சிரத்தையானப் படைப்புகளை எதிர்பார்க்க முடியும். அந்த அங்கீகாரம் மேலும் எழுதவேண்டும் என்ற உத்வேகத்தை அவருக்குக் கொடுக்கும். காலம் கடந்து ஒருவரின் சாதனைகளைப் பாராட்டுவதும், விழா எடுப்பதும் தமிழ்ச்சூழல் கண்டிராத ஒன்றல்ல. அந்த வகையில், நிகழ்காலம் மறந்த ஓர் எழுத்தாளர்தான் ப.சிங்காரம். தான் எழுதிய இரு நாவல்களுக்காக எந்தவித அங்கீகாரமும் கோராத மகத்தான மனிதர். இவர் எழுதியது “கடலுக்கு அப்பால்’, “புயலிலே ஒரு தோணி’ ஆகிய இரண்டு நாவல்கள் மட்டுமே!

Continue Reading →

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013

தலைமை : அரிமா உதயசங்கர் ( தலைவர், ம.அ.சங்கம்)
பரிசளிப்பவர்: சுதாமா கோபாலகிருஷ்ணன்
உரை     : சுப்ரபாரதிமணியன், அஜயன் பாலா, ஈழவாணி, சி.ரவி.
நாள்      : 15-06-2013, மாலை 5 மணி
இடம்     : மத்திய அரிமா சங்கம்,ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர்.

Continue Reading →

பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச்சார்பின்மைக்கு இணக்கமான நாவல்

பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்சுப்ரபாரதிமணியன்சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த  இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 20: மறக்க முடியாத ‘ஈழநாடு’ மாணவர் மலர்….

– அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை. –

மறக்க முடியாத 'ஈழநாடு' மாணவர் மலர்....

என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகைக்கும் , குறிப்பாக அதன் ‘மாணவர் மலர்’ பகுதிக்கும் முக்கியத்துவமுண்டு. அப்பொழுது நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு மாணவர் மலரில் ‘தீபாவளி இனித்தது’ என்றொரு கட்டுரைப் போட்டியினை உயர்தர மாணவர்களுக்காக அறிவித்திருந்தார்கள். அதற்கு நானுமொரு கட்டுரையினை …’தீபாவளி இனித்தது’ என்னும் தலைப்பில் அனுப்பினேன். அப்போட்டியில் தெரிவான கட்டுரை கண மகேஸ்வரனின் கட்டுரை. அவர் அப்பொழுது உயர்தர மாணவராகப் படித்துக்கொண்டிருந்தார். எனது கட்டுரை பிரசுரமாகவில்லையென்றாலும், வவுனியா மகா வித்தியாலயத்து ஆறாம் வகுப்பு மாணவன் கிரிதரனின் கட்டுரை நன்றாக இருந்தது என்னும் அர்த்தத்தில் குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. அந்த வயதில் அது எனக்கு மிகவும் ஊக்கத்தைத் தந்தது. அதன் பின்னர் சுதந்திரனுக்குப் பொங்கல் கவிதையொன்றினை எனது ஏழாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் அனுப்பினேன். அது தான் முதன் முதலாகப் பத்திரிகையொன்றில் வெளியான எனது கவிதை. இதன் பின்னர் அவ்வப்போது ஈழநாடு மாணவர் மலருக்குக் கவிதைகள், கட்டுரைகள் அனுப்பியிருக்கிறென். அவற்றையும் ஈழநாடு மாணவர் மலர் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்தியிருந்தது. பீன்னர் எனது பதின்ம வயதில் எனது சிறுகதைகள் நான்கு ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியிருந்தன. கட்டுரைகள் சிலவும் ,’நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’, மற்றும் ‘பழைமையின் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதன் அவசியம்’ பற்றி எழுதியவை, ஈழநாடு வாரமலரில் பிரசுரமாகியுள்ளன. அப்பொழுது ஈழநாடு வாரமலரின் ஆசிரியராகப் பெருமாள் என்பவர் இருந்தார். அவரை நான் ஒருமுறையும் சந்தித்ததில்லை. ஆனால் அவர்தான் என் சிறுகதைகளைப் பிரசுரித்து ஊக்குவித்தவர். அண்மையில் எழுத்தாளர் செங்கை ஆழியானின் ‘ஈழநாடு சிறுகதைகள்’ பற்றிய ஆய்வுக் கட்டுரையினை ‘மல்லிகை ஆண்டு மலரொன்றில் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் அவர் என்னை ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறைப் படைப்பாளிகளிக்லொருவராகக் குறிப்பிட்டு, எனது ‘மணல்வீடுகள்’ என்னும் சிறுகதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஈழநாடு பத்திரிகையின் பங்களிப்பை இன்னும் நினைவு வைத்து இதுபோன்றதொரு கட்டுரையினை எழுதிய செங்கை ஆழியான் பாராட்டுக்குரியவர். இது போல் ‘இலங்கையில் வெளியான ஏனைய பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியான புனைகதைகள் பற்றியும் (சிறுகதை, நாவல் போன்ற) யாராவது எழுதினால் நல்லது. அவை பயனுள்ள ஆவணப் பதிவுகளாகவிருக்கும்.

Continue Reading →

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்!

தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ரஎப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்.  அடக்கம் மிகுந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம்  மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும்  நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

Continue Reading →

உலக நெறியான மனித நேயம்

- நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் ஆறறிவுள்ள மனிதனுக்கு மிக முக்கியமாக வேண்டப்படுவது மனிதனால் வகுக்கப்பட்ட மனித நேயமாகும். மனித நேயம் என்பது ‘மனித உலக வாழ்க்கை இயல்’, ‘மனித இனநலக் கோட்பாடு’, ‘மனிதப் பொதுமைநல இயல்’, ‘மனித இனப் பொதுச்சமய அமைதி’, ‘மனித இன இயற் பண்பாய்வுத் துறை’ என்றும் பொருள்படும். மனித நேயத்துக்குரிய ஒழுக்கத் தத்துவ முறைகளை மனிதன் சிந்திப்பதாலும், வரலாறுகளைப் படிப்பதாலும், தன்னிடமுள்ள   அனுபவத்தாலும் பெற்றுக் கொள்கின்றான். இதைக் கருத்திற் கொண்ட ஆன்றோரும், சான்றோரும் அன்பு, பண்பு, சத்தியம், உண்மை, தர்மம், நேர்மை போன்ற அறநெறிகளைத் தமது இலக்கியங்களிலும், நீதிநெறி நூல்களிலும், சமய நூல்களிலும் எழுதி வருகின்றனர். மக்கள் இவற்றைப் படித்துத் தாமும் இவ்வறநெறிகளை உள்வாங்கித் தமது குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கின்றனர். இதனால் மக்களும் மனித நேயமுள்ளவர்களாகி அவ்வழி நின்று செயல்படுவதனால் மக்கள் மத்தியில் ஒரு புத்துணர்வைக் காண்கின்றனர். மனித நேயம் மக்கள் மத்தியில் மிளிர்வதால் அவர்கள் மக்களையும், மற்றைய ஐயறிவுடைய உயிரினங்களையும் கட்டிக்காப்பாற்றிப் பேணி வருவதும் தெளிவாகின்றது.

Continue Reading →

தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஒரு விமர்சன அறிமுகம்……

1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம்
எழுத்தாளர் தேவகாந்தன்.முனைவர் நா.சுப்பிரமணியன் நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன் பிரதான நோக்கம் அல்ல. சமூகத்தின் அசைவியக்கத்தின் பன்முகப் பரிமாணங்களையும் இனங்காட்டும் வகையில் குறிப்பிட்ட ஒரு காலகட்ட வரலாற்றுக் காட்சியைத் துல்லியமாக எழுத்தில் வடிப்பதே நாவலாசிரியனொருவனின் முதன்மை நோக்கம் ஆகும். இந்த நோக்கினூடன செயற்பாங்கின் ஊடாக ஒரு கதை முளை கொண்டு வளர்ந்து செல்லும். இக்கதை குறித்த ஒரு சில மாந்தரை மையப் படுத்தியதாகவும் அமையலாம் அல்லது சமூகத்தின் பன்முக உணர்வுத்தளங்களையும் இனங்காட்டும் வகையில் பல்வேறு மாந்தர்களின் அநுபவ நிலைகளையும் பதிவு செய்யும் வகையில் விரிந்து பல்வேறு கிளைப்பட்டு வளர்ந்தும் செல்லலாம். இவ்வாறு விரிந்தும் வளர்ந்தும் செல்லும் கதையம்சங்களினூடாக ஈழத்துத் தமிழர் சமூகத்தின் ஒரு காலகட்ட – கடந்த ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலகட்ட – வரலாற்றுக் காட்சியை நமது தரிசனத்துக்கு இட்டு வரும் செயற்பாங்காக அமைந்த முக்கிய படைபாக்கம் தேவகாந்தன் அவர்களின் கனவுச்சிறை என்ற இந்த மகாநாவல்.

Continue Reading →