ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை

ரகசியம் பேசுதல் – சுனேத்ரா ராஜகருணாநாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நாவலுக்கான முன்னுரை[ ரிஷான் ஷெரீப்பின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியான சுனேத்ரா ராஜகருணாயகவின் ‘அம்மாவின் ரகசியம்’ நூலுக்கு எழுத்தாளர் அம்பை எழுதிய முன்னுரை. இதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ரிஷான் ஷெரீப். – பதிவுகள்]

பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே  கிடந்து மக்கிப்போகின்றன கல்லாக கனத்தபடி. அபூர்வமாகச் சில சமயம் அந்த ரகசியங்கள் பூப்போல மேலே மிதந்து வந்து இளைப்பாறலைத் தரும் வாய்ப்புகளை வாழ்க்கை ஏற்படுத்துகிறது. சில சமயம் ரகசியங்கள் மூர்க்கத்தனமாக உடைபடும் அபாயங்கள் நேர்கின்றன. சில சமயம் அவற்றைப் பேசியே ஆகவேண்டிய நிர்பந்தத்தை சிலர் எதிர்கொள்ளும்போது நூலிழை பிரிவதுபோல் மெல்லமெல்ல அவை பிரியலாம். அல்லது சலனமற்ற குளத்தில் எறிந்த கல்லைப் போல் அலைகளை ஏற்படுத்தலாம். அபூர்வமாக அவை அடுத்தவரின் மனத்தை இளக்கி உறவின் ஒரு மூடப்பட்ட சன்னலைத் திறக்கலாம். இந்தக் குறு நாவலில் வரும் முத்துலதாவுக்கும் ஒரு ரகசியம் இருக்கிறது. அது எப்படி உருவாகியது, அந்த ரகசியத்தை அவள் எப்படித் தாங்கினாள்,  ஏன்,  எப்படி அதை வெளியிடத் தீர்மானித்தாள் போன்றவற்றின் ஊடே கதை தன் பாதையை அமைத்துக்கொள்கிறது.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: குழந்தையுள்ளம் படைத்த அகஸ்தியரின் தர்மாவேசம்

எழுத்தாளர் முருகபூபதி‘அன்புள்ள   முருகபூபதிக்கு..… கடந்தவாரம்  லண்டனிலிருக்கும்  மகனிடம் வந்திருக்கிறோம்.   பேரக்குழந்தையின்   பிரசவம்   முடிந்தது.   ஆவன   செய்தபின் பிரான்ஸ்   திரும்புவோம்.   பெண்   குழந்தை   கிடைத்திருக்கிறது.  வந்த  இடத்தில் உடல்நலம்   பாதிக்காதவகையில்    இலக்கியக் கூட்டங்களுக்கும்   பேட்டிகளுக்கும் ஒழுங்குசெய்துள்ளார்கள்.    பின்   விபரம்  அறிவிப்பேன். வீரகேசரியில் உங்கள் குறிப்பு பார்த்தேன்.  நன்றி.’ – இது  நண்பர் அகஸ்தியர் 22-08-1995   இல் எனக்கு எழுதிய கடிதம். அகஸ்தியர்   எனக்கு  எழுதிய  இறுதிக்கடிதம்  இதுதான்  என்பதை 09-12-1995  ஆம் திகதி   இரவு   நண்பர்   பாரிஸ்   ஈழநாடு   குகநாதன்   தொலைபேசியில்  அகஸ்தியரின்   மறைவுச்செய்தி   சொல்லும்   வரையில்  நான்   தீர்மானிக்கவில்லை.  அகஸ்தியர்  முதல்நாள்   பாரிஸ்  நகரத்தையே  ஸ்தம்பிக்கவைத்த  வேலைநிறுத்த   காலப்பகுதியில்   டிசம்பர்  8 ஆம் திகதி   மறைந்தார். அகஸ்தியரின்   புதல்வி   ஜெகனியுடன்   தொலைபேசியில்  தொடர்புகொண்டு   ஆறுதல்கூறி    நானும்   ஆறுதல்பெற்றேன். நீண்ட    காலமாக    நாம்   புலம்பெயர்ந்திருந்தாலும்    பேசிக்கொண்டது   கடிதங்கள் வாயிலாகத்தான்.    அதற்கும்    முற்றுப்புள்ளிவைத்துவிட்டு   விடைபெற்றார். ஈழத்து     இலக்கிய    உலகில்   மூத்த தலைமுறையைச்சேர்ந்தவராயினும் இளம்தலைமுறையினருடன்    ஒரு   குழந்தையைப்போன்று    வெள்ளைச்சிரிப்புடன் (சிரிப்பிலும்   பலவகையுண்டு)   மனந்திறந்து   பேசும்   இயல்புள்ளவர்.

Continue Reading →

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம்.   வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன.  அம் மக்களின் முகங்களில் நிச்சயமற்ற தன்மையின் சாயல் படிந்திருந்தது. இடைக்கிடையே, உடைந்துபோன மதில்களில் சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் நெருங்கி வரும் தேர்தலை எமக்கு ஞாபகமூட்டுகின்றன. அவை அநேகமாக ஆளும்கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளே.  கிளிநொச்சியானது நீண்டகாலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பிரதேசமாகும். இப்பொழுது நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலானது, இங்குள்ள சிலர் 30 வருட காலத்துக்குப் பின்னர் முகம் கொடுக்கப் போகும் முதல் தேர்தலாகும். எனினும் அவர்கள் அதனை மிகப் பெறுமதியான ஒன்றாகக் கருதுவதில்லை. தேர்தல் எனப்படுவது, ஜனநாயக ஆட்சி முறையின் முதல் இலட்சணமாகும். எனினும் எமது பயண இலக்குகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் இன்னும் சிவில் ஆட்சி முறையிலிருந்து தூரப்படுத்தப்பட்ட, இராணுவ ஆட்சியின் கீழ், துயருறும் வாழ்க்கையை நடத்திச் செல்லும், கடந்த கால குரூர யுத்தத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்தும்படியாக இருண்டுபோன பிரதேசங்களாகும்.

Continue Reading →

இலவச பயிற்சிப் பட்டறை 2013 (Workshop – 2013)

உயர்தர பாடசாலை மாணவர்களுக்கான(தரம் 8 முதல் 12 வரை) பயிற்சிப்பட்டறையை (WORKSHOP – 2013) மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா இலவசமாக நடத்த…

Continue Reading →

ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருது

ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் நாவலுக்குக் கரிகாலன் விருதுதஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ”கரிகாலன் விருது” இவ்வாண்டு சிங்கை எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கருக்குக் கிடைத்துள்ளது. 2012ஆம் ஆணடு முதல் பதிப்பாக வெளியான நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து மொத்தம் 15 நூல்கள் வந்ததாகவும் அவற்றில் திருமதி ஜெயந்தி சங்கர் எழுதிய “திரிந்தலையும் திணைகள்” எனும் நாவல் விருதுக்குரியதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் உதயசூரியன் தெரிவித்தார். அதேபோல் மலேசியாவில் 2012ஆம் ஆண்டுக்கான விருது திருவாட்டி சுந்தராம்பாள் எழுதிய “பொன்கூண்டு” சிறுகதைத் தொகுப்புக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய குழு விருதுக்குரிய நூல்களைத் தெரிவு செய்தது. அவர்களின் பரிந்துரை அடங்கிய அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம். நூறு இந்தியத் திரைப்படங்கள் திரையிடல் – பகுதி 3

33. உத்தமபுத்திரன் - டி.ஆர். சுந்தரம்நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும்.  இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.

தொடங்கும் நாள்: 30-11-2013, சனிக்கிழமை.
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர், சென்னை.
தினசரி நேரம்: மாலை 6 மணிக்கு.

Continue Reading →

தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)

தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)அன்புடையீர், தமிழ் இலெமுரியா கார்த்திகை  2044 ( 15 நவம்பர்  2013) இதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். தாங்கள் “தமிழ் இலெமுரியா” இணையத் தளத்தில்  இலவசமாகப் பதிவு செய்து கொண்டு முந்தைய இதழ்களையும் வாசித்துப் பயன் பெற வேண்டுகின்றோம். தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர். தங்களின் ஆதரவிற்கு நன்றி,  வாசித்து மகிழ்க!  www.tamillemuriya.com நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.

Continue Reading →

திரும்பிப் பார்க்கின்றேன்: சிவாஜி முதல் சிவாஜி வரையில் எழுதி ஓய்ந்த சுஜாதா

சுஜாதாஎழுத்தாளர் முருகபூபதிஇலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த   போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான். எனினும் அவரது   பாலம்   என்ற   சிறுகதை மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது. நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  இருந்ததனாலோ   என்னவோ   பின்னர் அவற்றிலிருந்த    ஆர்வம்   குறைந்துவிட்டது. ஒருநாள்   இந்திராபார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு   சுஜாதா   எழுதியிருந்த   முன்னுரை  என்னைப்பெரிதும்   கவர்ந்தது.   அந்நாவலின்  நாயகன்   கஸ்தூரியின்   தோல்வியை   ஜூலியசீஸரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பானது   என    சுஜாதா  எழுதியிருந்தார். பின்னர்  மீண்டும்   அவரது எழுத்துக்கள்    மீது   ஆர்வம்   தோன்றியது.   சுஜாதாவின்    பாணியில்    இலங்கையில்   எழுதிய  ஒரு  எழுத்தாளரும்  எனது  இனிய   நண்பர்தான்.    அவர்தான்  தெளிவத்தை  ஜோசப்.     சுஜாதா   சங்கர் –  கணேஷ்   என்ற  இரட்டையர்களை  தமது  தொடர்கதைகளில்  துப்பறியும்   நிபுணர்களாக    படைத்திருந்தார்.  தெளிவத்தை  ஜோசப்  ரமேஷ் -ரவிந்திரன்   என்ற  புனைபெயரில்  சில  கதைகளை  சுஜாதாவின்   பாணியில்   எழுதிப்பார்த்தார்.   பிறகு  தொடரவில்லை.  இப்படி  சுஜாதாவின்   பாதிப்புக்குள்ளான    பல எழுத்தாளர்கள்   தமிழகத்திலும்  இலங்கையிலும்  மட்டுமல்ல   அவுஸ்திரேலியாவிலும்     இருக்கிறார்கள்.

Continue Reading →